தனது சிறு வயதிலேயே தந்தை தவறிவிட்டதால், திருமதி.பார்வதியின் இளம் கவலையற்ற வாழ்க்கை ஒரு திடீர் முடிவுக்கு வந்தது. தனது குடும்பத்திற்கு ஒரே ஆதரவாளராக தனது தந்தை திகழ்ந்ததால், அவரது மறைவு பெரும் அளவில் அனைவரையும் பாதித்தது. தனது குடும்பத்தில் திருமதி.பார்வதி இரண்டாம் மூத்த மகளாக இருந்ததால், அவர் தனது அம்மாவிற்கு பண உதவி அளித்து வர அவசியமாக இருந்தது. முக்கியமாக, தனது 6 தம்பி தங்கைகளின் படிப்பு செலவுகளையும் அவர் உதவி வந்தார். திருமதி.பார்வதி எதிர்வரும் கரடு முரடான வாழ்க்கைக்கும் தனது பொறுப்புகளுக்கும் தன்னை வளம்படுத்திக்கொண்டார். அவர் வேகமாகவும் வளர்ந்தார். கல்யாணத்திற்கு முன்பும் சரி பின்பும் சரி அவரால் பல பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள முடிந்ததால், திருமதி.பார்வதி தாம் வசித்து வந்த கிராமத்தில் ஒரு வகையில் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். தனது குடும்பம் மற்றும் மாமியாரின் ஆதரவினால் அவர் சமுக சேவையில் தனது பயணத்தை மேற்கொண்டார். அந்தக் காலத்தில் அவர் தனது கிராமத்தில் வசித்த பிள்ளைகளை கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு அழைதுச் செல்வார். அதுப் போன்ற கொண்டாட்டங்கள் எல்லா பிள்ளைகளுக்கும் மகிழ்ச்சியூட்டியது. |
|
“அக்கம் பக்கத்திலுள்ள பெரிய வீடுகளில் நான் சுத்தம் செய்தல், சலவை செய்தல் போன்ற வீடு வேலைகளை செய்தேன். எனது சகோதரர்களின் படிப்புக்கு நான் ஆதரவாக இருக்க விரும்பினேன்.” |
திருமதி.பார்வதி பிற்காலத்தில் புவன விஸ்டா இந்திய நடவடிக்கை நிர்வாகக் குழுவில் (IAEC ) ஊழியராக சேர்ந்தார். அங்கு அவர் நண்பர்களுடனும் தனது மகளுடனும் தீபாவளி நிகழ்சிகளை ஏற்பாடு செய்ய உதவினார். இதுப் போன்ற நிகழ்சிகளை ஏற்பாடு செய்வது திருமதி.பார்வதிக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த தீபாவளி நிகழ்சிகளில் எப்பொழுதும் 5 மேசைகள் முதியோருக்கும் வசதி குறைந்தோருக்கும் ஒதுக்கப்படும். இவர்களும் வந்து சந்தோஷமாக கலந்துக்கொண்டு பெரிய புன்னகையுடன் வீடு திரும்புவதை திருமதி.பார்வதி நினைவுக்கூருகிறார். அடுத்த நிகழ்ச்சி எப்போது நடக்கும் என்ற ஆர்வத்துடன் அவர்கள் இருப்பது திருமதி.பார்வதிக்கு ஊக்கமாக திகழந்தது. அதன் பின்னர், அவர் கிம் மோவில் இருக்கும் இந்திய நடவடிக்கை நிர்வாகக் குழுவில் (IAEC) ஊழியராக சேர்ந்தார். சமுக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வதோடு திருமதி.பார்வதி தணிக்கையாளராகவும் மூத்த குடிமக்கள் குழுவில் பொருளாளராகவும் பணிப்புரிந்தார். சமுக நிலையத்தில் அவர் பிள்ளைகளுக்குக் கல்வி சுற்றுப்பயணங்களை ஏற்பாடு செய்தார். தனது சமூகத்திலுள்ள வசதி குறைந்த பிள்ளைகளுக்கு உதவ வேண்டுமென்று நினைக்கும் திருமதி.பார்வதி சமூக நிலையங்களில் சின்டா வகுப்புகளைத் தொடங்கினார். கடந்த 10 வருடங்களாக, இந்த வகுப்புகள் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடத்தப்படுகின்றன. திருமதி.பார்வதி இந்த நடவடிக்கையை அதிக உற்சாகத்துடனும் சந்தோஷத்துடனும் எதிர்நோக்குவார். |
|
“என்னை வெளியே பார்க்கும்போதெல்லாம் பெற்றோரும் பிள்ளைகளும் என்னை ஆசிரியர் என்று அழைத்து நான் எப்போது அவர்களுக்காக வகுப்பு ஆரம்பிக்க போகிறேன் என்று கேட்பார்கள்.” |
பிள்ளைகளுடன் பழகுவது திருமதி.பார்வதிக்கு ஒரு தனி சந்தோஷத்தை அளிப்பதால் அவர் பிள்ளைகள் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இருந்தாலும் அவருக்கு முதியவர் மற்றும் வசதி குறைந்தவருக்கும் நேரம் வகுத்து வந்துள்ளார். திருமதி.பார்வதி சுவா சூ காங்கிலுள்ள முதியோர் இல்லத்தில் மற்ற IAEC உறுப்பினர்களுடன் உணவு நிதி உதவி வழங்கி தொண்டுழியம் புரிந்து வந்தார். சிண்டா மூலமாகவும் அவர் வீடு வீடாக சென்று வசதி குறைந்த குடும்பங்களுக்கு உதவியும் ஆதரவும் வழங்கி வந்தார். சமுகத்திற்கு பங்கை ஆற்றுவது திருமதி.பார்வதிக்கு சரியாக படுவதால் அவர் அதில் ஈடுபாடு கொள்கிறார். அவரது குடும்பத்தினரும் அவரை போலவே சமுக சேவையில் ஈடுபாடு காட்டுகின்றனர். திருமதி.பார்வதியின் கணவரும் IAEC-இல் உறுபினராக இருக்கிறார். அவரது மகள் சமுக நிலையங்கள் ஏற்பாடு செய்யும் தீபாவளி நிகழ்ச்சிகள் மற்றும் பிள்ளைகளுக்கான பாட வகுப்புகள் ஆகியவற்றில் உதவி வருகிறார். எனது குடும்பம் தொண்டுழியம் புரிவதில் சந்தோசம் கொள்கிறது, அது எங்களுக்கு மன நிறைவை அளிப்பதோடு நாம் குடும்பத்தோடு நேரம் செலவிடுவதற்கும் சந்தர்ப்பங்களை உண்டாக்கி தருகிறது என்கிறார் திருமதி.பார்வதி. |
|
"இன்றைக்கு கூட, எனது உதவியும் ஆதரவாலும் தான் அவர்களது பிள்ளைகள் படித்து கல்விக்கான உபகாரதைப் பெற முடிந்தது என்று கூறுவர்.” |
சிங்கப்பூர் தனது 50-வது பிறந்தநாளை ஒன்றாக சேர்ந்து கொண்டாட வேண்டும் என்பது திருமதி.பார்வதியின் ஆசை. சிங்கப்பூரில் இந்தியர்கள் அனைவரும் ஒரு சமுதாயமாக ஒற்றுமையுடனும் ஒருவருக்கொருவர் ஆதரவாகவும் திகழ்ந்தால் நமது நாடு பெரிய அளவில் முன்னேற முடியும் என்று நம்புகிறார் திருமதி.பார்வதி. 50 முகங்கள் திருமதி.பார்வதியை சந்தித்து அவருடன் உரையாடியதை எண்ணி பெருமை கொள்கிறது. |