எம்ஜிஆர்(MGR), சிவாஜி கணேசன், அமிதாப் பச்சன், போன்ற பிரபல திரை உலக நட்சத்திரங்களுடன் தோலுக்குத் தோல் நெருக்கமாக ஒன்றாக நின்றதைக் கற்பனை செய்து பார்க்க முடியுமா? இந்தியன் மூவி நியூஸ் ஆசிரியர் SS சர்மா அவர்களுக்கு இது அன்றாட பொறுப்புகளில் ஒன்றாகும். அவர் இந்தப் பிரபலமான பத்திரிக்கையை 40 ஆண்டுகளாக வழி நடத்திச் சென்றார். அலை ஓசை, மலேசியா மலர், சிங்கை சுடர் போன்ற மற்ற சஞ்சிகைகளிலும் தன் முத்திரையைப் பதித்தார். இந்திய நாட்டு சஞ்சிகைகளான குமுதம், ஆனந்த விகடன் பிரபலமாக இருந்த வேளையில், உள்ளூர் எழுத்தாளர்களைக் கொண்டு உள்ளூர் உள்ளடக்கங்களைப் பற்றி வெளியிட்டு வாசகர்களின் மனதைக்கவர்ந்தார் சர்மா. |
SS சர்மா, ஒரு எழுத்தாளராகவும் பத்திரிகை ஆசிரியராகவும் ஏற்கனவே பத்திரிக்கைத் துறையில் நன்கு அறிமுகமானவர். ஆனால் அவர் அதில் திருப்தி அடையவில்லை. அவர் நாடகத் துறையில் தன் திறனை வெளிக்கொணர ஆவலோடு எதிர்பார்த்திருந்தார். நாடகத்துறையில் 1957இல் காலடி எடுத்து வைத்தார். அடுத்த ஆண்டு 85 வயதாகும் சர்மா, சிங்கையில் தமிழ், கலை, கலாச்சாரத்தோடு தாம் வாழ்க்கை கடந்து வந்த பாதையைப் பற்றி உணர்ச்சிகரமாகக்கூறுவதைக் கேளுங்கள். |
|
“பவானி என்பது என்னுடைய முதல் நாடகம்... அது அக்காலத்தில் ஒரு பெரிய சாதனை என்று கூறலாம்.” |
சிங்கப்பூர் நாடக கலை அந்தக் கால கட்டத்தில், ஏற்கனவே துடிப்பாக இருந்தது. குறிப்பாக இந்தியாவில் இருந்து பல நாடகக் குழுக்கள் நாடகங்களை மேடையேற்ற மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் வந்தார்கள். புதிய இந்திய குடியேறிகள், பொழுதுபோக்கிற்கு இந்தியாவை மையக் கருப்பொருளாக கொண்ட நாடகங்களையே ரசித்தார்கள். இளைஞரான SS சர்மா மிகவும் நெருக்கமாகப் இவர்கள் நோக்கத்தைப் பின் தொடர்ந்தாலும் ஏதோ ஒன்று குறைந்ததை உணர்த்தார். அப்போது உள்ளூர் நாடகக் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உதித்தது. தான் ஒரு பார்வையாளராக மட்டும் இல்லாமல் ஏதாவது செய்ய வேண்டும் என்றும் நினைத்தார். |
|
“யாரும் அதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை, அதனால் நாங்களே நாடகங்களை மேடையேற்ற முன்வந்தோம்.” |
SS சர்மா, சிங்கையில் தமிழ் நாடக பாணியை மாற்ற உதவினார். தீவிர பிரச்சினைகளை மையமாக கொண்ட நாடகங்களைத் தவிர்த்து வெறும் பொழுதுபோக்கைக் கருப்பொருளாகக் கொண்ட நாடகங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. காலப்போக்கில் பார்வையாளர்களின் எண்ணிக்கை கூடத் தொடங்கியது. இது அவருக்கு மேலும் பல்வேறு வகையான நாடகங்களை மேடையேற்ற ஊக்குவிப்பாக அமைந்தது. அவருடைய இந்தக் கலைப் பயணத்தில் சுமார் 73 நாடகங்கள் அவர் கைவண்ணத்தில் உருவாயின. மேலாண்மை, நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என்று பல கோணங்களில் தன் திறனை வெளிக் கொணர்ந்தார். அவருக்குத் திருப்பு முனையாக அமைந்தது 'கபுக்கா' என்ற மர்ம நாடகமும் 'விண்வெளி வீரன்' என்ற விஞ்ஞான கற்பனை நாடகமும் ஆகும்.. மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு முதல் முறையாக உள் நாட்டிலிருந்து சென்றது அவரின் நாடகங்களும் அவற்றின் கலைஞர்களும் தான். |
|
“எங்களுடைய நாடகங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.” |
கைத்தொலை பேசிகள் அல்லது இணையம் இல்லாத ஒரு காலக் கட்டத்தில் இவ்வகையான வளங்களை ஒன்றாகச் சேர்ப்பது என்பது கற்பனை செய்து பார்க்க முடியாத ஒன்று. கை தொலை பேசிகள் இல்லை, இணையம் இல்லை, நிதி பற்றாக்குறை, ஒத்திகைக்கு இட வசதி இல்லை, மற்றும் போக்குவரத்து வசதி இல்லாத ஒரு காலக் கட்டத்தில் இவ்வகையான வளங்களை ஒன்றாகச் சேர்ப்பது என்பது கற்பனை செய்து பார்க்க முடியாத ஒன்று. ஆனால் மன உறுதியுடன் SS சர்மா, இந்தத் தடைகளை கடக்கக் வழிமுறைகளைக் கண்டறிந்தார். அவரது விருப்பத்திற்குச் சக கலைஞர்களும் ஒத்துழைப்பு கொடுத்தனர். தங்கள் முழு நேர வேலையையும் கவனித்துக் கொண்டு தங்கள் நேரத்தைக் கலைக்காக தாராளமாகச் செலவழித்தார்கள். மேலும் நடிகர்களின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும் சொந்தங்களிடமிருந்தும் நல்லாதரவைச் சர்மா பெற்றார். |
|
“நாங்கள் எங்களது வேலைக்கும் சரி நாடகங்களுக்கும் சரி நேரத்தை வகுத்துக்கொண்டோம்.” |
தாம் தயாரித்த கலைப் படைப்புகளைக் கொண்டு தனிப்பட்ட முறையில் சமுகத்திற்குப் பதிலுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படத் தொடங்கினார், SS சர்மா. சமூகம் மற்றும் கலாச்சார நிறுவனங்களான நற்பணி பேரவை மற்றும் சமூக மன்றங்களிலும் சேவையாற்றினார். அவர் சர்வதேச மாநாடுகளில் ஆய்வுக்கட்டுரைகள் எழுதி படைப்பதற்கு நேரத்தை ஒதுக்கினார். ஆன்மீகத் தலைப்புகளில் ஆய்வு செய்து, அவற்றினைப் படைப்பது; புத்தகங்கள் எழுதி வெளியிடுவது என இன்றும் நேரத்தைப் பயனுள்ள வழிகளில் செலவிடுகிறார். ஆனால் சர்மா தனது மிகப்பெரிய பங்களிப்பு என்றால் தமிழ் நாடகத்துறை தான் என்று ஆணித்தரமாகக்கூறுகிறார். இன்றைய இளைஞர்கள் அடிப்படை அடித்தளமாகக் அடித்தளமாக கொண்டு மேலும் முன்னேற வேண்டும் என்பது SS சர்மாவின் எதிர்பார்ப்பு ஆகும். |
|
“வேற்று மொழிக்காரர்கள் நமது கலையை வளர்க்க முடியாது, நம்மால்தான் அது முடியும்.” |