S ராஜகோபால்

பலரின் தொழில்களை நிர்ணயிப்பது அவர்களின் வாழ்கை அனுபவங்களாகும். முன்னாள் காவலரான திரு ராஜகோபாலும் அவர்களுள் ஒருவர். அவரது இளமைப் பருவத்தில் ஹொக் லீ பேருந்து கலவரத்தின் போது அங்கு நின்றுகொன்றிருந்த ஒரு கலவரக்காரரால் அவர் உதைக்கப்பட்டார். அப்பொழுதுதான் தான் ஒரு கவலராக வேண்டும் என்று அவர் முடிவெடுத்தார்.

ஒரு நாட்டில் சட்ட ஒழுங்கு இல்லாவிட்டால் என்ன நிலைக்காகும் என்று இளம் வயதிலேயே கண்ட அவரின் கவலராகும் ஆசை திரு லீ குவான் யூவின் உரை ஒன்றை கேட்டதும் மேலும் வலுவடைந்தது. சிங்கபூருக்கும் இங்கு வாழ்பவர்களுக்கும் தன்னால் உதவ முடியும் என்று நம்பிக்கை கொண்டார். பள்ளியில் சீருடை குழுக்களில் பங்கேற்றார். நாட்டுக்கு பங்காற்றுவதை பெரிதும் விரும்பினார். பின்னர் காவல் துறையில் 36 வருடங்கள் பணியாற்றி, காவல்துறை கண்காணிப்பாளராக ஒய்வு பெற்றார். சிங்கப்பூரின் ஏற்ற தாழ்வுகளை நன்கு கண்டவர் அவர். ஒய்வு பெற்ற பின்பும், சிங்கப்பூரின் பாதுகாப்பை கட்டிக்காக்க, ஒரு பாதுகாப்பு நிறுவனத்தை நிறுவினார். காவல் பணிக்கான அவரது ஆசை என்றும் ஓய்வதில்லை.

"காவலரானால் யாரும் தன் மகளை திருமணம் செய்து தரமாட்டார்."

காவலராக இருந்தபொது தான் பெற்ற அறிவையும் அனுபவத்தையும் ஓய்வு பெற்ற பின்பும் தொண்டூழியத்திற்கு பயன்படுத்தினார். சிராங்கூன் வியாபாரிகள் சங்கத்திற்கு அவர் செயலாளரானார். அப்போது அரசாங்கம் லிட்டில் இந்திய, கேலாங், சைனாடவுன் முதலிய இடங்களில் கலாசார கூடங்கள் அமைக்க முற்பட்டது. இதைக் கருத்தில்கொண்டு சிராங்கூன் வியாபாரிகள் சங்கம் கலைக்கப்பட்டு, லிஷாவாக (LISHA) உருவெடுத்தது.LISHAவை தோற்றுவித்தவர்களுள் திரு ராஜகோபாலும் ஒருவர். 26 ஆண்டுகளாக அவர் அதன் துணைத் தலைவராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். LISHAவையும் அரசாங்கத்தையும் இணைப்பதே அவரது முக்கிய பொறுப்பாகும். அவர் இந்திய அமைப்புகளுடனும் வியாபாரிகளுடனும் அணுக்கமாக இருப்பது அவர் பணியை சிறப்பாக செய்ய வழி வகுக்கின்றது.

அண்மையில் நடந்த லிட்டில் இந்தியா கலவரத்தை நேரடியாக கண்ட திரு ராஜகோபால் LISHA வை பிரதிநிதித்து விசாரணைக் குழுவிற்க்கு சாட்சியளித்தார். காவல்துறையின் உள்துறை பாதுகாப்பு பிரிவில் இருந்த பொது 4000 பேர் கலந்து கொண்ட சமூக நிகழ்வுகளை கையாண்டுள்ளார். இதன் அனுபவத்தைக் கருத்தில் கொண்டு, ஒலிபெருக்கி ஒன்று தன்வசம் இருந்திருந்தால், தன்னால் கலவக்காரர்களை தடுத்திருக்க முடியும் என்று நம்புகிறார். பயிற்சி பெற்ற காவலர்கள், கலவரத்தில் ஈடுபட்ட பலருக்கும் தெரிந்திருந்த மொழியான தமிழில் அவர்களிடம் எடுத்துரைத்திருந்தால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவந்து இருந்திருக்கலாம் என்று அவர் நம்புகிறார். அத்தோடு எதிர்காலத்தில் இம்மாதிரி சம்பவங்களில் காவலர்களும், சமூக மற்றும் அடித்தளத் தலைவர்களும் ஒருங்கிணைந்து ஈடுபடுவது அவசியம் என்பதையும் அவர் சுட்டினார்.

"பெண்கள் வீட்டில் அடைந்து கிடக்காமல் இன்று முன்னமையில் வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்."

குட்டி இந்தியாவில் வர்த்தக நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேடுக்கையில், தமிழ் மொழி கலாச்சார சங்கத்தில் சேரவும் அழைக்கப்பட்டார். உடனே சங்க உறுப்பினர்களுடன் சேர்ந்து பல நடவடிக்கைகள் மூலம் தமிழ் மொழியை ஊக்குவிக்க முற்பட்டார்.

காவலராக வெளினோக்கும் சங்க உருப்பினராக உள்நோக்கும் பெற்றிருந்த திரு ராஜகோபால், இந்திய சமூகம் திருமணம் மற்றும் விஷேஷங்கள் நடந்த மலிவான இடவசதி இல்லாதிருப்பதாக ஆழ்மையாக கருதினார். மேலும் ஆலயங்கள் தங்கள் வளாகங்களில் பகல் பொழுதில் ஆலோசனை அமர்வுகள், யோக வகுப்புகள், செறிவூட்டல் வகுப்புகள் பொன்றவை நடந்த சமூக அமைப்புகளுக்கு திறந்து விட வேண்டும் என விரும்புகிறார். ஓய்வு பெற்ற கவலர் சங்கத்தில், திரு ராஜகோபால் சமீபம் வரை செயலாற்றி வந்தார். சங்கத்தில் பல இந்திய ஓய்வு பெற்றவர்கள் இருப்பதால், அவர்கள் வழக்கமாக கூடி, தைபூசம், தீமிதி பொன்ற விழாக்களில் ஒழிங்கை காக்க தங்கள் நிபுணத்துவத்தை அளிக்கிறார்கள்.

"நான் கயவர்களுடன் பழகுகிறேன். கயவர்களையும் தீயவர்களையும் வாழ்நாள் முழுதும் சந்திக்கிறேன்! நான் எப்படி நல்லவனாக இருக்க முடியும்?"

Aசிங்கை 50பதை நாம் கொண்ட்டாடும் தருணத்தில், திரு ராஜகோபால் சமுகத்திற்கு அதுவும் இந்திய பெற்றோர்களுக்கு,தங்கள் குழந்தைகளின் கல்விக்கு முதன்மைத்துவம் தருமாறும், இயன்றவரை அவர்களுக்கு தகுந்த அனுபவங்களை தந்து உலகலாவிய வேலையணிக்கு தயார் செய்யுமாறும் ஆலோசணை கூறுகிறார். மேலும் குடும்பங்களை அதுவும் இளைங்கர்களை தங்கள் மதத்தை நன்கு புரிந்துகொன்டு அதை அடித்தளமாகக் கொண்டு, குற்றச்செயல்களில் இருந்து விலகி இருக்குமாறு தூண்டுகிறார்.

75 வயது திரு ராஜகோபால் வெளிப்படுத்தும் ஆற்றலை கண்டு அதிசைக்கும் 50முகங்கள், அவரின் தொடரும் சமூக பங்களிப்பை ஆவலுடன் எதிர் நோக்குகிறது.

இந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.

50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.