S சமுவெல் துரைசிங்கம்

ஜலான் காயுவிற்கு பின்னால் உள்ள கதையைப் பற்றி நீங்கள் அறிவீர்கள். முன்பு அங்கிருந்த காட்டின் பெயரையே அவ்விடத்திற்கு வைத்துள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும். 'காயு' என்பது மலாயில் மரம் என்று பொருள்படடும். இது உண்மையில் சரியானத் தகவலா?

பலர் அறியாத இம்மாற்றுக்கதையைக் கேட்டால் நீங்கள் ஆச்சிரியப்படுவீர்கள். புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் திரு துரைசிங்கம் சாமுவேல் கூறுவது படி, அது உண்மையில் அருகில் அமைந்துள்ள சிலேட்டார் விமானத் தளத்தில் பணிபுரிந்த , RAF பொறியாளர் ஆர் டபிளியு வூட் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.

இது போன்ற தகவல் தணுக்குகள் பலவற்றை திரு சாமுவேலுடன் உறையாடிய போது அறிந்து கொண்டோம். இந்த வயதில் அவருடைய நல்ல ஞாபக சக்தியும், சிறு சிறு தகவல்களை நினைவுகூறும் திறனும் அவருடன் உறையாடுவதை அற்புதமாகவும் மலைப்பாகவும் ஆக்கியது. ஒரு எடுத்துக்காட்டிற்கு அவருடைய ஒ நிலை இறுதித் தேர்வான வரலாற்றை திரு சாமுவேல் 8 டிசெம்பர் 1941 எழுதினார் என்று அவரால் நினைவுகூற முடிந்தது. மேலும் அத்தேர்வில் 'பிரிட்டிஷ் பேரரசின் வரலாறு' என்ற தலைப்பிற்கு சிங்கப்பூரைப் பற்றி விவரிக்க 'அசைக்க முடியாத கிழக்குக் கோட்டை' என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்தார் என்பதனையும் அவர் துள்ளியமாக நினைவுகூர்ந்தார். இது தற்செயலாக ஜப்பான் சிங்கப்பூரை குண்டால் தாக்கி 'அசைக்க முடியாத கிழக்குக் கோட்டை' ஏழே நாள்களில் சரிந்த நாளாக அது இருந்ததினால் கூட இருக்கலாம்.

வரலாற்றில் பின் நோக்கி அழைத்துச் சென்று, ஒவ்வொரு இனமும் ஆரம்ப நாட்களில் எங்கே குடியேறினர், அக்காலத்தின் நினைவிடங்கள் ஆகியவற்றை ஆசையாக நினைவுக்கூர்ந்தார் திரு சாமுவெல்.

“அசைக்க முடியாத கிழக்குக் கோட்டை"

வரலாற்றில் எப்பொழுதும் ஆர்வம் கொண்டிருந்த திரு செமுவெல் ஆரம்ப நாட்களில் பிரிட்டிஷ் பாணியில் உள்ள புத்தகங்களையே அதிகமாக படித்தார். இக்கண்ணோட்டம் ஜப்பானிய ஆட்சியின் போது மாறியது. இந்தியாவிலிருந்து புத்தகங்கள் நேரடியாக கிடைத்தன. அவை திரு செமுவெலுக்கு மாற்று கண்ணோட்டத்தை வழங்கின. தன் தந்தையுடன் தம் புதிய கண்ணோட்டங்களை கலந்துரையாடியது அவருடைய ஆர்வத்தையும் தன்னால் முடிந்தவற்றை கண்டுபிடிக்க வேண்டும் என்ற அவருடைய வேட்க்கையையும் மேலும் உறுதிப்படுத்தியது.

img1

பல்கலைகழகத்தில் வரலாற்றை படிக்க விழைந்த திரு செமுவெல் கவலைக்கிடமாக அரசாங்கமோ அக்காலக்கட்டத்தின் குறிக்கோள்களுக்கேற்ப மாணவர்களை பொருளாதாரம்,கணிதம்,அறிவியல் ஆகிய பாடங்களையே படிக்க ஊக்குவித்ததை அறிந்தார். இருப்பினும், அவர் தான் விரும்பிய பாடத்தைப் பயிலுவதில் உறுதியாக இருந்தார். தன் எதிர்காலத்தை தன் கைகளில் எடுத்துக்கொண்டு இறுதியில் வரலாற்றில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.

வரலாற்றை தன் வாழ்க்கையின் ஒரு பகுதியாக அமைத்த திரு சாமுவெல் இன்றுவரை ஒண்பது புத்தகங்கள் மற்றும், சிங்கப்பூரின் பாரம்பரியம், தன் தந்தை உள்பட பலமுன்னோடிகளின் வாழ்க்கைக் கதைகள் போன்ற தலைப்புகளில் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அதுமட்டும்மின்றி சிட்டி மலெக்க என்றழைக்கப்படும் பரானக்க இந்தியர்களைப்பற்றி பலர் அறியும் வண்ணம் அவர்களைப்பற்றியும் கட்டுரைகளையும் எழுதினார். திரு சாமுவேல் ஓய்வு பெற்று சிங்கப்பூர் வரலாறு சங்கத்தில் அதனுடைய தலைவராக சேர்ந்த போது வெளினாட்டினர் அதிகமாகக் கலந்துகொண்ட சுற்றுப்பணங்களையும் வரலாறு வகுப்புளையும் ஏற்பாடு செய்தார். இவையே அவர் புத்தகங்களை எழுத உத்வேகம் அளித்தன. இச்சுற்றுப்பயணங்களி்ன் போது தன் இலக்கயப் பாதைக்கு முதலில் விதையிட்டச் சிறுவனை எதிர்பாராவிதமாச் சந்தித்தார்.

img1

“அப்போது வரலாற்றிற்கு ஆதரவில்லை."

திரு சாமுவெல் தமிழ் வானொலி நிலையமான ஒலி 96.8 -இன் சி்ங்கப்பூர் நினைவுகள் எனும் நிகழ்ச்சியில் சிறு சிறு வரலாறு துணுக்குகளை பகிர்ந்துகொள்ள அழைக்கப்பட்டபோது சிங்கப்பூர் வரலாற்றைப் பற்றி அவருடைய ஆழ்ந்த அறிவும் அவருடைய தமிழ் மொழி ஆற்றலும் அங்கீகர்க்கப்பட்டன. இந்நிகழ்ச்சி மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தது, பலரும் திரு சாமுவெலின் பாகங்களை மிகவும் எதிர்பார்த்தனர், அவை சிங்கப்பூர் வரலாற்றில் இந்திய சமூதாயத்தின் பங்களிப்பைப் புது பார்வையில் காட்டின. இன்றுவரை இந்நிகழ்ச்சியுடன் தொடர்புப்படுத்தி பேசப்படும் அவருடைய கம்பீரக் குரலை மக்கள் இன்னும் நினைவு வைத்துள்ளனர். இந்நிகழ்ச்சியை நினைவுவைத்திருக்கும் மக்கள் அவருடைய பங்களிப்பை மெச்சுவர்.

சி்ங்கப்பூரில் நம் கலாச்சாரத்திற்கு அரசாங்கம் பள்ளிகள்,ஊடகம்,கலாச்சார நிறுவனங்களை ஆகியவற்றின் மூலம் ஆதரவளித்தாலும், குடிமக்களும் அவர்களுடையப் பங்கை ஆற்றுவது அவசியம். எனவே தான் திரு சாமுவெல் தன்னுடையப் பணி மக்களை பங்களிக்க ஊக்குவித்தால் தனக்கு திருப்தி என்கிறார்.

திரு சாமுவெலின் தமிழ் வேட்க்கையை 1961-ல்,அவரது இளமைப்பருவத்தில் ஆசிரியர் பயிற்ச்சி கல்லூரியில் சேர்ந்த போதிருந்தே காணலாம். அக்கல்லூரியிலோ அவரால் தமிழைக் காணவே முடியவில்லை. நம் அதிகார மொழிகளில் ஒன்றாக அது இருந்தபோதிலும் கல்லூரி இயங்கிய பதினொரு வருடங்களில் தமிழுக்கென்று ஒரு தனிப்பிரிவு அமைக்கப்படவில்லை. திரு சாமுவெல், இச்சூழ்நிலையை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என நினைத்தார்.

“தமிழ் பள்ளி உணவகத்தின் தரையில் கற்றுக்கொடுக்கப்பட்டது."

தமிழ் மொழியைப்பற்றி பேசிய வேளையில், அதை அழகிய மொழியாக திரு சாமுவெல் கருதியது தெளிவாகியது. அது அன்பையும் உணர்ச்சிகளையும் ஆங்கிலத்தைவிட இன்னும் சிறந்த வகையில் கொண்டு சேர்கும் வல்லமைப் பெற்றது. தமிழ் மொழி மீதுள்ள அவருடைய பற்றிர்கும் அவரிடைய சுய அடையாலத்திற்கும் தன் தந்தையே காரணம் என்கிறார்.

ஒரு மொழியின் மீது பற்றை ஏற்படுத்துவதைத் தவிர்த்து, பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு ஊக்கமாகவும் விளங்குகின்றனர். தியாகமனப்பான்மையைக் கொண்ட தன் அம்மாவையும் தன் பிள்ளைகளின் சாதனைகளையும் பெருமையாக நினைவு கூறும் தருவாயில், பிள்ளைகளிடம் நற்பண்புகளை வளர்ப்பதின் முக்கியயத்துவத்தை வலியுறுத்தினார் திரு சாமுவெல். அவர் தன்னால் இயன்ற அளவிற்கு தன் பிள்ளைகளுக்கு தேவையானதை வழங்கி, அவர்களுடைய இன்றைய நிலைக்கு கைக்கொடுத்துள்ளார் என்பதில் பெருமைக் கொள்கிறார்.

திரு சாமுவெல் கிரிஸ்துவ தேவாலையத்தில் தொண்டூழியம் புரிவதிலிருந்து, இருபது ஆண்டுகளாக குடிமக்கள் ஆலோசகர் சமூகத்தில் செயலாளராகவும் செயலாற்றி சமூகத்திற்கு பல வழிகளில் பணிபுரிந்துள்ளார்.

சிங்கப்பூரின் ஐம்பதாவது பிறந்தநாளை திரு சாமுவெல் எல்லா சிங்கப்பூரர்களையும் சிங்கப்பூரின் சாதனைகளைப் பாராட்டுமாறு வேண்டுகோல் விடுக்கிறார்.

img1

“இந்துக்கள் , கிரிஸ்துவர் , புத்த மதத்தினர் - அது இரண்டாம் பட்சம்தான். முதலில் நாம் தமிழர்கள்."

இந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.

50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.