சமய வரைமுறைகளை கடந்து மனித வாழ்வு சிறப்பாக அமைய அவசியமான கருத்துக்களை கொண்ட திருக்குறளை சமூகத்தில் பலருக்கும் எளிமையாக கொண்டு சேர்க்க உழைத்தவர் திரு இரத்னகுமார். “சிலோன்” என்ற பண்டைய பெயரில் இலங்கையை நினைவு கூர்ந்தார் இரத்னகுமார். 193 வருட பழமையான ஒரு பிரபல அமெரிக்க பள்ளியில் ஆங்கிலமும் தமிழும் படித்தார். இரு மொழி கல்வி கற்றதை அதிர்ஷ்டமாக கருதுகிறார். பிரிட்டனில் இயந்திர பொறியியல் துறையில் பட்டம் பெற்ற இரத்னகுமார் தன் நண்பரைத் தொடர்ந்து சிங்கப்பூருக்கு வந்து GE நிறுவனத்தில் ஆய்வு பொறியாளராக வேலை செய்தார். சிங்கப்பூரரை மணந்து கொண்டு சிங்கையில் குடியமர்ந்தார். அன்று 215 சதுர மைல் பரப்பளவு கொண்ட தீவாக இருந்த சிங்கப்பூர் இன்று வளர்ச்சி பெற்ற நாகரீக நாடாகி விட்டதாக கூறினார். அன்றும் சிங்கப்பூரில், ஜாதி, இன, மொழி, நிற வித்தியாசமின்றி ஒற்றுமையாக வாழ்ந்ததை பெருமையாக நினைவு கூர்ந்தார். இவ்வாறு சமைய இன வேறுபாடுகளை களைந்து, நற்பண்புகளை எடுத்துரைப்பதால் சிங்கப்பூரின் சூழ்நிலைக்கு மிக பொருத்தமான வாழ்க்கை முறை நூலாக தமிழ்மறை எனும் திருக்குறளை கருதுகிறார் இரத்னகுமார். |
|
"திருவள்ளுவர் ஒரு மேதை என்று திரு லீ குவான் யூவும் கூறியிருக்கிறார்." |
சமூக சேவை ஒரு தனிப் பொறுப்பாக கருதி செய்யாமல், உதவி தேவை படுவோருக்கு அவ்வப்போது உதவி செய்வார் இரத்னகுமார். மனித நேயம் ஒரு முக்கிய பண்பு என கருதும் இரத்னகுமார் மத சார்பின்றி நெறிமுறைகளையும் பண்புகளையும் உணர்த்தும் நூலாகத் திருக்குறளை வர்ணிக்கிறார். திருக்குறள் உயர் தமிழில் இருப்பதால் பலரால் அதிலும் முக்கியமாக சிறுவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்கிறார். மேலும் திருக்குறள் பலவகையிலும் சிலரால் மத சார்ப்பாகவும் விளக்கப்பட்டிருப்பதாக கூறினார். இவை அந்தந்த சூழ்நிலைகளுக்கு உகந்தவையாக இருந்தாலும் திருக்குறள் பெரும்பான்மையினரை சென்றடைய மதம் சாராமல் மிக எளிமையாக திருக்குறளை மொழி பெயர்க்க விரும்பினார். பல தமிழ் மாணவர்களும் தமிழைவிட ஆங்கிலத்தில் அதிக தேர்ச்சி பெற்றுள்ளதால் திருக்குறளை எளிய ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் இளைய தலைமுறையினர் பலன் பெறுவர் என கருதினார். Dr. சுப திண்ணப்பன், பேராசிரியர் தமிழண்ணன் போன்ற சில தமிழ் அறிஞர்களுடன் கலந்துரையாடியதுடன், பல தமிழ் நூல்களை படித்து தன்னை ஆயத்தப் படுத்திக் கொண்டார். சுமார் 3 ஆண்டுகள் உழைப்பிற்கு பின்பு திருக்குறளின் தன் முதல் ஆங்கில விளக்க உரையை வெளியிட்டார் இரத்னகுமார். அதைத் தொடர்ந்து மாணவர்கள் மற்றும் வெளிநாட்டினரின் கருத்துகளையும் கோரிக்கைகளையும் முன்னிட்டு பல நடைமுறை உதாரணங்களுடன் தன் இரண்டாம் விளக்கவுரையின் பதிவை வெளியிட்டார். தன் விளக்கவுரைகளை நடைமுறை கருத்துகளை கொண்டு எழுதியதாக கூறினார். |
|
"எனது விளக்கவுரை இன்றைய நடைமுறைக்கு உகந்தது." |
தன் முதல் விளக்கவுரை நூலின் வருமானத்தை கந்தசாமி கல்வி நிதிக்கு அளித்தார். தன் இரண்டாம் விளக்கவுரையின் வருமானத்தை சன் லவ் (Sun Love) முதியோர், உடற்குறையுள்ளோர் பராமரிப்பு இல்லத்திற்கு கொடுத்தார். முடிந்தவரை இல்லாதவர்களுக்கு கொடுப்பது முக்கியம் என திருக்குறளையே மேற்கோளாக காட்டினார். தான் சிங்கப்பூரனாக இருப்பதில் பெருமைபடுவதாக இரத்னகுமார் ஒரு நாளிதழ் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். சமய சார்பற்ற அரசியலும், தகுதி அடிப்படையிலான வாய்ப்புகளும் இரந்துண்டு வாழ்வதை தவிர்க்கும் கோற்பாடுகளும் சிங்கப்பூரை தனித்துவம் வாய்ந்த தலை சிறந்த நாடாக்கிறது என்று பெருமையுடன் கூறினார் இரத்னகுமார். அவரின் இந்த கட்டுரை Straits Times நாளிதழின் நவம்பர் 2013யின் சிறந்த எழுத்தாளர் விருதை பெற்றுத் தந்தது. மக்கள் பிச்சை எடுத்து வாழும் நிலை இருந்தால் அரசு தகுதியற்றது என்றும் ஆட்சியிலிருந்து மாற்றப்பட வேண்டியது என்றும் கூறும் அவர் “இறந்தும் உயிர் வாழ வேண்டின் பரந்த செடுக உலகின் எட்டியான்” குரலை மேற்கோள் காட்டினார். |
|
"அரசாங்கத்தாலும் என் சக சிங்கப்பூரர்களாளும் நான் ஒதுக்க படுவதோ ஒடுக்க படுவதோ இல்லை." |
சிங்கப்பூரின் முதல் தலைமுறை தலைவர்களின் ஒருவரான திரு S ராஜரத்தினமும் தானும் இலங்கையில் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என பெருமையுடன் கூறினார் இரத்னகுமார். புதிய குடியேறிகள் தங்கள் குறைபாடுகளை இங்கு புகுத்தி நமது வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் கேடு விளைவிக்காமல் ஒன்றுபட்டு நாட்டின் வளர்ச்சிக்கு செயல்பட வேண்டும். சிங்கப்பூரர்கள் புதிய குடியேறிகளை மதிப்பதுடன் ஒற்றுமை பாராட்ட வேண்டும். இவ்வாறாக அமைந்தால் சிங்கை மேலும் சிறக்கும் என்கிறார் இரத்னகுமார். எங்கள் நேர்க்கானலை நிறைவு செய்யும் தருவாயில், தான் மொழி பெயர்த்த 1,330 குறள்களில் தன்னை மிகவும் கவர்ந்த குறளை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டதும் உடனே 353வது குறளை கூறினார். இந்த குறளின் சாரமும், காலத்தை வென்று நிற்க்கும் திருக்குறளை இரத்னகுமார் மொழி பெயர்த்ததுக்கான காரணத்தை ஒட்டி இருந்தது. 50முகங்கள் இரத்னகுமாரின் மதிப்பில்லா பங்களிப்புக்கு நன்றி கூறுகிறது. |
|
"சுய மரியாதையுடனும் மற்றவரை மதித்தும் வாழ வேண்டும்." |