C பொன்னுசாமி

70வது வயது திரு பொன்னுசாமி சிங்கப்பூர் சமுதாயத்துக்கு பங்களித்த முன்னோடிகளில் ஒருவர். 1951இல் தனது தந்தை அவரை மலேசியாவிற்கு அழைத்து வந்தார். ஜோஹுரின் உலு திராமில் ஆற்றில் நீந்துவதும் மீன் பிடிப்பதுவுமாக இருத்த தன் சிறு வயதை மிக மழிழ்ச்சியாக நினைவு கூர்ந்தார் பொன்னுசாமி. அவர் தந்தை அவரை சிங்கப்பூருக்கு அழைத்து வந்து ஸ்ரீ ராமகிருஷ்ணா மாணவர் இல்லத்தில் சேர்க்க முடுவு எடுத்த பொழுது இவை அனைத்தும் மாறின.

img1

“என் மகனைப் படிக்க சிங்கப்பூருக்குக் கொண்டு வந்தேன், அவனைப் படிக்க வைப்பேன் என்று உறுதியாக இருந்தார் எனது அப்பா.”

பள்ளி பாடங்களில் தனக்கு உதவ துணை பாட ஆசிரியர்கள் அவருக்கு இல்லாத போதும் தன் வகுப்பில் முன்னணி மாணவர்களில் ஒருவராக இருந்ததை பெருமிதத்துடன் நினைவுகூர்ந்தார் பொன்னுசாமி. தன் அறிவை பெருக்கிக்கொள்வதில் தனக்கு இருந்த ஆர்வமே தான் கல்வியில் சிறப்பாக செய்வதற்கு காரணம் என அவர் நம்புகிறார். மற்ற பாடங்களில் சிறப்பாக செய்தாலும் ஆங்கிலம் முதல் மொழியாக இல்லாத இந்தியாவில் இருந்து வந்ததால் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற சிரமப் பட்டார். இருப்பினும் முயற்சியை கைவிடாமல் செயல் பட்டு வெற்றி பெற்ற பொன்னுசாமி, கல்வியில் பின் தங்க பல காரணங்கள் கூருவோருக்கு ஊக்கம் அளிக்கும் என நம்புகிறோம்.

img2

“எனக்கு இயற்கையாகவே படிப்பில் ஆர்வம் வந்தது.”

பொன்னுசாமியின் வாழ்க்கை பஞ்சு மேத்தையாக அமையவில்லை. பொருளாதாரம் மிக சோதனையாகவே இருந்தது. தன்னலமற்ற தன் தம்பி கஷ்டப்பட்டு சம்பாரித்ததை தன் கல்விக்காக அனுப்பி வைத்ததை மன நெகிழ்ச்சியுடன் நினவு கூர்ந்தார் பொன்னுசாமி. தனது சகோதரியை திருமணம் செய்துகொடுக்க தன் தந்தைக்கு பணம் தேவைப்படும் என்பதை உணர்ந்த பொன்னுசாமி, தன் தந்தையின் பொருளாதார சுமையை குறைக்கவும் தனது பண பற்றாக்குறையை சமாளிக்கவும், அவர் விடியலுக்கு முன்பே எழுந்து பகுதி நேர வேலை செய்தார். கல்வி பயணத்திற்கு இடையூராக இருந்த பொருளாதார சுமையும் இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தது.

“நான் காலையில் எழுந்தவுடன் செய்தித்தாள் போடுவேன். நடந்து போடுவேன், ஸைகல்லில் அல்ல.”

இன்று வரை அவரும் அவர் குடும்பத்தாரும், ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஸ்ஷினுக்கு சென்று உற்சாகத்துடன் தொண்டூளியம் செய்து வருகின்றனர், பள்ளியின் முன்னாள் மாணவர்களின் குழு தொடங்கியதில் இருந்து அவரும் அவர் நண்பர்களும் ஒன்று கூடி பள்ளிக்கு பல நடவடிக்கைகளை எற்பாடு செய்து வருகின்றனர்.

இருப்பினும், சில முன்னால் மாணவர்கள் தொண்டூளியத்தில் நாட்டம் காட்டாததை என்னி மனம் வருந்தினார். இக்கால வாழ்க்கை மிக பரபரபாகி விட்டதை ஒப்பு கொண்ட இவர், இளைய தலைமுறையினர் தொண்டூளியத்தில் தொடர்ந்து ஈடுபடுவார்கள் என்று நம்பிக்கை கொண்டார் பொன்னுசாமி.

img1

“எங்களுக்குப் பிறகு இளைஞர்கள் தொண்டூழியம் செய்வதற்கு முன் வருவார்களா என்பது ஓர் சந்தேகம்.”

இந்த முதிய வயதிலும் அவரும் அவர் நண்பர்களும் தங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சமுதாயதிற்கு தொண்டூளியம் செய்து வருகின்றனர். தன்னால் முடிந்தவரை தன்னை உருவாக்கிய இல்லத்திற்கும் சமூகத்திற்க்கும் முழு மனதுடன் தொண்டூளியம் செய்து வருகிறார். அவரின் இந்த பங்களிப்புகள் அவருக்கு மட்டற்ற மன மகிழ்ச்சியை தருவதாக கூறிகிறார் பொன்னுசாமி. இதைதான் "மகிழ்ச்சி நாம் பெறுவதை பொருத்ததில்லை அனால் கொடுப்பதை பொருத்தது!" என்று திரு பென் கார்சன் கூறினாரோ!

“அவர்கள் இல்லையெனில் நான் இல்லை.”

ராமகிருஷ்ணா இல்லத்தில் தான் வாழ்ந்த கட்டுபாடான வாழ்க்கை முறையை இன்னும் பின்பற்றி வரும் பொன்னுசாமி, இதுவே தனது பழக்க வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் செதுக்கியதாக கூருகிறார். அதி காலையில் எழுந்து இறை வணக்கம் செய்தல், இல்லத்தை சுத்தம் செய்தல், அட்டவணை படி படித்தல், மெத்தையின்றி வெறும் தரையில் தூங்குதல் - இவ்வாறாக தனது இள வயது வாழ்க்கையை வர்னித்தார். நிச்சயமாக ராமகிருஷ்ணா இல்லம் பொன்னுசாமியின் மனதில் நீங்கா இடம் பெரும் என்பதில் ஐயம் இல்லை. பொன்னுசாமியின் கதை நம்மை வளர்த்த சமுதாயத்திற்கு நம் பங்கை ஆற்ற வேண்டும் எனும் எண்ணத்தை நம் மனத்தில் விதைக்கும் என 50முகங்கள் விரும்புகிறது.

“நான் அங்கேயே வளர்ந்தேன். அது என்னை நல்ல பண்புகளுடன் வாழ வளர்த்தது.”

இந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.

50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.