P V சண்முக சுந்தரம்

யோகா ஆத்மா மூலம் ஆத்மாவை அடைய ஆத்மாவின் பயணம். - ஸ்ரீமத் பகவத் கீதை

உலகில் தலை சிறந்த யோகா ஆசிரியர்களில் ஒருவராக கருதப்படும் திரு BKS ஐயங்கார் சமீபத்தில் தனது 95வது வயதில் இறந்த போது, யோக கலையை உலகலாவிய நிலைக்கு கொண்டு சென்றதற்காக உலகின் பல மூலைகளில் இருந்தும் அவருக்கு பாராட்டுகளும் அனுதாபங்களும் வந்து குவிந்தன. இவரின் கற்பித்தலை சிங்கப்பூரில் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்பித்து வருகிறார் திரு சண்முக சுந்தரம்.

1960ரில் இருந்து யோக கலையை கடைபிடித்து வருகிறார் திரு சண்முக சுந்தரம். உடல், மனம், ஆத்மா ஆகிய மூன்றையும் பயிற்று விப்பதின் மூலம் உடலுக்கும் மனதுக்கும் நன்மை பயக்க முடியும் எனும் பழம் பெரும் இந்திய தத்துவத்தை மிகவும் நம்புகிறார் இவர். தற்போது உலகலாவிய நிலையில் பல கோடி வெள்ளி மதிப்புள்ள இந்த உடல் பயிற்சி கலை, இவர் தொடங்கிய காலத்தில் மர்மம் நிறைந்த ரகசியமாக கருதப்பட்டது.(பிரபலம் அடையாமல் இருந்தது)

பல காலமாக யோகா ஆசிரியர்கள் கூறி வந்த பலன்களை சமீப மருத்துவ ஆராய்ச்சிகள் உறுதிபடுத்தி உள்ளன. யோகாவால் உடலுக்கும் மனதுக்கும் விளையும் நன்மைகளை பல காலமாக பரப்பி வருகிறார் திரு சண்முக சுந்தரம்.

img1

“இதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை என்றால் மரணத்திற்கு தயாராக இருங்கள்.”

திரு சண்முக சுந்தரம் 1950தில் தனது 16வது வயதில் சிங்கப்பூர் வந்தார். பல வேலைகள் செய்துகொண்டே இரவு பள்ளியில் ஆங்கிலம் படித்தார். போதும் என்று நிறைவு அடையாத இவர், புகைப்படம் எடுப்பது, தையல் கலை, ஹோமியோபதி போன்ற பலவற்றை கற்று தன் குடும்ப சிலவுக்கு பொருள் ஈட்டினார். அவர் அரசாங்க துறையில் வேலை செய்து 55 வயதில் ஓய்வு பெற்றார்.

img1

“வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவித்தேன். ஆனால் நான் நன்றாக இருக்கும் பொது ...”

திரு சண்முக சுந்தரம் யோகாவில் பெறும் ஆர்வம் கொண்டிருந்தார். யோகா புத்தகங்கள் படித்ததுடன் BKS ஐயங்கார் உட்பட சில ஆசிரியர்களிடமும் பயின்றார். ஒரு அமெரிக்க சித்தர் எனக்கு பிறான யோகா சான்றிதழ் வழங்கினார். $5000 செலவில் அவரிடம் யோகா பயின்றார். 1950தில் இந்தியாவில் யோகா பள்ளியில் பயின்று சான்றிதழ் பென்றேன். பல நூல்கள் படித்து யோகா பற்றிய அறிவை வளர்த்துக் கொண்டார். 1968 முதல் சிங்கப்பூர், இந்தியா மலேசியா ஆகிய நாடுகளில் யோகா கற்பித்தார்.

img2

“பணம் இல்லாதவர்களுக்கு இலவசமாக கற்ப்பிப்பேன். பயிற்சியால் அவர்கள் பலன் அடையட்டும்.”

திரு சண்முக சுந்தரத்திடம் 16,000 மாணவர்கள் படித்ததுடன் அவர்களில் சிலர் யோகா ஆசிரியர்களாகியுமுள்ளனர். அவருக்கு தெரிந்தவை அடுத்த தலைமுறையினருக்கு சென்றடைந்ததில் அவர் மகிழ்ச்சி அடைகிறார். தனது குடும்பத்தினரும் யோகா பயிற்சிகளை கடைப்பிடிப்பதை மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறார். இறந்துவிட்ட அவரது துணைவியார் இவரின் யோகா பயிற்சிகளை பின்பற்றவில்லை என்பதில் வருத்தம் கொண்ட போதும் அவர் மிகச் சிறந்த இல்லத்தரசி எனப் பாராட்டுகிறார்.

இள வயதில் இருந்தே சண்முக சுந்தரம் தன்னிச்சையானவர். 82 வயதிலும் அவர் தொடர்ந்து யோகா கற்பிக்கிறார். சில நெருங்கிய நண்பர்களுக்கு தனி நபர்களாக வீட்டில் வகுப்புகள் எடுத்தாலும் மோசமாகி வரும் முட்டி வலியால் இதை அவர் குறைத்து கொண்டு வருகிறார். இப்பொழுது பெரும்பாலான வகுப்புகள் அவர் வீட்டிலேயேதான் நடக்கிறன. தற்சமயம் சில யோகா புத்தகங்களை எழுதி வருகிறார். கூடிய விரைவில் இவற்றைப் பிரசுரிக்க விரும்புகிறார்.

யோகாவின் வாழ்நாள் பலன்களுக்கு திரு சண்முக சுந்தரமே நல்ல எடுத்துகாட்டு. நேர்காணலின் இறுதியில் அவர் செய்து காட்டிய மயூர ஆசனம், யோகா பற்றிய எங்கள் ஐயங்கள் அனைத்துக்கும் முற்று புள்ளி வைத்தது.

img3

“பயிற்சிகளில் வரும் சிரமம் நம் வாழ்வில் பல சிரமங்களை தவிர்க்க உதவும்.”

யோகா குரு திரு சண்முக சுந்தரத்தின் தொடரும் பணிகளை 50முகங்கள் வரவேற்கிறது. அவரால் பல சிங்கை இந்தியர்கள் யோகா பயில ஆர்வம் கொண்டு மனம் மற்றும் உடல் ரீதிகளில் பலன் அடைவார்கள் என நம்பிக்கைக் கொள்கிறோம்.

இந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.

50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.