P செல்வதுரை

சிங்கப்பூர் வரலாற்றில் அதுவே கஷ்டமான ஒரு காலமாக இருந்தது. ஜப்பானிய ஆட்சி வீழ்ந்து பிரிட்டிஷ்காரர்கள் தலைமை எடுத்தனர். சிங்கப்பூர் போரிலிருந்து மீண்டு வந்து மீண்டும் படிபடியாக தன்னை உருவாக்கிக்கொள்ள முயற்சி செய்தது. பிரிட்டிஷ்காரர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த அதே சமயம் கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்து அதிக எதிர்ப்புகள் தோன்றின. சிங்கப்பூரர்களும் மெது மெதுவாக தங்களது பொறுமையை இழந்து சுதந்திரம் பெற விரும்பினர். நாளடைவில் ஒரு சிறு குழு ஒன்று ஒன்று சேர்ந்து சிங்கப்பூரால் முடியும் என்ற ஒரே தளரா நம்பிக்கையுடன் இருந்தனர். திரு.செல்வதுரைக்கும் இந்த இயக்கத்தில் பங்கு இருக்கும் என்று அவர் கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவில்லை.

1933-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்த திரு.செல்வதுரை தனது சிறு வயதில் மொன்க்ஸ் ஹில்லிலுள்ள பெரிய திறந்த திடலில் விளையாடியதை மகிழ்ச்சியுடன் நினைவுக்கூருகிறார்.

1933-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்த திரு.செல்வதுரை தனது சிறு வயதில் மொன்க்ஸ் ஹில்லிலுள்ள பெரிய திறந்த திடலில் விளையாடியதை மகிழ்ச்சியுடன் நினைவுக்கூருகிறார். ஒரு குழந்தை மகிழ்ச்சியுடன் பம்பரம், மார்பல் போன்ற விளையாட்டுகளை விளையாடி வளர்ந்து வர சிங்கப்பூர் சேர்ந்த இடம் என அவர் நினைக்கிறார். ஜப்பானிய போர் நடந்தபோது திரு.செல்வதுரை பிள்ளை பருவத்தில் இருந்தார். இருந்தாலும் அவர் அக்காலத்தில் மலேசியாவில் வசித்து வந்ததால் சிங்கப்பூர் வரலாற்றில் நடந்த எந்த வித கொடூரமான நினைவுகளும் அவரை பாதிக்கவில்லை. அவர் தனது படிப்பை ராப்பிள்ஸ் கல்வி நிலைடத்தில் தொடர்ந்து அப்பள்ளியில் கிரிக்கெட் மற்றும் கர்நாடக பாட்டு வபுப்புகளில் சேர்ந்து பாட கற்றுகொண்டார். அவரது அக்காவோ இந்திய நடன குழுவில் நாட்டம் காட்டினார்.

அதன் பின்னர் திரு.செல்வதுரை லண்டன் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் பட்டதைப் பெற்றார். அங்குப் பற்பல சிங்கப்பூர் முன்னோர்களைச் சந்தித்த இவரிடம் அதிகமான தேசப் பற்று வேரூன்ற தொடங்கியது.

“திரு.கோ கேங் சுவி தலைவராக இருந்து, நாம் லண்டனில் செயல்படுவதற்குப் பெரும் ஊக்கமாக இருந்தார்.”

அப்போது 1966-ஆம் ஆண்டு. சிங்கப்பூர் மக்கள் செயல் கட்சியும் பாரிசான் சொசியளிசும் நாடாளுமன்றத்தில் போட்டியிட்டுக் கொண்டிருந்தனர். பாரிசான் சொசியளிசின் கட்சியிலிருந்து சில உறுப்பினர்கள் வெளியேறி நாடாளுமன்றத்தைவிட்டு சென்ற போது பெரிய திருப்பம் ஏற்பட்டது. சிங்கப்பூர் அரசியல் வரலாற்றில் இது மிகப் பெரிய ஒரு சம்பவமாக இருந்தது. மக்கள் செயல் கட்சி மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெல்லும் வாய்ப்பை பெற்றது. தேர்தல் கூட்டங்கள் பல நடந்தன. அந்தத் தேர்தலில் புது வேட்பாளரான திரு.செல்வதுரை வீடு வீடாக சென்று மக்கள் செயல் கட்சிக்கு ஆதரவு திரட்ட உதவினார். இந்த தேர்தலில் அவர் போட்டியில்லாத வெற்றியை பெற்றார்.

மணமாகாத ஆடவராக இருந்த திரு.செல்வதுரை, தனது முழு முயற்சியையும் நேரத்தையும் தனது புது பதிவியில் செலுத்தினார். ஆயினும் அவர் விவரம் தெரியாத அரசியலில் காலையிடுவது ஒரு பெரிய கேள்வி குறியாகவே இருந்தது. அரசியலில் சேர்வது சுலபமான காரியமாக இருக்காது என்று திரு.செல்வதுரைக்குத் தெரிந்தது. முக்கியமான தொழிற்சங்கங்கலில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சார்ந்தவர்களை எதிர்த்து நிற்க வேண்டியிருந்தது. ஆனால், அப்போது மூத்த தொழிற்சங்க தலைவராகவும் அரசியல்வாதியாகவும் இருந்தார் திரு.தேவன் நாயர் அவர்கள்.

“நாங்கள் வெவ்வேறு குழுக்களிலும் தொழிற்சங்கங்களிலும் கம்யூனிஸ்ட்காரர்களை எதிர்த்து நின்றோம்.”

திரு.செல்வதுரை வேளையிலும் அரசியலிலும் அதிக நேரத்தைச் செலவிடுவது அவரின் தாயாருக்குப் பிடிக்கவில்லை. அவரது மகன் தனது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையைப் பற்றி அதிகமாக யோசிக்காததை எண்ணி அவர் கவலைப்பட்டார். தனது தாயார் மற்றும் நண்பர்களின் வற்புறுத்தலால் திரு.செல்வதுரை மலேசிய கோலாலும்புரிளிருந்த மருத்துவர் ஒருவரை மணம் செய்து கொண்டார்.

1984-ஆம் ஆண்டில் திரு.செல்வதுரை அரசியலிலிருந்து ஓய்வு பெற்று இளம் வயதினருக்கு வழிவிட்டார். அவர் நாடாளுமன்றத்தில் உறுபினராக இருந்ததில்லை. இருப்பினும் தொழிற்சங்கங்கத்தைப் பற்றி பலர் அவரிடம் ஆலோசனை கேட்க வருவர்.

திரு.செல்வதுரையின் சகோதரி சிங்கப்பூர் கலை காட்சியில் அதிக ஈடுபாடு கொண்டு இந்திய நுண்கலை சமூகத்தோடு சேர்ந்து நடனமாடி வந்தார். திரு.செல்வதுரை அவருக்கு ஊக்கமளிக்க அவர் பங்கெடுக்கும் நிகழ்ச்சிகளுக்குச் செல்வார். ஆயினும், அவர் கலை உலகில் அதிக ஈடுபாடு கொள்ளவில்லை.

எதிர்பாராத ஒரு நாள், அவர் கலை காட்சியில் மேலும் ஈடுபட வாய்ப்பு கிடைத்தது.

"அந்த வேலை எனக்கு மன திருப்தியை அளித்தது. அதனால் நான் யோசிக்காமல் அதில் பங்கெடுத்தேன்.”

சிங்கப்பூர் இசை மற்றும் நடன காட்சியில் திரு.செல்வதுரை தீவிரமாக இன்றும் ஈடுபட்டு வருகிறார். சிங்கப்பூர் கலை பள்ளியுடன் இணைந்து MICA இயக்கத்தின் உறுப்பினராகவும் திரு.செல்வதுரை உதவி வந்தார்.

இதை தவிர்த்து அவர் சிங்கப்பூரிலுள்ள மற்ற முக்கிய இயக்கங்களிலும் குழு, மேலாண்மை, சட்டப்படியான நிலைகளில் உறுப்பினராக பனி செய்து வந்தார். பிரபல கண் அறுவை சிகிச்சையாளரான பேராசிரியர் ஆர்தர் லிம் அவரை தம்முடன் சேர்ந்து சிங்கப்பூர் தேசிய கண் அமைப்பை அமைத்து அதில் உறுப்பினராக சேர அழைப்பு விடுத்தார். அதோடு, திரு.செல்வதுரை ஆராய்ச்சி குழுவான சிங்கப்பூர் கண் ஆராய்ச்சி நிறுவனத்திலும் சிங்கப்பூர் தேசிய கண் மையத்திலும் உறுப்பினராக பெரும் பங்கையாற்றி வந்தார்.

சிங்கப்பூரின் முன்னோடி தலைவர்களுடன் ஒன்று சேர்ந்து வேலை செய்ததில் திரு.செல்வதுரை பெருமை கொள்கிறார். இவர்கள் இவ்வுலகைவிட்டு பிரியும்போது திரு.செல்வதுரை வருத்தப்படுவாராம். இருந்தாலும், நமது புது இளம் தலைமுறையினர் நமது முன்னோடி தலைமுறையினர் நமக்காக வகுத்த பாதையை தொடருவர் என்று நம்பிக்கை கொள்கிறார்.

"நாம் சுற்றிப் பார்க்கும்போது சிங்கப்பூர் அழகான நாடாகத் தென்படுகிறது. என்னால் இப்போது அந்த அழகை ரசிக்க முடிகிறது.”

சிங்கப்பூருக்கு தனது பெரும் பங்காற்றிய திரு.செல்வடுரைக்கு 50 முகங்கள் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்து அவர் என்றும் நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்துகிறது.

 

இந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.

50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.