"…Thank you for this path, long and winding where shadows are still dancing Thank you, let me say finally To all those who passed this way, before me, Thank you" - Poet M.K. Bhasi – from “Thank you for the Memories” கவிஞர், ஆசிரியர், கல்வியாளர் என 84 வயதாகிய M.K. பாஷி அவர்கள் இந்தியாவில் பிறந்து அங்கு கல்வி பெற்றார். 1953-இல் அவர் தனது முதல் வேலையாக விக்டோரியா பள்ளியில் பயிற்சி பெற சிங்கப்பூருக்கு முதன் முதலாக வந்தார். ஆசிரியர் பயிற்சி கல்லூரியிலிருந்து தகுதி பெற்ற இவர் பின்னர் பசிர் பஞ்சாங் பள்ளி ஒன்றில் பணியாற்ற அனுப்பப்பட்டார். மூத்த அறிவியல் ஆசிரியராக வேலை புரிந்த இவருக்குப் பெரிய சவாலாகத்தான் இருந்தது. அவர் வேலைக்குப் புதிதாக இருந்ததோடு அறிவியல் ஆய்வகத்தின் பொறுப்பும் அவரிடம் இருந்தது. அந்தக் காலத்தில் இங்கலாந்திலிருந்து அறிவியல் ஆய்வக சாதனங்களை இறக்குமதி செய்து அவற்றை பராமரிக்கும் வேலையை செய்ய வேண்டியிருந்தது. இதைத் திரு.பாஷி 20 வருடங்களாக செய்து வந்து பின்னர் வேலை இடமாற்றம் கேட்டு புது பள்ளிக்கு மாறினார். புது பள்ளியில் ஒரு வருடம் பணிபுரிந்து அவர் துணை தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்றார். வேலையிலிருந்து அவர் ஓய்வு பெற்ற பின்னரும் அவர் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு வேலை செய்து வந்தார். ஓர் ஆசிரியராகவும் கல்வியாளராகவும் பணி புரிந்ததோடு திரு.பாஷி சிங்கப்பூர் ஆசிரியர்கள் சங்கத்திலும் உறுப்பினராக இருந்தார். பல தலைமுறையினருக்கு பாடம் குறிப்பாக அறிவியல் பாடத்தை கற்பித்து மிக முக்கிய பங்கை ஆற்றினாலும் திரு.பாஷிக்கு கவிதைகள் எழுவதில் தனிப்பட்ட ஆர்வம் இருந்தது. அவர் புகழ்பெற்ற கதையாசிரியர் மட்டுமல்லாமல் பற்பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். கதை எழுவதில் அவருக்கு தமது அறிவியல் பாடங்களைத் தவிர்த்து ஒருவிதமான சுதந்திரம் கிடைத்தது. இந்த ஆர்வம் அவரை எதைப் பற்றியும் எழுத அனுமதித்தது என்று கூறலாம். அவர் அன்பு, உறவுகள், வாழ்க்கை என பல தலைப்புகளை முன்னிட்டு எழுதியிருக்கிறார். |
|
"கவிதைகள் எழுதும்போது எல்லைகள் இல்லை, எதைப் பற்றியும் எழுதலாம்." |
திரு.M.K. பாஷி தமது ஆசிரியர் துறையை தவிர்த்து சிங்கப்பூரின் கலை உலகத்தையும் வளர்ப்பது அவசியம் என எண்ணினார். அதனால் 1960-இல் அவர் சிங்கப்பூர் கேரளா சங்கத்தில் சேர்ந்து பிறகு ஸ்ரீ நாராயண பணியில் சமுதாயத்திற்கு தனது பணியை ஆற்றினார். சிண்டாவிலும் அவர் STEP நிலையம் ஒன்றில் தலைவராக சேவை செய்து வந்தார். ஆசிரியராக இருந்த அனுபவத்தை அவர் சாதகமாக பயன்படுத்தி சிறுவர்களின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு அளித்தார். ஸ்ரீ நாராயணன் பணியில் நிறைய நேரம் செலவிட நேரிட்டதால் அவர் மற்ற தொண்டூழிய வேலைகளை விடும் சூழ்நிலை ஏற்பட்டது. இன்றுவரை அவர் 17 வருடங்களாக ஸ்ரீ நாராயண பணியின் மூலமாக சமுதாயத்திற்கு தனது பணியை ஆற்றி வருகிறார். |
|
"உண்மையிலேயே, இந்திய சமுகத்தைவிட சீனர் சமுகத்திலிருந்து தான் அதிக ஆதரவு கிடைத்தது என்று நான் நினைக்கிறேன்." |
இந்து ஆலோசனை குழுவில் சேருமாறு அப்போது சமுக விவகார அமைச்சரான திரு.ஒத்மான் வாக் திரு.பாஷிரைத் தேர்ந்தெடுத்தார். அங்கு நான்கு வருடங்களாக பணிப்புரிந்த இவர் சிங்கப்பூரிலிருக்கும் இந்திய சமுதாயத்தை பாதிக்கும் சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியிருந்தது. சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்தபோது அரசாங்கம் பொது விடுமுறைகளை குறைக்க எண்ணியது. இந்திய சமுதாயத்தின் ஒரே ஒரு விடுமுறை நாளாக தீபவாளியை தேர்தெடுத்த அந்த கஷ்டமான முடிவை நினைவுகூருகிறார் திரு.பாஷி. சிங்கப்பூர் விரைவான முன்னேற்றம் கண்டு வந்த அதே சமயம் பல இந்து கோயில்களும் பிரார்த்தனை தளங்களும் இடமாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. சிலர் எதிர்ப்பு தெரிவித்தப் பொது இந்து ஆலோசனை குழு நடுவராக முன் வர அவசியமானது. திரு.பாஷி இந்து ஆலோசனை குழுவில் இருந்தபோது இதுப் போன்ற சவால் மிக்க சூழ்நிலைகளை வெற்றிகரமாக சமாளித்து வந்தார். |
|
"பிரேதத்தை வைதுக்கொள்ள முடியாது. வேறு வழி ஏதும் இல்லையென்றால் பெட்ரோல் அல்லது மண்ணெண்ணெய் கொண்டு பிரேத்த்தை எரிக்கலாம்." |
M.K. பாஷி அவர்கள் ஒய்வு பெற்ற பின்னரும் நீண்ட காலமாக கல்வியாளராக பணியாற்றி வருகிறார். அவர் சிங்கப்பூரை ஒரு சமூக மற்றும் கலாச்சார மையம்மாக வடிவமைக்க ஒரு எழுத்தாளராகவும் கவிஞராகவும் இருந்து உதவினார். அதோடு, அவர் ஸ்ரீ நாராயண பணியிலும் ஒரு 20 வருடங்களாக தம்மால் இயன்றவரை உதவியிருக்கிறார். அவர் சிறந்த ஒரு கவிஞாராக திகழ்ந்து மூன்று புத்தகங்களையும் வெளியிட்டிருக்கிறார். சிறு வயதிலிருந்தே கவிதை எழுதுவதில் அவர் அதிக ஆர்வம் கொண்டிருந்ததால் கவிதைகள் அவர் ரத்தத்திலேயே உள்ளது என்று கூறுவதில் எந்தத் தப்பும் இல்லை. இவர் இத்தனை ஆண்டுகளாக கவிதை எழுதுவதற்கான காரணமும் இந்த பெரும் ஆர்வம் தான். முன்பைவிட இவர் அதிகமாக கவிதைகள் எழுதாவிட்டாலும் தான் எழுதிய பழமையான கவிதைகளை எண்ணி அடிக்கடி நினைவு கூறுவாராம் திரு.M.K. பாஷி. |
|
"1950-இல் வாழ்ந்த பேருடைய வாழ்க்கைகளை நான் பார்த்திருக்கிறேன். அன்றிலிருந்து ஏற்பட்ட மாற்றங்கள் மிக அற்புதமானது." |