இளமை பருவத்தை தாண்டிய பிறகு ஓட்டம் ஆட்டம் போன்றவற்றை குறைத்துக்கொள்வது பொதுவானது ஒரு அம்சமாகும். ஆனால் திரு ஹரிசந்திரனோ அதற்கு புரம்பாக விளையாட்டுப்போட்டிகளில் கலந்துக்கொள்வதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார். மூத்த விளையாட்டாளர்களுக்கான போட்டிகளில் கலந்துக்கொண்ட முதல் சிங்கப்பூரர் என்ற பெருமை திரு ஹரிகரனைச் சேரும். 1975-இல் கெனடாவின் டொரொன்டொ தலைநகரில் நடைப்பெற்ற மூத்த விளையாட்டாளர்களுக்கான முதல் உலக போட்டிகளில் 400 மீட்டர் பந்தயத்தில் வெள்ளி பதக்கம் வென்று சிங்கப்பூருக்கு இவர் பெருமை வாங்கித் தந்துள்ளார். இந்த வெற்றியைத் தொடர்ந்து, சிங்கப்பூரிலும் மூத்த விளையாட்டாளர்கள் சங்கத்தை உருவாக்கவேண்டும் என்ற இவரது கனவு நினைவானது. 1978-இல் இச்சங்கத்தை உருவாக்கி அதன் கௌரவ செயலாளராக பணிபுரிந்தார் திரு ஹரிசந்திரன். மூத்த விளையாட்டாளர்கள் தொடர்ந்து ஆரோக்கியமாக வாழ சிறந்த தளமாக இச்சங்கம் அமையும் என்பது இவரது நம்பிக்கை. இச்சங்கத்தை ஆரம்பித்தது தமது வாழ்க்கையின் மிக பெரிய சாதனையாக திரு ஹரிசந்திரன் கருதுகிறார். இதில் மட்டுமல்லாமல், ஆசிய சங்கத்திலும் கடந்த ஆண்டுவரை உறுப்பினராக பொறுப்பேற்று வந்தார். திரு ஹரிசந்திராவின் குடும்பத்தினர் அனைவரும் ஓட்டப்பந்தைய வீரர்களாக இருந்தார்கள். இவரது தந்தை, 1920-இல் மலேசியாவின் சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்தார். சகோதரர்கள் இருவரும் ஓட்டப்பந்தை வீரர்களாக திகழ்ந்து பல சாதனைகளை படைத்துள்ளனர். ஓட்டம் என்பது, இவரது குடும்ப இரத்தத்தில் 'ஓடுகிறது' போல! திடலில் மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் எழும் சவால்களை முறியடிக்கும் இவரது போட்டித்தன்மைமிக்க ஆற்றல்தான் இவரை உலகின் அடுத்த மூலையில் நடைப்பெற்ற முதல் உலக மூத்த விளையாட்டாளர்களுக்கான போட்டியில் பங்குபெறச் செய்தது. |
|
“இதுவே எனது தலையாய பங்களிப்பு. விடாமுயற்சியுடன் சவால்களை எதிர்நோக்கி அவற்றை முறியடித்ததன் விளைவாக இன்று இது இவ்வளவு வளர்ந்துள்ளது.” |
திரு ஹரிசந்திரா முதல் கட்டத்திலேயே ஓட்டப்பந்தைய வீரராக தமது வாழ்க்கையை ஆரம்பிக்கவில்லை. முதலில், மலேசியாவில் வளரும்போது, 11 வயது முதல் கிரீகெட் மற்றும் ஹாக்கி போன்ற விளையாட்டுகளில தமது பள்ளியை பிரதிநிதித்து விளையாடினார். மேற்படிப்புக்கு ஆஸ்திரேலியா மற்றும் லண்டன் போன்ற நாடுகளுக்கு சென்ற பிறகும் இவ்விளையாட்டுகளை தொடர்ந்து விளையாடினார். ஆனால் 23 வயதானபோது, 800 மீட்டருக்கான 2 நிமிட சாதனையை முறியடித்து மலேசியாவை பிரதிநிதித்து பல போட்டிகளில் பங்குபெற்றார். இறுதியாக, 1957-இல் சிங்கப்பூருக்கு வந்த இவர், ஊற்றம் சாலையில் காவல் அதிகாரியாக வேலையை தொடங்கி 1959-இல் சிங்கப்பூர் குடுயுரிமை பெற்றார். வேலை பழு ஒருபுரமிருக்க, ஓட்டப்பயிற்சியையும் அவர் கைவிடவில்லை. சிங்கப்பூரை பிரதிநிதித்து முதல் முதலாக 1959-இல் ஓட்டப்பந்தயத்தில் பங்கெடுத்தார். நாட்டிற்கான இவரது பங்களிப்பு இத்துடன் நின்றுவிடவில்லை.பல வெற்றிப்பெற்ற விளையாட்டு வீரர்களை உருவாக்கிய பெருமையும் திரு ஹரிசந்திராவைச் சேரும். |
|
“அன்று 440கெஜம் ஓட்டப்பந்தயத்தில் என் சகோதரர் தான் சிறந்த வீரர். காவலர் பயிற்சிப் பள்ளியில் நான் அவரோடு ஓடி, அவரை வென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினேன்.” |
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை திரு ஹரிசந்திராவுக்கு நன்கு அறிவார். முன்பு ஓடியதைப்போன்று இனிமேல் ஓடமுடியாது என்று அறிந்தவுடன் போட்டிகளில் பங்கெடுப்பதை குறைத்துக்கொண்டார். 59 வயதான பிறகு போட்டிகளில் பங்கெடுப்பதிலிருந்து ஓய்வுப்பெற்றார். தமது சகோதரர்கள்தான் தனது ஓட்டப்பந்தய பயணத்தின் ஆரம்பத்தையும் முடிவையும் நிர்நயித்தனர் என்று நகைச்சுவை நயத்துடன் பகிர்ந்துக்கொண்டார்.1953-இல் தமது அண்ணனை ஓட்டப்பந்தயத்தில் வென்ற பிறகு ஆரம்பித்த தமது பயணம், தம்பி தம்மை ஓட்டபந்தயத்தில் வீழ்த்த ஆரம்பித்த பிறகு முடிந்தது என்று கூறினார். பதிய, இளைய ஓட்டப்பந்தைய வீரர்களுடன் போட்டியில் மோதுவதை நிருத்திவிட்டாலும், திரு ஹரிசந்திரா ஓடுவதை கைவிடவில்லை. அவரது வயதுக்குட்பட்டவர்களுடன் உலக போட்டிகளில் கலந்துக்கொண்டு 2 வெள்ளி மற்றும் ஒரு |
|
"ஓட்டப்பந்தையத்தின் இலக்கை அடைய முடியாமல் போவது, ஓய்வுபெற வேண்டும் என்பதற்கான அறிகுறி. |
சிங்கப்பூரின் 50-ஆவது வருட கொண்டாடத்தை நெருங்கும் தருணத்தில், மேலும் பல இளையர்களும் முன்னால் விளையாட்டாளர்களும் திடல் விளையாட்டுகளில் பங்கெடுத்து அரசாங்கம் அமைத்துக்கொடுத்துள்ள விளையாட்டு அரங்கங்களை திட்டங்களையும் பயன்படுத்தி நன்மை பெற வேண்டும் என்று திரு ஹரிசந்திரா விழைகிறார். திரு ஹரிசந்திராவின் குடும்ப வரலாறு இவரது பேரன் மூலம் தொடர்கிறது. பேரனும் இவரது மேற்பார்வையின் கீழ் திடல்தட போட்டிகளில் பங்கெடுக்கிறார். 50 முகங்கள் குழுவினர் அனைவரும் திரு ஹரிசந்திராவுக்கும் அவரது பேரனுக்கும் எங்களது வாழ்த்துக்கைத் தெரிவித்துக்கொள்கிறோம். |