Dr ஜாஸ்மின் செல்லையா

சிலருக்கு தொண்டூழியம் செய்வது உடன் பிறந்த குணமாக உள்ளது. வேறு சிலரோ இதை வளர்த்துக்கொள்கின்றனர். டாக்டர்.ஜாஸ்மின் செல்லையா கண்டிப்பாக பிறப்பிலேயே பிறருக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு உதவும் வேட்கை கொண்டவராவார். கூலி வேலை செய்வோருக்கு உதவி செய்வது முதல் சென்ட் ஜான்ஸ் முதியோர் இல்லத்தில் தலைமை வகித்து வந்தது வரை, தன் பெற்றோர் செய்த சமூகத் தொண்டுகளைக் கண்டு வளர்ந்தவர் அவர். இதுவே அவருக்கு இந்த சேவை செய்யும் மனப்பான்மை ஏற்படவும், பின்பு சிறுவர் புற்றுநோய் அறக்கட்டளை, கிலப் ரெயின்போ போன்ற பல தொண்டூழிய அமைப்புகளை நிறுவிய முன்னோடி என பெயர் கிடைக்கவும் காரணமாக அமைந்தது

சில சிறுவர்கள், பணப் பிரச்சனையால், சிகிச்சை முடியும் முன்பே மருத்துவ மனையிலிருந்து வெளியேறியது டாக்டர்.செல்லையாவை சிறுவர் புற்றுநோய் அரகட்டளையை நிறுவ தூண்டியது. பெரியோருடன் ஒப்பிடும் போது குழந்தைகள் உதவியை நாடுவதில் அதிக தயக்கம் காட்டுவதால், எந்த குழந்தையும் பின்தங்கி விட கூடாது என்பதே அவருடைய முக்கிய நோக்கமாக இருந்தது. சிறுவர் புற்றுநோய் அறக்கட்டளைக்கு பண உதவி அளிப்பதோடு, புற்றுநோயால் அவதியுறும் குழந்தைகளுக்கு செயற்கை முடி வாங்கியும், மருத்துவ மனையில் இருக்கும் குழந்தைகளுக்கு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்தும் உதவுகிறது

img1

முழு நேர வேலை செய்துகொண்டே இந்த அமைப்புகளை நிறுவி நடத்துவது சற்று கடினமாகவே இருந்தாலும் இதை நடத்த வேண்டும் என்ற வேட்கையோடு உழைத்து அவர் தடைக்கற்களை கடந்தார். நல்ல வேளை சிங்கபூரர்களும் தங்கள் அளவற்ற ஆதரவை தந்ததால் அமைப்புகளுக்கு தொண்டூழியர்கள் ஏராளம்.

“முழுமனதும், மன உறுதியும் இருந்தால், அவற்றைக்கொண்டு எதையும் செயல் படுத்தலாம்"

பல தடைக்கற்களைக் கடந்துவந்தாலும், மொத்தத்தில் தொண்டூழியம் மிகுந்த திருப்த்தி அளிப்பதை டாக்டர். செல்லையா, தானறியாமல் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியதால், அவ்விளைஞன் வளர்ந்து பிறருக்கு உதவ முன்வந்ததை மனம் நெகிழ கூறுவதன் மூலம் அறியலாம்

ஒரு சிறு சிந்தனையிலிருந்து ஆரம்பித்து, திட்டமிடப்பட்டு, தற்போது நன்கு அறிமுகமான சிறந்த தொண்டூழிய அமைப்பாக உருவெடுதுள்ளதை அவர் பெருமிதத்தோடு நினைவுகூறுகிறார். அரசாங்கம் இவ்வமைப்புகளுடன் நெருக்கமாக வேலை செய்து, பங்காற்றுவது தனக்கு ஊக்கம் தருவதாகக் கூறிய அவர், இது மேன்மேலும் தொடர வேண்டும் என்று விரும்புகிறார். அதே சமயம் அரசு தொண்டூழிய நிறுவனங்களுக்கு கண்டிப்பாக உதவ வேண்டும் என்று ஆணை சுமத்துவது சிக்கலானது என்றும் அதற்கு எளிமையான தீர்வு இல்லை என்றும் அவர் ஒத்துக்கொள்கிறார்.

“நான் பணக்காரன் அல்ல, ஆனால் அடுத்தவரைப் பற்றி எண்ண போதுமான செல்வத்தைக் கொண்டவன் என்று அவர் கூறினார்."

img2

ஒரு ஆசிரியரான டாக்டர். செல்லையா, ஆசிரியர்கள் சிறுவர்களிடத்தில் அக்கறை காட்டுவது மிகவும் அவசியம் என்று எண்ணினார். ஆசிரியர்கள் தங்களுக்காக உழைப்பதையும், தங்கள் நலனில் அக்கறைக் கொள்வதையும் பார்க்கும் பொது சிறுவர்கள் மேலும் மேம்பட தயாராக இருப்பதாக அவர் நம்புகிறார்.

எதையும் பிறருக்கு கற்பிக்கும் முன் நாம் முதலில் அதன் கருவை நன்றாகப் புரிந்திருக்க வேண்டும் என்று டாக்டர். செல்லையா கூறுகிறார். ஆசிரியர் பள்ளியில் கற்பிக்கும் போது தற்போதைய மாணவர்களின் மனநிலையை புரிந்து கொள்ள இயலாத நிலையில் இருப்பதை அறிந்த அவர் மீண்டும் மாணவர்களுக்குக் கற்பிக்க விரும்பினார். மதிப்பிற்குரிய ஒரு பள்ளியில் பணி புரிய வாய்ப்பு கிடைத்தும் அவர் ஒரு வட்டார பள்ளியில், குறிப்பாக பிரச்சினை மிக்க ஒரு வகுப்பில் கற்பிக்க விழைந்தார்.

“நான் உங்களை அணைத்துக் கொள்ளலாமா?"

ஆசிரியர்களும், பள்ளிகளும் சிறுவர்களின் வாழ்கையை அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்று கூறினால் அது மிகையாகாது. மாணவர்கள் எதில் ஆர்வத்தோடு சிறந்து விளங்குகிறார்களோ- அது கணிதமாக இருந்தாலும் விளையாட்டாக இருந்தாலும் அதில் ஊக்கப்படுத்தப் பட வேண்டும் என்று டாக்டர். செல்லையா நம்புகிறார். இது அவர்களின் தன்னம்பிக்கையை உயர்த்தும். அனால் கண்டிப்பாக ஒரு பிள்ளையின் வளர்ச்சி பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் கட்டுப்பட்டதல்ல. குறிப்பாக பெற்றோர் வேலை இடத்திலும் மாணவர்கள் பள்ளியிலுமே பெரும்பாலான நேரத்தை செலவிடும் இக்காலக் கட்டத்தில் பெற்றோரும் பள்ளியுடன் சேர்ந்து செயல்பட வேண்டும்.

ஆகையால் பள்ளிகள் இளமைப் பருவத்திலேயே நன்னெறிகளைக் கற்பிப்பது மிகவும் அவசியமாகிறது, முக்கியமாகத் தொண்டூழியம் செய்யும் உணர்வை மாணவர்களுக்கு கற்பிக்கவேண்டும். இந்த செயல்முறையில் ஆசிரியரின் பங்கை டாக்டர்.செல்லையா நன்கு அறிந்துள்ளார். செய்து முடிக்க மற்றொரு சாதாரண பணியாக இதைக் கருதினால், இதன் நோக்கமே குறி தவறியது போல் ஆகிவிடும்.

img3

“இவை விதிகளை அமைத்து வருபவை அல்ல, மனதிலிருந்து வர வேண்டும்"

சிங்கப்பூரின் 50-ஆம் பிறந்தநாளைக் கருத்தில் கொண்டு, டாக்டர்.செல்லையா, நாம் பொருளாதார செழிப்பையும் செல்வத்தையும் அனுபவிக்க கொடுத்துவைத்தவர்கள் என்றும் அடிப்படை மனிதநேய குணங்களான பரிவு மற்றும் அன்பை மறவாது உதவி தேவைபடுவோருக்கு உதவி செய்யவும், உதவியோரை மறவாமல் இருக்க வேண்டும் என்றும் சிங்கபூரர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறார். அவரது கருத்துகளை ஆமோதித்து, தனக்குத்தானே உதவி செய்து கொள்ள முடியாத பலருக்கு உதவி கரம் நீட்டியதற்கு 50முகங்கள் குழுவினர் டாக்டர். செல்லையாவிடம், நன்றி கூற விரும்புகிறோம்.

இந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.

50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.