2015தில் சிங்கை தன் 50ஆவது பிறந்த நாளை கொண்டாடும் சமயத்தில், நமது முன்னோடிகளின் பங்களிப்பை நினைவு கூர்ந்து அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது மிக உகந்த தருனம் என 50முகங்கள் கருதுகிறது. ஆகஸ்ட் 2014 முதல், 50 வாரங்களுக்கு வாரத்து ஒருவராக 50 முன்னோடிகளை காணொளிகள், புகைப்படங்கள், கதைகள் மூலம் சித்தரிக்க முற்பட்டிரிக்கிறோம்.
ஆரம்பித்த கதை
தற்செயலாக ஒரு வயோதிக தம்பர்தியரின் சந்திப்பில் பிறந்தது 50முகாங்கள்.
ஒரு வாரயிறுதி அன்று நாங்கள் (50முகங்கள் தோற்றுவிப்பாளர்களில் இருவர்) ஒரு கடைத்தொகுதியின் வெளியே அமர்ந்து இருக்கும் போது, ஒரு வாடகை உந்து வண்டியில் இருந்து சுமார் 70 வயது வயோதிக தம்பதியர் இருவர் இறங்கினர். அந்த வயோதிகருக்கு தமிழ் நாட்டின் பழம் பெரும் சமூக ஆர்வலர் பெரியார் போல் நீண்ட வெள்ளை தாடி இருந்தது. ஆழகிய பாதிக் சட்டையும் கைலியும் அணிந்திருந்தார் அந்த மூதாட்டி. இருவருமே நடக்க சிரமப்பட்டனர். அந்த பெரியவரின் தடுமாற்றத்தை சமாளிக்க நடை சட்டம் தேவைப்பட்டது. கால் வீங்கி இருந்த அந்த மூதாட்டி கை தடியை பயன் படித்தினார். தள்ளாத வயதிலும் உதவி இன்றி கடைத்தொகுதிக்கு வந்து சிரமப்பட்டு கடைத்தொகுதியை நோக்கி நடந்த இவர்களை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். நுழைவாயிலை கண்டறிய சிரமப்பட்டவர்களுக்கு உதவ முன் வந்த நாங்கள் அவர்களுடன் நண்பர்களானோம். நடமாட சிரமபட்ட அவர்களை ஒரு உணவு அங்காடியில் அமர்த்தி விட்டு அவர்கள் தேடி வந்த பொருளை தேடிச் சென்றோம்.
அனால், அவர்கள் தேடி வந்த பொருள் அங்கிருந்த எந்த கடையிலும் கிடைக்கவில்லை. வெறுங்கையுடன் திரும்பிய எங்களின் நிலையை அவர்கள் புரிந்துக்கொண்டனர். அவர்களுடன் அமர்ந்து உரையாடிய பொழுதுதான், திரு சந்திரன் தன் வாழ்நாளின் பெரும் பகுதியை பிறருக்கு உதவி செய்வதில் கழித்தார் என்பதை அறிந்தோம். இவர் பிறருக்கு இல்லை என்று கூராதவர் என்பதையும் உணர்ந்தோம். 2 மணி நேரம் கழித்து விடை பெற்று சென்றோம். இந்த தற்செயலான சந்திப்பு சந்திரனை போன்ற சாதாரண சிங்கப்பூரர் பலர் நம் நாட்டிற்கு செய்த சேவையை வெளி கொண்டுவரவேண்டும் என்ற எண்ணத்தை தொற்றுவித்தது.
திரு சந்திரனை சித்தரித்ததில் 50முகங்கள் பெருமை படுகிறது.
சாதாரண சிங்கப்பூர்களை பற்றி
சிங்கை இந்திய சமுதாயத்திற்கு பங்களித்த சாதாரண சிங்கப்பூரர்களுக்கு 50முகங்கள் ஓர் அற்பணிப்பு. ஒவ்வொரு சிங்கப்பூரரும் நமது நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பங்காற்ற முடியும் என்பதை எடுத்துக்காட்டும் ஒரு முயற்சி இது. சமூகத் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் தவிர பிறருக்கு உதவ வேண்டும் என்ற தீரா வேற்கை கொண்ட சாதாரண சிங்கப்புரர்கள் இவர்கள். இந்த சாதாரண சிங்கப்பூர் இந்தியர்களின் அசாதாரண கதைகள், நம் அணைவரையும் சமுதாயத்திற்குச் சிறு வழியிலேனும் பங்காற்ற ஊக்குவிக்கும் என்று 50முகங்கள் விரும்புகிறது.
உங்களுக்கு ஒரு முன்னோடியை தெரியுமா?
உங்களுக்கு தெரிந்த ஒரு முன்னோடியை 50முகங்களில் சிந்தரிக்க விரும்பினால், அவர் பெயர் மற்றும் அவர் ஏன் சித்தரிக்கபட வெண்டும் என்ற விபரங்களுடன் contact@50faces.sg என்ற மின்னஞ்சல் வழி தொடர்பு கொள்ளுங்கள்.
நாங்கள் யார்
இந்த முயற்சிக்கு முதுகெலும்பாய் இருப்பது (50முகங்கள் குழு) மணர்வர்களையும் வேலை செய்யும் நிபுணர்களையும் கொண்ட சுமார் 20 தொண்டூளியர்களின் உழைப்பும் ஆவலும் தான். இந்த முயற்சியில் உள்ள அவர்வத்தினாலும் சிங்கப்பூரின் 50வது பிறந்தநாள் கொண்டாதிற்க்கு பங்களிக்க வேண்டும் என்ற விருப்பத்தினாலும், நம்மிடையே உள்ள முன்னோடிகளை கௌவுரவ படுத்துவதுடன் தெரியாத அவர்களின் கதையை சித்தரிக்க விரும்புகிறோம். இந்த முயற்சி சிங்கப்பூரின் ஆரம்ப கால வரலாற்றிக்கு குறிப்பாக சிங்கப்பூருக்கு இந்தியர்களின் பங்களிப்பிற்கு மெருகூட்டும் என்று நம்புகிறோம்.
ஊங்கள் கருத்து
உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவோ எங்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவோ "எங்களை துடர்பு கொள்க (Contact Us) ' பக்கத்தை பாருங்கள் அல்லது மின்னஞ்சல் அனுப்புங்கள். எங்கள் YouTube ஒலிவளியையும் முகநூலையும் பார்க்க தவராதீர்கள். எங்களின் இந்த முயற்சிக்கு உங்கள் ஆதரவை அளித்ததற்கு நன்றி. இணைந்து நம் முன்னோடிகளை கொண்டாடுவோம்.
மின்னஞ்சல் : contact@50faces.sg
இந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.
50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.