வி ஆர் பி மாணிக்கம்

தமிழ் மொழியின் மீது அதிக உயிர் வைத்துள்ளவர்களுள் திரு.VRP மாணிக்கமும் ஒருவராவார். அவர் தமிழ் மொழியின் மீது மகத்தான அன்பு மற்றும் வைப்பதில்லை, நம் தமிழ் மொழியின் மீது உள்ள அன்பு அனைவரிடையே தோன்றுவது அவசியம் என்று உறுதியாக இருக்கிறார்.

திரு. VRP மாணிக்கம் தமிழ் மொழியுடனே வாழ்ந்து வளர்ந்தவர். அவருக்கு தூண்டுகோளாக இருந்தவர்களின் உத்வேகத்தினால் இவர் தனது வாழ்க்கையே தமிழ் மொழியின் மேலுள்ள அன்பிற்கு அர்ப்பணித்துள்ளார். ஆனால், திரு.மாணிக்கம் இந்த அன்பை அனைவரும் உணர ஈடுபட்ட முயிற்சிகளே இவரை தலை சிறந்த ஒரு கல்வியாளராகத் திகழ செய்கிறது.

1952-ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் கறைகளைச் வந்தடைந்த திரு.மாணிக்கம் விவேகானந்தா தமிழ் பள்ளியில் சேர்ந்தார். அப்போது புதிதாக திறக்கப்பட்ட உமர் புலவர் தமிழ் கல்வி நிலையத்தில் இவருக்கு விருப்பப்பட்ட ஆசிரியரான திரு.பாவாடைசாமியிடமிருந்து திரு.மாணிக்கம் உயர் தமிழ் கற்றுக்கொண்டார். இவருக்கு கிடைத்த இந்த நல்ல ஒரு வாய்ப்பை எண்ணி பெருமைப்படுகிறார் திரு.மாணிக்கம். திரு.பாவாடைசாமி இளம் வயதிலேயே திரு.மாணிக்கத்திற்குத் தமிழின்மீதுள்ள ஆர்வத்தை வளர பெரிதளவில் ஊக்கமளித்தார். திரு.மாணிக்கம் ஒரு தமிழ் ஆசியாராவதற்கும் பக்கபலமாக இருந்தவர் திரு.பாவாடைசாமி என்று கூறலாம்.

சில வருடங்கள் சென்நெட் வட்டார பள்ளியில் பணிபுரிந்து அவர் தேயி உயர்நிலை பள்ளியில் சேர்ந்து பின்னர் தமிழ் பாடத்திட்டத்தை மேம்படுத்த கல்வி அமைச்சில் பதவி ஏற்றார். ஆயினும், அவர் 1987-இல் புதிதாகக் கட்டப்பட்ட யிஷுன் தொடக்க கல்லூரியில் தமிழ் பகுதியைத் தொடங்க உதவியப்போது அவருடைய உண்மையான பங்களிப்பு அனைவருக்கும் தெரிய வந்தது.

திரு.மாணிக்கம், 1988-ஆம் ஆண்டில் தொடக்க கல்லூரி தமிழ் கருத்தரங்கு ஒன்றை வெளியிட்டார். தொடக்க கல்லூரி ஆங்கில கருத்தரங்கு ஏற்கனவே சின்னமான நிகழ்ச்சியாக திகழ்ந்து வந்தாலும், வேறு மொழியில் அதைப்போல நிகழ்ச்சி எதுவும் இல்லை. பலர் நம்பிக்கையின்றி இருந்தபோதும் திரு.மாணிக்கம் இந்த கருத்தரங்கை தமிழில் ஏற்றி நடத்தினார். அவர் நடத்திய முதல் கருத்தரங்கிற்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் 300-400 மாணவர்கள் ஆதரவு அளித்தனர். திரு.மாணிக்கம் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தை கட்டிக்காக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வந்ததால் இந்த கருத்தரங்கு வெற்றிகரமான முறையில் நடந்தது. 25 ஆண்டுகள் கடந்து இன்றைக்கும்கூட இந்த தொடக்க கல்லூரி தமிழ் கருத்தரங்கு இடம்பெற்று வருகிறது. இது உயர்நிலை பள்ளிகள் மட்டுமல்லாமல் தொடக்க கல்லூரிகளிலும் சின்னம்மான நிகழ்ச்சியாக பெயர் கொண்டு வருகிறது.

img1

"எனக்கு கிடைத்த ஆதரவினால்தான் என்னால் தொடர்ந்து செல்ல முடிந்தது."

திரு.மாணிக்கம் தாம் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளுக்கு தமிழ் ஆசிரியர்கள் சங்கத்தின் உதவியையும் ஆதரவையும் பயன்படுத்திக்கொண்டார்.அவர் 1970-லிருந்து 1982-வரை தமிழ் ஆசிரியர்கள் சங்கத்தின் செயலாளராகப் பதவி ஏற்றார். அவர் பலரிடம் நட்பு கொண்டிருந்ததால் அவரால் மாணவர்களிடையே தமிழ் ஆர்வத்தை வளர்க்க பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த முடிந்தது.

இவர்கள் தொடக்கப்பள்ளி, உயர்நிலை பள்ளி, மற்றும் தொடக்க கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு சிறுகதை எழுதும் போட்டி, பேச்சு போட்டி, விவாத போட்டி, கட்டுரை போட்டி என பற்பல போட்டிகளை ஏற்பாடு செய்தனர். இந்தப் போட்டிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒவ்வொரு ஆண்டும் இப்போட்டிகள் பிரபலமடைந்து வந்தன. ஆசிரியர்கள், பெற்றோர்கள், நாம் தமிழ் சமுதாயம் என பலர் ஒன்று கூடி இந்த நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு அளித்து வந்தனர்.

தங்களது பார்வையை சர்வதேச அளவில் கொண்டு செல்லவும் தமிழ் மொழியைப் பற்றி கற்றுக்கொள்ளவும் அதைச் சொல்லிக்கொடுக்கும் முறையைப் பற்றி கற்றுக்கொள்ளவும் தமிழ் ஆசிரியர்கள் சங்கம் மேன்மேலும் தெரிந்துகொள்ள விரும்பியது. ஆகையால், திரு.மாணிக்கத்தின் தலைமையில் இந்தியாவில் ஒரு தமிழ் ஆசிரியர் மாநாடு நாடத் ஏற்பாடு நடந்தது. மீண்டும் இதன் நோக்கத்தை அறியாதவர்கள் குரல் எழுப்பினர். ஆனால், திரு.மாணிக்கம் இத பொறுட்படுத்தாமல் தொடந்து செயல்பட்டார்.

img1

"நாங்கள் உலக தமிழ் ஆசிரியர் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்தோம். எல்லோரும் ஏன் இதை செய்கிறீகள் என்று கேள்வி எழுப்பினர்."

தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஒரே சிந்தனை கொண்ட ஒருசில தமிழ் ஆசிரியர்கள் திரு.மாணிக்கத்திற்குத் தங்களது ஆதரவை அளித்தனர். இருந்தாலும், சர்வதேச அளவில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்ய 15-20 பேர் போதவில்லை. அதனால் அவர் நாம் தமிழ் சமுதாயத்தின் உதவியை நாட்டினார். பலர் பண உதவி கொடுத்து உதவினர், மற்ற சிலர் உதவி செய்ய முன்வந்தனர். பற்பல சமுதாயக் குழுக்கள், உணவகங்கள், அச்சிடும் நிறுவனஙகள், ஊடக நிறுவனங்கள், அரசாங்கம் முன்வந்ததால் இந்த நிகழ்ச்சி ஒரு மறக்க முடியாத ஒன்றாக திகழ்ந்தது.

தமிழ் ஆசிரியர்கள் சங்கம் பின்னர் தங்களது பார்வையை தேசிய அளவிற்குத் திசை திருப்பியது. இருப்பினும் அது தமிழ் மொழியை காக்கும் பணியில் தொடர்ந்து முயற்சி செய்து வந்தது.

img1

"அனைவரும் வந்து எங்களுக்கு இரவு பகலும் உதவி செய்தார்கள். உண்மையிலேயே பாடுபட்டார்கள்."

திரு.மாணிக்கம் ஆசிரியர் துறையிலிருந்து 2004-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இருந்தாலும் அவர் தொடர்ந்து யிஷுன் தொடக்க கல்லூரியில் தற்காலிக ஆசிரியராக தமது பணியைச் செய்து வருகிறார்.

அவருடைய வாழ்க்கையின் அடுத்த கட்டமாக அவர் புத்தக்ங்களை எழுதுகிறார் என திரு.மாணிக்கம் 50 முகங்களிடம் கூறினார். இவர் முன்பு 1973-ஆம் ஆண்டிலேயே தமது நண்பர்களான திரு.சாமிக்கன்னுடனும் திரு.மசுதுடனும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குத் தமிழ் மொழி தேர்வு வழிக்காட்டி புத்தகத்தை சேர்ந்து எழுதியுள்ளார். அதுவே அவர் எழுதிய முதல் புத்தகமாகும்.

அவர் ஓய்வு பெற்ற காலத்திலிருந்து இருபதுக்கும் மேம்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இவை கல்வி சார்ந்த புத்தகங்கள், ஊக்கமூட்டும் புத்தகங்கள், மதம் சார்ந்த புத்தகங்கள் என பல தலைப்புகள் சார்ந்த புத்தகங்களாகும். ஒவ்வொரு ஆண்டும் திரு.மாணிக்கம் ஒரு புத்தகத்தை வெளியிட திட்டங்கள் கொண்டுள்ளார். தனது நண்பர்கள் மற்றும் தனது நலன் கருதுபவர்களுக்கும் நன்றியுடன் இருக்கிறார் இவர். பல தலைப்புகள் சார்ந்த புத்தகங்களை எழுதியிருப்பதால் அவருக்கு மிகப் பிடித்த புத்தகத்தைத் தேர்ந்தெடுக்க சொல்வது கடினமான ஒன்று தான் என்கிறார் திரு.மாணிக்கம்.

img1

"தமிழ் இலக்கணத்தைக் கண்டு பயந்து மாணவர்கள் அதை தவிர்க்க முயன்றனர்."

தமிழ் கல்விக்காக அவர் அளித்த பங்களிப்புக்காக திரு. VRP மாணிக்கத்திற்குத் தமிழ் முரசின் மிகச் சிறந்த தமிழ் ஆசிரியர் விருது விழாவில் 2013-ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

முன்னைய காலத்தைவிட இன்று தமிழ் கல்விக்கு வெவ்வேறு சவால்கள் உள்ளன என்று திரு.மாணிக்கம் எடுத்துரைத்தார். இன்றைய காலத்தில் தமிழ் மொழியை பயன்படுத்தும் வாய்ப்புகள் குறைந்துக்கொண்டே வருகிறது. இருந்தாலும், நமது இளைய தலைமுறையினர் புதுமையான வழிகளில் இந்த வளர்ந்து வரும் பிரச்சனையை எதிர்நோக்குவர் என்று அவர் முழு நம்பிக்கை கொள்கிறார்.

இதற்கிடையில், திரு.மாணிக்கம் தனது "அடுத்த பிள்ளையின் பிறப்பை முன்னிட்டு" அதாவது தனது அடுத்த புத்தகத்தை எழுதும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம். தமிழின் வளர்ச்சிக்கு அளித்த பங்கிற்கு 50 முகங்கள் திரு.மாணிக்கத்திடம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. அவர் எதிர்காலத்தில் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறோம்.

img1

இந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.

50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.