ரா யோகேஸ்வரி & கா தியாகராஜா

இன்றைய இளம் தம்பதியினர் தங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவழிப்பதா நல்ல ஒரு காரியத்திற்கு தொண்டுழியராக உதவுவதா என்று எண்ணி குழப்பம் அடையலாம். திரு.தியாகா மற்றும் திருமதி.யோகேஸ் இவ்விரண்டிற்கும் சமநிலை தந்து சமுக சேவையிலும் ஈடுபடுகின்றனர், இருவரும் ஒன்றாகவும் நேரத்தை செலவழிக்கின்றனர்.

திரு.தியாகா மற்றும் திருமதி.யோகேஸ் இருவரும் இளம் வயதிலேயே தங்களது பெற்றோரை இழந்தவர்கள். இருந்தாலும், அவரவர் வாழ்க்கை வேறுப்பட்டது. திருமதி.யோகேஸ் தனது குடும்பத்துடன் மலேசியாவிலேயே இருந்தார். அனால் திரு.தியாகா தனது குடும்பத்துடன் மீண்டும் ஸ்ரீ லங்கா நாட்டிற்கு தனது உறவினர்களுடன் சேர்ந்து வாழ புறப்பட்டார். திருமதி.யோகேஸின் சகோதரர்கள் அவருக்கு உதவியதால் அவரால் சாதாராண வாழ்க்கையை வாழ முடிந்தது. திரு.தியாகாவோ கிராம வாழ்க்கைக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டது. இருந்தாலும் அவர் பெரிதும் சந்தோஷமாக தான் வாழ்ந்து வந்தார்.

"நான் ஒரு சிறு விவசாயியாக என்னுடைய தாத்தாவுடன் விவசாயம் செய்து, பசுகளுடன் விளையாடி, நெல் வயலில் மாட்டு வண்டியோட்டி சந்தோஷமாக எனது வாழ்க்கையை கழித்தேன்."

தங்களது வளர்ப்பில் வேறுபாடுகள் இருந்தாலும், இருவருக்கும் பிறருக்கு உதவுவது எவ்வளவு அவசியம் என்று தெரிந்தது. தனது குடும்பத்தினரும் நண்பர்களும் எதிர்ப்பு தெரிவித்தபோதும் திருமதி.யோகேஸ் தான் கல்யாணம் செய்து கொள்வதற்கு முன்பே தாதியராக பணி புரிந்தார். 1966-இல் அவர் கல்யாணம் செய்த பின்பு சிங்கபூருக்கு குடி பெயர்ந்தபோது தாதியர் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் அவர் தொடர்ந்து தாதியராக வேலை செய்தார். திரு.தியாகா தனது படிப்பை முடித்துக்கொண்டு சிங்கப்பூர் சுற்றுப்புற அமைச்சில் 1958-இல் சேர்ந்தார். 'சிங்கப்பூரை தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள்' என்ற திட்டத்தில் குறிப்பாக சிங்கப்பூர் ஆறை சுத்தப்படுத்தும் திட்டத்தில் அவர் பெரும் ஈடுபாடு கொண்டார். அந்த காலம் திரு.தியாகாவிர்க்கு கண்டிப்பாக ஒரு சவால் மிக்க ஒன்றாகத்தான் இருந்தது. பன்றி பண்ணையை சுத்தம் செய்வது, குப்பை பொறுக்குவது, கடைகாரர்களிடமிருந்து அடி வாங்குவது அனைத்தையும் திரு.தியாகா பொறுமையுடன் செய்து வந்தார்.

"அவர்களது வாழ்க்கையை கெடுக்க வருகிறோம் என்று தவறாக எண்ணி அவர்கள் எங்களை நோக்கி கத்திகளுடன் வருவார்கள்."

திரு.தியாகாவும் திருமதி.யோகேஸும் வேலையாக இருந்தாலும் சமுக சேவைக்கு நேரத்தை வகுத்துக்கொண்டனர். அவர்கள் கபுன் பாரு குடியிருப்பாளர்கள் குழுவில் தங்களது சேவையை ஆரம்பித்தனர். திரு.தியாகா 1980-இலும், திருமதி.யோகேஸ் 1984-இலும் ஆரம்பித்தார். திரு.தாகா குடியிருப்பாளர்கலிடையே நட்புணர்வை வலுப்படுத்துவதில் உதவி வந்தார். திருமதி.யோகேஸ் சமுக நிலையத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்சிகளின் ஏற்பாட்டில் உதவி வந்தார்.

திருமதி.யோகேஸ் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்ததோடு சில நிகழ்ச்சிகளில் அவர் தலைவராகவும் பொறுப்பேற்றிருக்கிறார். அவர் நடத்திய நடவடிக்கைகளுள் ஒன்று முதியோருக்கான உடற்பயிற்சி வகுப்புகள். இந்த வகுப்புகளை அவர் கடந்த 29 வருடங்களாக 10-11 நிலையங்களில் வசதி குறைந்தோருக்கும் முதியோருக்கும் நடத்தி வருகிறார். ஒரு நாளில், அவர் சில சமயங்களில் இரண்டுக்கும் மேற்பட்ட நிலையங்களுக்கு சென்று வகுப்பு நடத்த வேண்டியிருக்கும். ஆயினும், திருமதி.யோகேஸ் நேரத்தை நன்கு வகுத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். அது மட்டுமின்றி, அவரால் பிறருக்கு உதவி அவர்களை மகிழ்விக்க முடியும் என்பதை எண்ணி சந்தோசம் அடைகிறார்.

அதே சமயம், குடியிருப்பாளர்கள் குழுவின் உறுப்பினரான திரு.தியாகா தமது வட்டார குடியிருப்பாளர்களுக்கு கொண்டாட்ட நிகழ்ச்சிகளையும், குடியிருப்பாளர்கலிடையே நட்புணர்வை வலுப்படுத்தும் நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்து வந்தார். அதோடு அவர் இளையகர்ளிடையே நிலவும் பிரிச்சினைகளை முன்னிட்டு ஒரு நாடகத்தையும் தயாரித்து வந்துள்ளார். அது மட்டுமல்ல, அவர் தனது குடியிருப்பாளர்கள் குழுவை தேசிய அளவில் பிரதிநிதித்தார். இன நல்லிணக்கம் நிகழ்ச்சிகள், அவசர காலப் பாதுகாப்பு நிகழ்ச்சிகள் போன்றவற்றில் திரு.தியாகா தனது மனையுடன் சேர்ந்து உதவியுள்ளார். கலகலப்பான தனது மனைவியை அவர் பேசவிட்டு அமைதியாக இருந்தாலும், திரு.தியாகா குடியிருப்பாளர்கள் குழுவில் தான் செய்த வேலையை பற்றி பேசும்போது தயங்காமல் மனம் விட்டு பேசுகிறார். இது, அவர் நமது சமுகத்தின் மேல் அதிக அன்பும் பெருமையும் வைத்திருக்கிறார் என்பதற்கான அடையாளம்.

img1

"என்னால் பணம் கொடுத்து உதவ முடியாது. இந்த வகையிலாவது நான் அவர்களுக்கு என்னால் முடிந்ததை செய்து மகிழ்விக்க முடிந்தது."

தற்போது, இருவரும் ஒன்று சேர்ந்து முதியோரை சென்று காணும் ஒரு திட்டத்தை குடும்ப சேவை மையத்தின் மூலம் உதவி வருகின்றனர். சமூக தொழிலாளர்கள் அவர்களிடம் யார் யாருக்கு உதவி தேவை என்று வந்து கூறும்போது, இவர்கள் பெரும்பாலாக தனியாக வாழும் முதியோர்களை சென்று காணுவர். முதியோருக்கு பல்வேறு வகைகளில் உதவி வந்தனர். அவர்கள் கூடவே சென்று மருத்துவரை காண்பது, உணவுகளுக்கு தயார் செய்வது, சுத்தம் படுத்துவது போன்றவற்றை முதியோருக்கு செய்து வந்து அவர்களுடன் ஒரு வலுவான உறவை ஏற்படுத்திகொண்டனர்.

இது போன்ற திட்டத்தில் ஈடுபட்டதால், திருமதி.யோகேஸும் திரு.தியாகாவும் முதியோர்கள் வாழும் கஷ்டமான வாழ்க்கை நிலைமைகள் அனுபவித்து நினைவு கூற முடிந்தது.

"நம்மிடையே வாழும் சிங்கப்பூரர்கழும் கஷ்டமான சூழல்களில் வாழ்கின்றனர், அனால் நம்மில் பலர் இதை உணராமல் வாழ்கிறோம்." என்கிறார் திரு.தியாகா. திரு.தியாகாவும் சரி திருமதி.யோகேஸும் சரி முதியோர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து பொறுமையாக உரையாடுவர். "ஒவ்வொரு முதியோருடைய கண்களும் கதை ஒன்று கூறும், அவர்களுடைய வாழ்க்கை அனுபவங்கள் அனைத்தும் அதில் சேரும் என்பதால் நாம் அதை புறக்கணிக்க கூடாது." என்று திருமதி.யோகேஸ் கூறுகிறார்.

"சிங்கப்பூரர்களும் அந்த நிலையில் வாழ்வது ஆச்சரியமாகத்தான் இருந்தது."

சிங்கப்பூரின் 50-ஆம் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நெருங்கி வரும் வேளையில், மேலும் பல இந்தியர்கள் தாங்கள் முதியோருக்காக ஏற்பாடு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட முன்வருவர் என்று திருமதி.யோகேஸும் திரு.தியாகாவும் விரும்புகின்றனர். அதோடு, நமது நாட்டிற்க்கு இதுவரை உதவிய முன்னோடி தலைமுறைக்கு தங்களது நன்றியையும் இருவரும் தெரிவித்து கொள்கின்றனர். நமது முன்னோடி தலைமுறையினரின் தன்னலமற்ற குணம் அடுத்த தலைமுரையினரிடையேவும் தென்படும் என்று அவ்விருவரும் நம்பிக்கை கொள்கின்றனர்.

திருமதி.யோகேஸும் திரு.தியாகாவும் நம் அனைவரும் ஆசைபடும் சந்தோஷமான திருமண வாழ்க்கையை முதிய வயதில்கூட வாழ முடியும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றனர். 50 முகங்கள் அவர்களது பங்களிப்புகளுக்கு எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறது, அவர்கள் இருவருக்கும் எங்களது உள்ளங்கனிந்த வாழ்த்துக்கள்!

"நான் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற நபர். இது போன்ற நடவடிக்கைகள் இல்லையெனில், நான் என்ன செய்வேன்? எனது மூளை செயலற்றுப் போகும்!"

இந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.

50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.