நடேசன் சந்திரா

"சிங்கபூரர் ஆகிய நான் லஞ்சத்தை ஏற்றுக்கொள்ள மாட்டேன்." என்று பிபா காற்பந்தாட்ட நடுவரான நடேசன் சந்திரா கூறியதை புகிட் பாதொக்கின் அமைச்சர் ஓங்க சிக் சூன் 1988-இல் நாடாளுமன்றத்தில் லஞ்சத்தை பற்றி கருத்துரைக்கும்போது எடுத்துரைத்தார்.

இது நாம் பெருமைகொண்ட சிங்கபூரர்களாக திகழ்வதற்கான முக்கிய அடையாளாமாக திரு.சந்திராவை காட்டியது.

11 பிள்ளைகளுள் மூன்றாம் பிள்ளையாக பிறந்த திரு.சந்திரா பிரிக்வர்கஸ் பகுதியில் (தற்போதைய புகிட் மேரா பகுதி) எளிமையான சூழலில் வளர்ந்தார். அன்றைய காலத்தில், பல்வேறு இனத்தவர்களான சீனர்கள் மலாய் இனத்தவர்கள் மற்றும் இந்தியர்கள் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக கம்புங் உணர்வுடன் வாழ்ந்து வந்தனர். இன்றைய நவீன காலக் கட்டத்தில் இது போன்ற கம்புங் உணர்வை காண்பது அரிது என்கிறார் திரு.சந்திரா.

திரு.சந்திராவின் தந்தை இயந்திர ஓட்டுனராக குறைந்த வருமானத்தை ஈட்டி வந்தாலும் சந்திராவுக்கு நல்ல பழக்க வழக்கங்களையும் சிறந்த குணம் படைத்தவர்காளாக திகழவும் கற்றுகொடுத்தார். எவ்வளவு சவால் நிறைந்த தருணமாக இருந்தாலுமகூட திரு.சந்திரா தன தந்தை சொன்னதை நினைவில் வைத்துக்கொள்வார்.

img1

“பிரிக்வர்கஸ் பகுதியிலிருந்து நான் மட்டும் தான் ராபிள்ஸ் கல்வி நிலையத்திற்கு சென்றேன்.

தனது இளம் வயதில், திரு.சந்திரா வெவ்வேறு விளையாட்டுகளில் ஈடுபாடு கொண்டாலும் காற்பந்தாட்டம் அவரது மனதில் ஒரு தனி சிறப்பிடத்தை பிடித்தது. அவர் பேரர் பார்க்கில் மற்ற குழுக்களுடன் அடிக்கடி காற்பந்து விளையாடுவார்.

அவர் சிங்கப்பூர் காற்பந்து சங்கத்தின் சந்திப்பு ஒன்றில் கலந்துக்கொண்டப்போது, அவர் காற்பந்து போட்டிகளில் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் அவர் காற்பந்து விளையாட்டாளர் மட்டுமல்ல, காற்பந்து அதிகாரியாகவும் பதவியேற்றார்.

இக்காரணத்தினால், சந்திரா 1966-இல் நடுவர் ஆவதற்கான வகுப்பில் சேர்ந்தார். 24 மாதங்களில் முடிக்க வேண்டிய வகுப்பை வரும் 13 மாதங்களில் முடித்தார் திரு.சந்திரா. அவர் படிப்படியாக முன்னேறி அடுத்த 12 ஆண்டுகளுள் பிபாவில் நடுவர்களுக்கான மிக உயர்ந்த நிலையை அடைந்தார்.

“ஒரு காலத்தில், எல்லோரும் "சந்திராவை பார்க்க வேண்டுமானால், பேரர் பார்க்கில் சந்திக்கலாம்" என்று கூறுவார்கள். ”

மிகப் பெரிய காற்பந்து விளையாட்டில் முக்கிய பங்கை ஆற்றுவது சவால் மிக்க ஒன்று தான். ஆனால் 1987-இல் மத்திய கிழக்கு நாடுகளான குவைத் மற்றும் ஈராக்கிற்கும் இடையே நடந்த காற்பந்தாட்ட விளையாட்டுகளின் போது திரு.சந்திராவுக்கு கசப்பான நினைவுகள் இருந்தது என்று நினைவுகூர்ந்தார்.

திரு.சந்திரா சிங்கப்பூரை விடுவதற்கு முன்பே யார் யாரோ தனது வீட்டிற்கு தொலைபேசியின் மூலம் தொடர்புகொள்ள முயற்சி செய்தனர். இருந்தாலும், அவருக்கு வந்த அனைத்து தொலைபேசி அழைப்புகளையும் அவரது மனைவி தான் எடுத்து பேசினார். அதோடு, அவரது பயண செலவுகளுக்கு கூடுதலான பணத்தை கொடுக்கவும் சிலர் முயன்றனர். திரு.சந்திரா இவற்றை இலஞ்சத்திற்க்கு சமமாக எண்ணியதால் ஏற்றுக்கொள்ளவில்லை.

அந்த குறிப்பிட்ட காற்பந்து போட்டி மிகவும் பதற்றமான சூழ்நிலையில் தான் விளையாடப்பட்டது. போட்டி முடிந்தபோது தோல்வியடைந்த இராக்கிய விளையாட்டாளர்கள் திரு.சந்திராவை துரத்தி அவரைக் காயப்படுத்த முயற்சி செய்தனர். அவர் கோபம் நிறைந்த இராக்கிய குழுவிலிருந்து ஓடி தப்பிக்க வேண்டியதாக ஆனது. அதன் பின்னர், அவர் காவலர்களின் பாதுகாப்பில் வேறொரு தாங்கும் விடுதிக்கு மாற்றப்பட்டார். அடுத்த நாள், அவர் குவேட்டை விட்டு வீடு திரும்பினார். ஆனால் அங்கு ஏற்பட்ட கசப்பான நினைவுகள் அனைத்தையும் இன்று கூட அவரால் நினைவுக்கூற முடிகிறது.

600 - 700 போட்டிகளில் நடுவராக திரு.சந்திரா பணிப்புரிந்தார். அவர் சர்வதேச நடுவர் பணியிலிருந்து ஒய்வு பெற்று அதன் பின்னர் சிங்கப்பூர் காற்பந்து லீக்கில் போட்டி ஆணையராக பதவியேற்றார்.

img2

"நான் அவரிடம் எனது கை கடிகாரத்தை காட்டினேன். அவர் திடீரென்று என்னை அடிக்க வந்ததால், நான் அவரது அடியை தவிர்த்து ஓட ஆரம்பித்தேன்.

சமூக விவகாரங்கள் அமைச்சரகத்தில் வழக்கமான அரசாங்க வேலை மற்றும் நடுவர் வேலையை தவிர்த்து திரு.சந்திரா வேஸ்ட் கோஸ்ட் சமூக நிலையத்திலும் தலைவராக இருந்தார்.

அவர் தற்செயலாக சமூக நிலையத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது அவரது நண்பர்கள் அவரை தலைவராக வாக்களிப்பார்கள் என்று அவர் எண்ணவில்லை. ஆயினும் அவர் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டு நமது இந்திய சமுகத்தை பிரதிநிதித்து நமது சமதாயம் வளம் பெற உதவி வந்தார். திரு.சந்திரா தலைவராக பணிபுரிந்த காலத்தில் சமூக நிலையத்தில் மற்ற மொழி செய்தித்தாள்களோடு தமிழ் செய்தித்தாளும் கிடைத்தது.

ஆனால் விளையாட்டு துறையில் திரு.சந்திரா அதிக ஈடுபாடு கொண்டதால், அவர் 5 வருடங்களுக்கு பிறகு சமுக நிலையத்திலிருந்து தனது தலைவர் பதவியை விட்டார். அவரது வேலையிடத்தில் அவர் சமூக நலத்துறையில் இருந்தபோதும் நிர்வாக பதவியை தான் விரும்பினார். அவரது மேலதிகாரி அவரால் சமூக நலன் அதிகாரியாக பணி புரிவதற்கு தகுதி உள்ளது என்று வாய்ப்பு அளித்தபோதும் திரு.சந்திரா அதை மறுத்தார். வேலையில் மாற்றங்கள் செய்து அவரால் விளையாட்டு போட்டிகளில் நடுவராக பணியாற்ற நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியாது என்று திரு.சந்திரா பயந்தார்.

ஆயினும், தனது அரசாங்க வேலையிலும் கூட அவரால் தனக்கு விருப்பமான காற்பந்து விளையாட்டை விட்டுக்கொடுக்க மனம் வரவில்லை.

img2

"நான் இதை என் சொந்த பயனுக்காக செய்கிறேனா? நான் எனது குழு உறுப்பினர்களுக்கு செய்கிறேன்!”

பொது சேவையிலிருந்து 2003-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற திரு.சந்திரா ஆதரவற்ற இல்லங்களில் தொடர்ந்து தனது உதவியை அளித்து வந்தார். அவர் ஆதரவற்ற இல்லங்களில் வசித்து வருகின்றவர்களின் மருத்துவ தேவைகள் மட்டுமல்லாமல் அவர்களது உணர்ச்சி மற்றும் உளவியல் தேவைகளையும் பார்த்துக்கொண்டார். தற்போது, அவர் குடியிருப்பாளர்கள் வேலைகளைப் பெற்று அவர்களுக்கென வீடுகளையும் பெற்று மீண்டும் சமுதாயத்துடன் ஒன்று சேர்ந்து வாழ பெரும் உதவி வருகிறார்.

தற்செயலாக, சிங்கப்பூர் நமது 50 ஆண்டு பிறந்தநாளை கொண்டாடும் அதே சமையத்தில் திரு.சந்திராவும் தனது 50 ஆண்டு திருமண நிறைவை கொண்டாடுகிறார். இந்த வருடத்தின் ஆரம்பத்தில் அவரும் அவரது மனைவியும் தங்களது உற்றார் உறவினர்களுடன் தங்களது 50-ஆம் ஆண்டு திருமண நாளை சந்தோஷமாக கொண்டாடினர் என்று திரு.சந்திரா அன்புடன் நினைவுக்கூருகிறார்.

சிங்கப்பூரின் முன்னோடி பயணத்தில் பெரும் பங்கையாற்றிய திரு.சந்திராவிற்கு 50 முகங்கள் எங்களது வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது - இவர் லஞ்சம் வாங்காத சிங்கப்பூரராக என்றும் அனைவரது மனதிலும் சிறப்பான இடத்தை பிடித்துள்ளார்.

img2

 

இந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.

50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.