டேவிட் ஜெரால்ட் ஜெயசேகரம்

இலங்கையில், 1950களின் பிற்பகுதியில் நடைபெற்ற உள்நாட்டுப் போருக்கு இடையே வளர்ந்தவர் திரு டேவிட் ஜெரால்ட், ஒரு வழக்கறிஞர், முன்னாள் நீதிபதி, SIAS அமைப்பின் தலைவர். அங்கே பெற்ற அனுபவம் அவருக்குள் மறக்கமுடியாத உணர்வை ஏற்படுத்தியது. சிறுபான்மை தமிழர்கள், பெரும்பான்மையினரால் ஒடுக்கப்பட்டதைப் பார்த்த அவருக்குள் நீதி, சமத்துவம் என்ற உணர்வுகள் வளர்ந்தன.

நீதிபதியாகப் பணியாற்றியபோது, திரு ஜெரால்ட், பாதிக்கப்பட்ட பல சிறுவர்களைப் பார்த்தார். அவர்களை வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்பச் செய்ய அதிக நேரத்தை அர்ப்பணித்தார். இளையர்களுக்கு உதவ நிறைய அமைப்புகளும் இல்லங்களும் இருந்தாலும், தனிப்பட்ட கவனிப்பைப் பெறும் சிறுவர்களிடம் நிறைய மாறுதல்கள் தெரிவதாகத் திரு ஜெரால்ட் நம்பினார். சிறுவர்களுக்கு நம்பிக்கையைப் பெற்று அவர்களின் முழு ஆற்றலையும் வெளிக்கொணர முடியும் என்று அவர் எண்ணினார்.

img1

அதில் குண்டர் கும்பலைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் கவனித்துக் கொண்டது ஒரு சிறந்த உதாரணம். அந்தக் கதை எந்தத் திரைப்படக் கதையையும் மிஞ்சிவிடும். ஓர் இளம் பெண், குண்டர் கும்பலில் இருந்து மீண்டு, பள்ளியில் நல்ல மதிப்பெண்களைப் பெறத் தொடங்கினாள். அதற்குக் காரணம் திரு ஜெரால்ட்டின் தலையீடுதான். அந்தக் கதையைத் தெரிந்து கொள்வது அவசியம்.

“நீ என் மகலாக இருக்க விருப்பமா?"

மற்றவர்களுக்கு எப்போதும் உதவி செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை கொண்ட திரு ஜெரால்ட்டின், அதே குணம்தான் SIAS அமைப்பை அமைக்கக் காரணமாக இருந்தது. 1998ல் ஆசிய நிதி நெருக்கடிக்குப் பிறகு, மலேசியா 170 000 ஆயிரம் முதலீட்டாளர்களின் பங்குகளை முடக்கியது. அதன் மதிப்பு சுமார் $5 மில்லியன். சட்டவிரோதமான பங்குகள் என்று அறிவிக்கப்பட்ட அவற்றை மீண்டும் பெற தனிப்பட்ட முறையில் 52% அபராதமாகச் செலுத்த வேண்டும் என்று நிபந்தனை முன்வைக்கப்பட்டது.

சொந்த முதலீடு $5000 என்றாலும், மலேசியா பயன்படுத்தியத் தந்திரங்களைக் கண்டு ஆத்திரமடைந்த அவர், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.

அப்போது வழக்கறிஞராக இருந்த அவருக்கு மெடிக்கோ சட்ட அமைப்பு, ஏப்பெக்ஸ் கிளப் ஈஸ்ட் போன்ற அமைப்புகளை நிறுவிய அனுபவம் இருந்தது. பங்குதாரர்களைத் திரட்டி, SIAS என்ற அமைப்பின் கீழ் அவர்களுக்காக ஒரு வலுவான குரல் கொடுக்கும் நிலை உருவானது. நிலைமையைத் தகவல் சாதனங்களுக்குத் தொடர்ந்து தெரிவித்துக் கொண்டு இருந்தார். வர்த்தகர்களை ஒரு வழிக்குக் கொண்டு வந்தார். மலேசியாவின் மிரட்டல்களுக்கு அவர் வளைந்து கொடுக்கவில்லை. இறுதியில் மலேசிய அரசாங்கத்துடன் அந்த விவகாரத்தில் சாதகமான உடன்பாடு ஏற்பட்டது.

இருப்பினும் அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பல சிங்கப்பூரர்கள் மலேசியாவில் முதலீடு செய்ய இன்றுவரை தயங்குகின்றனர்.

“வல்லுனர்களாகிய நாம் எப்பொழுதும் பிறருக்கு உதவ முன்வர வேண்டும்."

மலேசிய முதலீட்டு நெருக்கடியைத் தொடர்ந்து, திரு ஜெரால்ட் இப்போது ஒரு முடிவுக்கு வர வேண்டி இருந்தது. SIAS அதன் அடிப்படை நோக்கத்தை நிறைவேற்றிவிட்டது. அந்த அமைப்பைக் களைத்துவிட்டு அவர் சட்டத்துறைக்குத் திரும்புவதா அல்லது அதை மேலும் தொடர்வதா? பல முதலீட்டாளர்களோடு அவர் கலந்து பேசியது, மலேசிய விவகாரத்தின்போதுதான். பலருக்கு விவரங்களோ, முதலீடு செய்யும் நிறுவனங்களுக்குப் பின்னால் இருக்கும் ஆபத்து பற்றியோ அவர்கள் அறிந்திருக்கவில்லை. இன்னொருவரின் சிபாரிசைப் பின்பற்றி அவர்கள் பெரும்பாலும் முதலீடு செய்தனர்.

img2

பெரும்பாலான முதலீட்டாளர்களுக்கு நிதித்துறைப் பற்றிய கல்வி இருக்கவில்லை என்பதை அறிந்த திரு ஜெரால்ட்டும் அவரின் குழுவினரும், நாடளாவிய கல்வித் திட்டத்தைத் தொடங்கினார்கள். முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்வது பற்றியும் அவற்றை ஆய்வு செய்வதைப் பற்றியும் எடுத்துக்கூறப்பட்டது.

புத்திசாலித்தனமாக முதலீடு செய்வது குறித்து பல இந்தியர்கள் முன்வருவதில்லை என்பதை அவர் தமது அனுபவத்தில் அறிந்தார். இந்திய சமூகம் பெருமளவில் முதலீடு செய்ய வேண்டும் என்று கூறும் அவர், சேமிப்பைப் பயன்படுத்தி ஓய்வு காலத்தின் தேவைகளை ஈடு செய்வது நாம் அனைவரும் எதிர்நோக்கும் சவால் என்றும் கூறுகிறார்.

வழக்கறிஞராக இருந்தபோது, உண்மையான பிரச்சனை உள்ளவர்களுக்கு, அவர்களுக்குப் பணப் பிரச்சனை இருந்தாலும் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தவர் திரு ஜெரால்ட்.

“யோசிக்காமல் முதலீடு செய்வது வெறும் சூதாட்டம் தான்."

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதும், நிர்வாகத் தந்திர முறையைப் பயன்படுத்தி சிக்கல்களைத் தீர்த்து வைப்பதும் SIAS தோற்றுவிக்கப்பட்டதில் இருந்து திரு ஜெரால்ட்டின் தனித் திறமைகளாயின. அது மட்டும் இன்றி, ஓய்வு பெற்ற பிறகு வேலை வாய்ப்பைத் தேடும் முன்னாள் காற்பந்தாட்ட வீர்ர்களுக்கான சங்கத்தை அமைத்துக் கொடுத்தார். அவர் வசதி குறைந்தவர்களுக்கு உதவ பொருட்களைத் திரட்டி அவற்றை மறு விநியோகம் செய்யும் ஏப்பெக்ஸ் கிளப் ஈஸ்ட்டை அமைத்தார்,

img4 img3  

பல விஷயங்களைச் செய்திருப்பினும், அவரது பணி ஓய்வுக் காலத்திற்குப் பிறகும் திரு ஜெரால்ட் தமது சமூகச் சேவையையும் தேவாலயத்தில் தொண்டூழியத்தையும் தொடர விரும்புவதாக விருப்பம் தெரிவித்துள்ளார். துடிப்புமிக்க திரு ஜெரால்ட் தான் ஓர் இடத்தில் அமர்ந்திருப்பதில்லை என்றும் தன்னைத் தானே மகிழ்விக்க அவர் எதையாவது செய்ய வேண்டும் என்றும் கூறினார்

“என்னால் சும்மா உட்கார்ந்து ஒன்றும் செய்யாமல் இருக்க முடியாது."

சிங்கப்பூருக்கு முதன் முதலில் வந்த காலக்கட்டத்தின்போது சிறுபான்மையினருக்கு ஆதரவான கொள்கைகளை திரு லீ குவான் இயூவும், அரசாங்கமும் வகுத்ததை நினைத்துப் பார்க்கிறார் திரு ஜெரால்ட். சமத்துவத்தில் சிங்கப்பூர் ஆக உன்னத நிலையை எட்டவில்லை என்றாலும், அனைத்து குடிமக்களுக்கும் சமமான வாய்ப்பை வழங்க அந்தக் கொள்கைகள் உதவுகின்றன.

img5 img6

சிங்கப்பூரின் வெற்றிக்குப் பங்காற்றிய திரு லீ குவான் இயூ, தொடக்க கால அரசாங்கம், முன்னோடிகள் போன்றவர்களுக்கு அவர் தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறார். அந்தக் காலக் கட்டத்தில் நமது அண்டை நாடுகளுடன் ஒப்பிடும் போது சிங்கப்பூர் சாதிக்கும் என்ற நம்பிக்கை பலருக்கும் இல்லை. இத்தனை காலம், தமது பங்களிப்பைச் செய்து வரும் திரு ஜெரால்ட்டுக்கு நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளோம். அவரின் வழிகாட்டல் பல சிங்கப்பூரருக்கு நிதித் துறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.

50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.