ஜெயலெட்சுமி தனபாலசிங்கம்

“அனைவரும் என் பாட்டியை கண்டதும் அவரை உபசரிக்க எழுவார்கள். நானும் இதுபோன்ற மரியாதையை எப்பொழுது பெருவேன் என்ற எண்ணம் எனக்குள் குடிக்கொண்டது. எனது பாட்டியைப்போல வர எனக்குள் ஒரு ஆசை,” என்று அன்புடன் நினைவுகூர்ந்தார் திருமதி ஜெயலட்சுமி தனபாலசிங்கம். இவரது இந்த ஆசை, இன்றோ நிறைவேறிவிட்டது.

திருமதி பாலா புகழும் அந்தஸ்தும்பெற்ற குடும்பத்திலிருந்து வந்தவராவார். கொடைமனம் படைத்த இவரது குடும்பம் சமூக சேவையை வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக கொண்டுள்ளது. இப்பொழுது கோலாலம்பூரிலுள்ள விவேகானந்தா மடத்தை அன்று கட்டியதும் இவரது குடும்பம்தான். பேரும் புகழும் பெற்று விளங்கிய இக்குடும்பம் இந்தியாவின் அன்றைய பிரதமரான ஜவஹர்லால் நேருவை தங்கள் இல்லத்தில் உபசரித்து அனுப்பிய பெருமையையும் பெற்றுள்ளது.

குடும்பத்தினர் மட்டுமல்லாமல், சுற்று வட்டாரத்திலுள்ள அனைவரும் இவரது பாட்டியின் அறிவுரையைத் தேடிச் செல்வார்கள். திருமதி பாலாவும், இது போன்ற தருணங்களில் அவரது பாட்டியை பின்தொடர்ந்து அவர் கூறும் அறிவுரை மூலம் மக்களின் பாரம் குறைவதைக் கண்டு வளர்ந்தார்.

மலேசியாவில் பிறந்து தனது தாத்தா பாட்டியின் வளர்ப்பில் வளர்ந்த இவர், ஆறு வயதை எட்டியதும், சிங்கப்பூரில் வசிக்கும் தமது குடும்பத்துடன் சேர்ந்து இராப்பில்ஸ் பெண்கள் பள்ளியில் பயில ஆரம்பி்த்தார்.

img1

"கல்லை போன்று கடினமான ரொட்டி துண்டை உண்ணும் நிலை."

போரின் பின், தமது ஆசானுக்கு உதவியாளராக வேலை புரிய ஆரம்பித்தது அந்த ஆசிரியர் பணியையே வாழ்க்கை தொழிலாக திருமதி பாலா தேர்ந்தெடுக்க வித்திட்டது.

கூடிய விரைவிலேயே, தமக்கு முன்பே தெரிந்த உறவினருடன் கல்யாணம் நிச்சயிக்கப்பட்டது. 'நாங்கள் காதலித்தபிறகே இது குடும்பத்தால் நிச்சயிக்கப்பட்டது,' என்று திருமதி பாலா நினைவுகூர்ந்தார்.

ஆனால் குழந்தை பிரசவம் அவருக்கு சுமூகமாக நடக்கவில்லை. முதல் குழந்தையை பிரசவத்திலேயே பறிகொடுத்த அவருக்கு, இரண்டாவது குழந்தை பெருமூளைச் சிறை நோய்யுடன் பிறந்தது. இது திருமதி பாலாவின் வாழ்க்கையையே தலங்கீழாக மாற்றியது. இவரது மகன் வாழ்ந்த அடுத்த எட்டு வருடங்களிலும், வேலை ஒரு புறம் மகனை இரவும் பகலும் பேணுதல் மறு புறம் என்று இரு தலை கொள்ளிப்பாம்பு போல திருமதி பாலா தவித்தார். “நடு இரவில் மருத்துவமனைக்குச் செல்வது என்பது அடிக்கடி நடக்கும் நிகழ்வாக மாறியது,” என்று திருமதி பாலா கூறினார். இருந்தாலும், தமது வேலையை இது பாதிக்காதபடி நடந்துக்கொண்டார். மகனை பார்த்துக்கொள்ள வேலை ஓய்வுக்கூட ஒருநாலும் திருமதி பாலா எடுத்ததில்லை. மகன் காலமான பிறகும், வேலையின் மத்தியில் தமது மற்ற இரண்டு மகள்களை பார்த்துக்கொள்ளும் பொறுப்பும் இவருக்கு பெரும் சவாலாகவே இருந்தது.

img1

"நான் எப்போது என் பாட்டியை போல் இருக்க முடியும் என்று எண்ணுவேன். என் ஆசை நிறைவேறியது."

வேலை ஓய்வு பெற்ற பிறகும், சமூக சேவைமீதுள்ள மோகம் இவருக்கு குறையவில்லை. சிங்ஃகலப்பிலுள்ள சமூக மன்றத்திலில் சேர்ந்து அதிலுள்ள பெண்களுக்கான செயற்குழுவில் முழுமூச்சுடன் இறங்கினார். சாதாரண உறுப்பினராக சேர்ந்த இவர், படிப்படியாக முன்னேறி அச்செயற்குழுவின் தலைவியானார். குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதிலிருந்து, சமூக மன்றத்திற்காக பணம் திரட்டுவதுவரை பல அம்சங்களில் தமது பங்கை திருமதி பாலா வகித்தார். இந்த ஈடுபாட்டிற்காகவும் உழைப்பிற்காகவும் 1994-இல் PBM விருதையும் 2005-இல் BBM விருதையும் இவர் பெற்றார். 15 வருடங்கள் செயற்குழு தலைவியாக பணியாற்றிய இவர், சொந்தமாகவே பதவியை விட்டுக்கொடுத்து மீண்டும் சாதாரண உறுப்பினரானார்.

ஆனால், இன்று வரைக்கும் இவர் விரும்பி செய்த ஒன்றை மற்றும் கைவடவில்லை. இவரது சமூக மன்றம் மற்றொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு மாற்றப்பட்டாலும் , நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மாலிக்கியுடன் இருந்த தொடர்பை இவர் விட்டுவிடவில்லை. மக்களை பார்க்கும் தொடர்க்கூட்டத்தின்போது, அவருக்கு துணையாக இவர் செயல்படுவார். தவறாமல், திங்கட்கிழமை காலை 7 மணி முதல் 11 மணி வரை சிங்ஃலப்பிலுள்ள பிளோக் 70-திற்கு வரும் பொதுமக்களைச் சந்தித்து தமது உதவி கரத்தை திருமதி பாலா நீட்டுவார்.

img1

"எதுவாக இருந்தாலும் அவர்க்ளின் பிரச்சனையை கேட்டு உதவி செய்வதே நமது கடமை."

இளமையாக காட்சியளிக்கும் திருமதி பாலாவின் உண்மையான வயதை யாராலும் கணிக்க முடியாது. ஆனால், படியேரும் ஒவ்வொரு முறையும் தமது வயதின் தாக்கத்தை உணர்வதாக கூறுகிறார் எண்பத்தி ஆறு வயதான திருமதி பாலா. இதன் காரணத்தினால், அவர் ஈடுபட்டிருந்த பல சமூக சேவைகளை வெகுவாக குறைத்துகொண்டார். சிங்கப்பூர் பெண் சாரணர் படை, சமூக சேவை பிரிவின் பேணுதல் செயற்குழு, இன மற்றும் மத சார்பான பிரிவு என்று எண்ணற்ற பிரிவுகளில் தமது பாதத்தை பதித்துள்ளார் திருமதி பாலா. உடல் சோர்ந்தாலும், உள்ளம் சோர்வடையாமலிருப்பதின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்த இவர், தம்மால் முடியும்வரை மக்களை சந்திக்கும் தொடர்க்கூட்டதில் ஈடுபடபோவதாக கூறுகிறார்.

தற்போது, தனியாக வாழும் இவர், வெளிநாடுகளில் வாழும் தம் பிள்ளைகளின் தொலைப்பேசி தொடர்புக்காக ஆர்வத்துடன் காத்திருப்பாராம். நண்பர்கள், அக்கம் பக்கத்தார், உறவினர்கள் போன்றோரின் அவ்வப்போது வருகை இவருக்கு மனநிறைவைத் தருகிறது.வாழ்வின் பல பிரச்சனைகளைத் தகர்த்து வென்றிட உதவிய திருமதி பாலாவின் உறுதியான நெஞ்சம் இன்றும் இவருக்கு கைகொடுத்து வருகிறது.

img1

"தனியாக இருக்கும் பொது ஏதாவது நடந்துவிட்டால்?"

இந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.

50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.