இவர் கதை எளிமையானதாக இருந்தாலும், ஒரு சராசரி பெண் எப்படி தன்னை மிஞ்சி சமூக தொண்டாற்றலாம் என்பதுக்கு நல்ல எடுத்துக்காட்டு. திருமதி செல்வராணி ஞானேஸ்வரன் சிறிது தூண்டுதலுக்கு பிறகு தன் வாழ்க்கை கதையை மணம் திறந்து பேசினார். அவரது கொடைத் தன்மை எங்களை ஆழமாக கவர்ந்தது. |
திருமதி ஞானி குவால லம்பூரில் ஒரு கான்வண்ட் பள்ளியில் தொடங்கி 30 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றினார். அவர் வெறும் ஆசிரியராக மட்டுமின்றி அவரது மாணவர்கள் அனைவருக்கும் நம்பிக்கைக்குரிய வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். ஆசிரியர் தொழிலில் அவருக்கு இருந்த ஆழ்ந்த ஆர்வமும் உண்மைத்தன்மையும் அவருக்கு மே தொடக்க பள்ளியில் துணை தலைமையாசிரியர் பொறுப்பை பெற்று தந்தது. ஆனால், பிறர் குழந்தைகளை தனதாக அக்கறை செலுத்தும் அவருக்கு எந்த விருதுகளும் பதவி உயர்வுகளும் தேவையில்லை. |
|
“குழந்தையால் சிலரிடம் அரவணைப்பை உணர முடியும். அவரிடமே அது செல்லும்." |
திருமதி ஞானி 60வது வயதில் ஓய்வு பெற்றபோது, சிண்டாவில் அவர் பயணம் தொடங்கி, அவரது வாழ்வின் 10 ஆண்டுகளை நிரப்பியது. |
|
“அவர்களை வக்கீல்களாகவும் மருத்துவர்களாகவும் பார்ப்பது மகிழ்ச்சி அளித்தது - இவர்களுக்கு நான் துணை பாடம் கற்பித்தேன்." |
பாஹாங்கில் வளர்ந்த காலத்தையும் குவால லம்பூரில் படித்த காலத்தையும் நினைவு கூர்ந்த பொழுது அவரது முகம் மலர்ந்தது. புன்னகை பூத்தது. அவரது பெற்றோரும் சகோதரர்களும் அவர் மீது காட்டிய அலாதி அன்பு அவரது நினைவில் நின்றது. சேர்ந்து கிரிக்கட் விளையாடுவது முதல் சேர்ந்து படிப்பது வரை, அவரை நன்கு பராமரித்து செல்லம் காட்டினர் அவர் சகோதரர்கள். அவரது மகளும் தன்னை போல் பல உடன் பிறப்புகளுடன் வளர பல குழந்தைகளை பெற வேண்டும் என்று விரும்பினார். ஆனால் சிங்கபூரில் இரண்டே போதும் என்ற கொள்கை அமுலுக்கு வந்தது, மேலும் பெரிய குடும்பத்தை பராமரிப்பது மிகுந்த செலவுமிக்கதாகிவிட்டது. |
|
“நிறைய பணமும் உயரிய வாழ்க்கையும் கொண்டு மகிழ்ச்சியற்று வாழ நான் விரும்பவில்லை." |
பக்தி மிகுந்த தாயாரால், திருமதி ஞானியும் ஆழமான நம்பிக்கை கொண்டவரானார். இது அவரை ஹிந்து மையத்தில் பல பங்காற்ற இட்டு சென்றது. மே தொடக்கப் பள்ளியில் நூலகம் ஆரம்பித்த அனுபவம், ஹிந்து மையத்திற்கு நன்கொடையாக வந்த புத்தகங்களை வகை படுத்த உதவியாக இருந்தது. மையத்தில் சமைய வகுப்புகளும் நடத்தினார், |
சில சமையம், அவர்களுக்கு விளையாட்டு பொருள்களும், தைப்பதற்க்கு துணிகளும் வாங்குவார். வேலை ஓய்வு பெற்ற பிறகு சாய் பாபா நிலையத்திலும் சேவை செய்தார். இங்கு தான் மேலும் பல மன நலம் பாதிக்கபட்ட குழந்தைகளையும் இளைங்கர்களையும் சந்தித்தார். சொல்வதரியாது துன்பப்படும் இளைங்கர்களை கண்டு மனம் உடைந்தார். இது போன்ற குழந்தைகளை பற்றிய விழிப்புணர்வும் அவர்களும் மேலும் சிறந்த உதவியும் கிடைக்க வேண்டும் என்று விரும்பியதுடன் பிரார்த்தனையும் செய்த்தார். |
|
“எங்கு தவறினோம்? ஆசிரியர்களாக நாம் எங்கு தவறினோம்?" |
கணினிமயத்தாலும் பாடத்திட்டத்தில் மாற்றங்களினாலும் திருமதி ஞானியால், தன் அக்கம் பக்கத்து குழந்தைகளுக்கு துணைப்பாடம் சொல்லி கொடுக்க முடியவில்லை. ஆனால் அவர் கற்பித்த பல குழந்தைகளில் நினைவிலிருந்த அகலாமல் இருக்கிறார் அவர். இப்பொழுதும் பெரியவர்கள் ஆகிவிட்ட மற்றும் குழந்தைகளை உடையவர்ளான போதும், திருமதி ஞானியை வந்து பார்க்கின்றனர். இவர்களுக்கும் மேலும் பலருக்கும் இவர் இன்னும் தன்னை மீறி தனக்கு அறிமுகமான குழந்தைகளை வெற்றி பாதையில் வைத்த ஆசிரியராகவே நினைவில் நிற்கிறார். இவரை போன்ற தன்னை மீறி சேவை செய்த ஆசிரியர்களுக்கு 50முகங்கள் நன்றி கூறுகிறது.