சுனந்தா தேவி சேனன்

புதியனவற்றைக் கற்பதில் சிரமமில்லை, ஆனால், நம்மில் பெரும்பாலோருக்கு ஓர் ஆசிரியர் உள்ளார். இருப்பினும், சுயமாகக் கற்பதிலும் புரிந்துகொள்வதிலும் திறமை பெற்றோர் உள்ளனர். அவர்களில் ஒருவர் தான் திருவாட்டி சுனந்தா. கற்றலில் இவர் கொண்டுள்ள ஆர்வம், கற்றதைச் செய்முறையில் புகுத்துவது, இவரை இதுநாள் வரை மற்றும் இனி மேலும் செயல்பட வைக்கும்.

திருமணம் புரிந்து, தனது கணவருடன் சிங்கையில் சில ஆண்டுகள் வாழ்ந்தார். பிறகு, தமது கணவரின் வேலைக் காரணமாகக் கேமரன் மலைக்குக் குடிபெயர்ந்தார். இங்குத் தான், தோட்ட வேலையில் முதன்முதலில் அவரது ஆர்வம் வளர்ந்தது. கற்றலின்பால் இவர் கொண்டுள்ள தீவிர உணர்ச்சியின் சான்று, திருவாட்டி சுனந்தா சுயமாகக் கற்கக் கூடியவராகும். தோட்ட வேலையைப் பற்றிய புத்தகங்களைப் படித்தும் பல தோட்டங்களைச் சென்று கண்டும் கற்றார். இவரது இந்தத் திறமைகளைச் சிங்கப்பூருக்குத் தம்முடன் கொண்டுவந்தார். அவ்வாறே ஸ்ரீ நாராயணன் இல்லத்தில் தோட்டத்தைத் துவக்கினார். இவரது மிக முக்கியமான பங்குகளில், அவரால் நினைவுக்கூற முடிந்தது இதுவே. தாம் ஒருவரே இத்தோட்டத்தின் உருவாக்கத்திற்குப் பொறுப்பாகும். காலியான ஜாடிகளும் வீணாகப்போகும் செடிகளும் ஏதேனும் ஒரு சிறப்பை நடத்தக் கூடிய வாய்ப்பு உள்ளதைத் திருவாட்டி சுனந்தா உணர்ந்தார். ஆகையால், சில தொண்டூழியர்களைக் கொண்டு இத்தோட்டத்தை அமைத்தார். நான்கு வருடங்கள் கழித்தும் இத்தோட்டம் பூத்துக்குலுங்குகிறது. இதன் பெருமை இவரைச் சேரும். தோட்டத்தைப் பராமரிக்க சிலரை ஒப்பந்தம் செய்துள்ளார். இத்தோட்டம் அனைவருக்கும் ஒரு சொர்கம் என்பதில் பெருமைக்கொள்கிறார். இவ்வில்லத்தில் வசிப்போர் இங்கே அமைதியாக உலா வரலாம், இங்கே அன்புக்குரியவர்களைக் காண வரும் விருந்தினர்களுக்கு இத்தோட்டம் அமைதியான சூழலை அளிக்கிறது.

img1

“நான் தோட்டத்திற்கு செல்லும்போதெல்லாம், அங்கேயே நின்று, எந்த மாதிரியான செடிகள் பூங்காவிற்கு அழகு சேர்க்கும் என்று எண்ணி பார்ப்பேன்.”

சிங்கப்பூரில் வாழ்ந்த காலத்தில், ஸ்ரீ நாராயணன் இல்லம் இவரது மனதில் ஓர் அம்சமாக நன்கு பிரதிபலிக்கும். திருவாட்டி சுனந்த மேன்மேலும் முன்னேறி செயலவைக் குழுவில் இருபது ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டுள்ளார். இதனுடன் மற்றும் பல செயற்குழுக்களிலும் ஈடுபட்டுள்ளார். அவை, குரு பூசையை வழிநடத்தும் சிறு குழுக்கள், ஆத்மீகம் மற்றும் மகளிர் அணியின் குழுக்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுக்களாகும்.

கற்றலில் திருவாட்டி சுனந்தா கொண்டிருந்த நாட்டத்தின் விளைவு தான் இவரது தொழில்நுட்பத் திறமைகளாகும். இவரது மகன்களை வெளிநாட்டில் காணச் சென்றபோது, பெரும்பாலும் எந்தவொரு வேலையும் இல்லாததால், சலிப்புத் தட்டியது. அப்போது தான் இவருக்குத் தொழில்நுட்பத்தின் மீது நாட்டம் ஏற்பட்டது. அப்போது அவரது மகன் அவருக்குத் தொழில் நுட்பத்தைப் பற்றி கற்றுத்தர முனைந்தபோது திருவாட்டி சுனந்தா அதைக் கற்றுக்கொள்ள சிரமப்பட்டார். அதனால், அதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றிருந்தார். பிறகு தாமே சுயமாகவே அதனைக் கற்றார். சமையல் குறிப்புகளைத் தட்டச்சு செய்ய ஆரம்பித்த திருவாட்டி சுனந்தா, தற்போது தொழில்நுட்பத்தைச் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்துகிறார். தமது ஸ்மாட் கைபேசியை மிகவும் சாமர்த்தியமாகப் பயன்படுத்தத் தொடங்கி இப்போது வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் தமது குடும்பத்தினருடன் ஸ்கைப் வழி பேசுகிறார். மேலும், மலையாளத்திலும் தட்டச்சு பயிற்சிப் பெறுகிறார். திருவாட்டி சுனந்தா, நிச்சயம் தொழில்நுட்ப உலகத்தினுள் ஒன்றிணைந்து விட்டார்.

தொழில்நுட்பத்தில் தமது திறமைகளை ஓர் உறுதியான முறையில் நிரூபித்ததும், திருவாட்டி சுனந்தா, இவ்வறிவாற்றலைப் பிறருக்கும் கொண்டுசெல்ல ஒரு புதிய பாடத்திட்டத்தை முதியோருக்காக உருவாக்கி அவர்களுக்கு வகுப்புகளும் நடத்துகிறார். அவர் எடுத்துக்கொண்ட முயற்சி நிச்சயம் பிரமாண்டமானது. அதனால், அவருக்கு IDA என்னும் தகவல் தொடர்பு மேம்பாட்டு ஆணையத்தின் நல விருது வழங்கப்பட்டது. இருப்பினும் திருவாட்டி சுனந்தா, மேலும் கற்கத் துடிப்பாக உள்ளார். அதனுடன், ஸ்ரீ நாராயணன் இல்லத்தின் தொழில்நுட்பக் குழுவில் இடம்பெற்றுள்ள இவர், அத்துறையின் வல்லுனர்கள் மூலம் அவரது குழு அவர்களிடமிருந்து கற்றுக்கொள்கிறார்கள்.

img3

“நான் கற்றுக்கொடுத்தால், என்னால் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளவும் முடியும்.”

img2

ஸ்ரீ நாராயணன் இல்லத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் சதயம் கொண்டாட்டங்களில் திருவாட்டி சுனந்தா ஈடுபட்டு வருகிறார். குரு ஸ்ரீ நாராயணனின், பிறந்தநாளன்று 24 வகை சைவ உணவு வகைகள் பாரம்பரிய சதய மதிய உணவாக ஏற்பாடு செய்யப்படும். 1973 தொடக்கம், சிறிதாக ஆரம்பித்து இப்போது ஆயிரக்கணக்கானோர் என உயர்ந்துள்ளது. இவ்விழா மிகவும் பிரபலமடைந்துள்ளதற்குச் சான்று, சென்ற ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட உணவு முடிந்துவிட்டதேயாகும்! இவ்விருந்திற்கு என்ன உணவு தயாரிக்கப்பட வேண்டும், சமைக்கத் தேவையான பொருட்கள் மற்றும் சமையல் ஆகியவற்றைத் தொண்டூழியர்களே முடிவெடுப்பர். ஆயிரக்கணக்கானோருக்கு உணவைத் தயாரிப்பது சாதாரண விஷயம் அல்ல. ஆனால், திருவாட்டி சுனந்தா இதனை வெற்றிகரமாகச் சாதித்ததில் பெருமை அடைகிறார்.

மற்ற கடமைகளுள் ஒன்றாகத் துணைக் குழுக்களில் சேவையாற்றும் திருவாட்டி சுனந்தா, ஆத்மீகம் தொடர்பான விஷயங்களை எளிதாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இது இளைய தலைமுறையினரை அடையக்கூடிய வகையில் அவர்கள் ஆத்மீகம் தொடர்பான கலந்துரையாடல்களில் பங்கெடுக்க வைப்பதாகும். பல குழுக்களில் ஈடுபட்டுள்ள விளைவாக, திருவாட்டி சுனந்தா குடியிருப்பாளர்களைச் சென்று சந்தித்து நேரம் கழித்ததைக் கூறினார். ஆனால், தற்போது இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு அவருக்கு நேரமில்லை என்றார். குடியிருப்பாளர்களுடன் கலந்துரையாடுவது மிகவும் முக்கியம். அதைத் தவிர்த்து வேறு எதுவும் தேவையில்லை, அவர்களுடன் நேரத்தைச் செலவிடுவதே போதும். அதுவே ஒரு மாற்றத்தை ஏற்படுத்திடும். அவர் ஒரு நாள் வராவிட்டாலும் கூட, அவரை நினைவில் வைத்து, அவரைப் பற்றி விசாரிக்கும் இந்தக் குடியிருப்பாளர்களின் செய்கை அவரது மனதைத் தொட்டுள்ளது.

“முதலில் சில நூறாக இருந்த மக்க்ள் வருகை, இப்போது பல ஆயிரக்கணக்கிற்கு உயர்ந்துள்ளது.”

சிங்கப்பூருக்கு முதன்முதலில் வந்ததை நினைவுக்கூறும்போது திருவாட்டி சுனந்தா, அதன் வளர்ச்சியைக் குறித்து பிரதபலித்து அதிகமான சிங்கப்பூர்களைத் தொண்டூழியம் செய்ய முன்வரும்படி கூறுகிறார். அதோடு, தொண்டூழியர்கள் கிடைப்பதில் சிரமங்கள் உள்ளன என்பதையும் ஒப்புக்கொண்டார். இதற்குக் காரணம், ஒவ்வொரு வெற்றிகர தலைமுறையினர் எதிர்நோக்கும் பலவகை போட்டிகளாகும்.

அவரது எதிர்காலத் திட்டங்களைப் பற்றிக் கேட்டபோது, திருவாட்டி சுனந்தா, சமீபத்தில் கீழே விழுந்தாலும், தமது தற்போதைய நிலையை நினைத்து மகிழ்கிறார் என்றார். இதனால், அவர் பின்னடையவில்லை. அவரது உறுதியான தோற்றத்தைப் பராமரிக்கிறார். சிரமமாக இருப்பினும், அவரது பல ஆண்டு அனுபவம் அவரது நடமாட்டத்திற்குத் தடையாக இல்லை. தமது திட்டத்தைத் திறமையுடன் தீட்டி அதனை நிறைவேற்ற இளைய திறம்மிக்கத் தொண்டூழியர்களிடம் விட்டுவிடுவார்.

திருவாட்டி சுனந்தா நிச்சயம் ஸ்ரீ நாராயணன் குழுவிற்கு நிறைய வழங்கியுள்ளார். அடுத்து வரப்போகும் AGM என்னும் வாக்களிப்பில் அவர் பங்கெடுப்பதில் மதில் மேல் பூனையைப் போல் நிற்கிறார்.

அதிக வேலைப்பலு இருப்பினும் அதிலுள்ள நன்மைகளை ஒப்புக்கொள்கிறார் திருவாட்டி சுனந்தா. வயதான பிறகு மேற்கொள்ளவேண்டியவற்றைத் திருவாட்டி சுனந்தா செயற்குழுவிடம் விட்டுவிட்டார். அவர்கள் அவரது வருகையை விரும்புவர் என்றும் அவர்களுக்கு உதவினால் மகிழ்ச்சி என்றார். நமது முன்னோடிகளுடன் ஒப்பிடுகையில், திருவாட்டி சுனந்தாவுக்குப் போதிய அனுபவம் உள்ளது. அதைப் பிறருடன் பகிர்வதால், அவரது வழிகாட்டுதல் பயனளிக்கும். நமது 50 முகங்கள் அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகிறது.

img3

“அவர்களுக்கு நான் தேவையென்றால், நான் சேவை செய்ய விரும்புகிறேன்.”

 

இந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.

50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.