எல்லோருக்கும் வாழ்க்கையில் சவால்கள் இருக்கத்தான் செய்யும். திருமதி.சீதாவும் பற்பல சவால்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. அவர் 1939-ஆம் ஆண்டு பிறந்து பின்னர் ஒரு சிங்கப்பூரரை திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், குறுகிய காலத்திலேயே அவரது கணவரை இழந்தார் திருமதி.சீதா. அவருக்கும் அவரது இரண்டு மகன்களுக்கும் அவர் தனியாக போராட ஒரு நிலைமை ஏற்பட்டது. இருந்தாலும் அவர் தனது பிரச்சினைகளை நினது வருந்தவில்லை. அவர் மனம் தளராமல் தனது குடும்பத்தின் ஆதரவினால் நன்கு உறுதியாக இருந்தார். அவர் தனது பிரச்சினைகளை நன்கு சாமாளித்ததோடு தம்மால் இயன்றவரை சமுகத்திற்கு தமது பணியையாற்றவும் நேரம் வகுத்தார். சமுகத்திற்கு திருப்பி கொடுக்கும் பழக்கம் இளம் வயதிலேயே தனது பெற்றோர்களால் உருவானது என்கிறார் திருமதி.சீதா. இதுவே நாளடைவில் பிறருக்கு உதவும் ஒரு நல்ல பழக்கமாக திருமதி.சீதாவின் மனதில் வேருன்றியது . அவர் தனது வாழ்கையின் பெரிய பகுதியை பிறருக்கு உதவுவதற்கு அர்ப்பணித்துள்ளார். அவர் சிறு பிள்ளையாக இருக்கும்போதே அவரது பெற்றோர் தமக்கு கிடைக்கும் பிறந்தநாள் பரிசுகளைப் எப்படி வசதி குறைந்த பிள்ளைகளுடன் பகிர்ந்துகொள்ள முடியும் என்று சொல்லிக் கொடுத்தனர். அதிலிருந்து ஆரம்பித்ததுதான் அவரது தொண்டுழிய வாழ்க்கை பயணம். |
|
"எங்களது பிறந்தநாள் பரிசு பணத்தை எனது அப்பா 20 காசு நாணயங்களாக மாற்றி இல்லத்திலுள்ள ஒவ்வொரு பையனுக்கும் கொடுக்க வைத்தார்." |
தொடக்கப்பள்ளியில் பல வருடங்களுக்கு வேலை புரிந்த திருமதி.சீதா பிறகு வேலையிலிருந்து ஒய்வு பெற முடிவெடுத்தார். தன்னை ஆக்கிரமித்து வைத்துக்கொள்ள அவர் தொண்டுழிய வேலையில் தமது கவனத்தைச் செலுத்தினார். சிங்கப்பூரின் முதல் பாலர் பள்ளியான சரஸ்வதி பாலர் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிப்புரிந்தது நம் தமிழ் சமுகத்திற்கு உதவினார் திருமதி.சீதா. பள்ளியை ஆரம்பித்து வைத்து, நல்ல கட்டமைக்கப்பட்ட கல்வியை அமைத்துக் கொடுப்பது சுலபமான காரியமல்ல. ஆனால், திருமதி.சீதா அதையெல்லாம் செய்து ஒரு மிகச் சிறந்த தொண்டுழிய சாதனை செய்தார் எனக் கூறலாம். |
|
"ஆசிரியர் துறையில் இருந்தது எனக்கு நல்ல மன திருப்தியை அளித்தது." |
திருமதி.சீதா பிள்ளைகளுடன் பழகி ஈடுபடுவதில் அதிக மகிழ்ச்சி பெற்றார். அதனால், அவர் தனது வேலையையும் தம் மகன்களை கவனித்துக் கொள்ளும் பொறுப்பையும் தவிர்த்து ராமகிருஷ்ணா சிறுவர் இல்லத்தில் சிறுவர்களுக்கும் பாடம் கற்பித்து உதவினார். அவர்களுக்கு பாடம் மற்றும் சொல்லிக் கொடுக்காமல் ஊக்கமும் அளித்து வந்தார் திருமதி.சீதா. ராமகிருஷ்ணா சிறுவர் இல்லத்தில் இவர் தொடர்ந்து 20 வருடங்களாக தொண்டுழியம் புரிந்து வந்தார். அவர் வழிகாட்டிய சிறுவர்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்கும்போது அவரது முயற்சி எதுவும் வீண் போகவில்லை என்றெண்ணி அவர் பெரும் மகிழ்ச்சி அடைகிறார். அவராலும் பிறரது வாழ்க்கைகளில் மாற்றத்தை உண்டாக்க முடியும் என நினைத்து திருமதி.சீதா பெருமைப்படுகிறார். |
|
"அவனுக்கு மொழியைக் கற்றுக்கொடுத்து அவனை வாழ்க்கையில் முன்வர நான் பெரும் பாடுப்பட்டேன்." |
சாரதா பாலர் பள்ளி முதலில் ஆரம்பித்தப்போது, அவர் அங்குள்ள பிள்ளைகள் தாங்கள் பாடங்களில் மேம்பட அவர் உதவினார். சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம் ஏற்பாடு செய்திருக்கும் பிள்ளைகள் படிக்கும் திட்டத்திலும் அவர் தம் பங்கை ஆற்றினார். அதோடு, மார்சிலிங் தொடக்க பள்ளி துவங்கிய துணை வகுப்புகளிலும் சிண்டா இரவு துணை பாட வகுப்புகளிலும் திருமதி.சீதா மாணவர்களுக்குக் கற்பித்து வந்தார். அவர் ராமகிருஷ்ண இல்லத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து பல நடவடிக்கைகளை ஏற்பாடு செய்ய உதவினார். அவரது தொண்டுழிய வேலை பட்டியல் இன்னும் தொடர்கிறது. RSVP என்னும் 50 வயதுக்கு மேம்பட்ட தொண்டுழியர்கள் கொண்ட அமைப்பிலும் அவர் உறுபினராக இருந்தார். RSVP தொண்டுழியர்கள் பிள்ளைகள், முதியோர்கள் அல்லது மன ஆரோக்கியம் நிறுவனங்களுக்குச் சென்று உதவ அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இது போன்ற தொண்டுழிய வேலைகளில் தீவிரமாக இடுபாடும் திருமதி.சீதாவுக்கு நிறைய விருதுகள் கிடைத்திருக்கிறது. இந்து அறக்கட்டளை வாரியம் இந்திய சமுதாயதிற்கு தங்களது பங்களிப்புக்குச் சிறந்த விருது ஒன்றை திருமதி.சீதாவுக்கு வழங்கியது. இந்த விருதைப் பெரும் முதல் நபர் என்ற பெருமை திருமதி.சீதாவை சேரும். நாற்பது மணி நேரத்திற்கும் மேலாக தமது நேரத்தை பிள்ளைகள் படிக்கும் திட்டத்தில் அற்பணித்ததற்கு அவருக்கு தங்கம் மற்றும் பிளாட்டினம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவை திருமதி.சீதா பெற்ற ஒரு சில விருதுகள் தான். இவரது தொடர் தொண்டுழிய சேவைகளுக்கு இன்னும் பல விருதுகள் நிச்சயம் கிடைக்கும். |
|
"என்னால் வெளியே சென்று எனது நிதிகளை சமாளிக்க முடியாது என்று பயந்து இணைய வங்கி சேவையைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டேன்." |
பிள்ளைகளின் மேலுள்ள அன்பு தான் அவருக்கு உந்து சக்தியாக இருப்பதோடு அவர் மேன்மேலும் பிள்ளைகள் கல்வியில் மேம்பட தாம் உதவவும் செய்கிறது என்கிறார் திருமதி.சீதா. நன்கு படித்து பயிற்சி பெற்ற பெண்கள் வீட்டிலுள்ள பொறுப்புகளில் மட்டும் மூழ்கியிருக்காமல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சுற்றியிருக்கும் சமுதாயத்திற்கும் தங்களது உதவியை அளிக்க வேண்டும் என்பது திருமதி.சீதாவின் கருத்து. திருமதி.சீதாவிடம் உரையாடிய 50 முகங்களுக்கு H. Jackson Brown Jr கூறிய ஒரு கருத்துதான் நினைவுக்கு வருகின்றது - "உலகில் மிகச் சந்தோஷமாக இருகின்றவர்கள் அதிகமாக பெறுபவர்கள் அல்ல, அதிகமாக கொடுப்பவர்கள்". |