சிசிலிய M லொபஸ் நாயர்

அவர் ஒரு இளமை மிக்கக் கான்வென்ட் பெண்ணைப்போல விளையாட்டுத்தனமானச் சிரிப்புடனும், ஒளி நிறைந்த முகத்துடனும் திகழ்கிறார். பழைய நினைவுகளை நினைவு கூறும் போதெல்லாம் அவருடைய முகம் சந்தோஷத்தில் பிரகாசிக்கிறது. சிங்கப்பூரின் முதல் மருத்துவச் சமூக சேவகரான என்பத்து நான்கு வயதான திருமதி சிசிலியா எம் லொபெஸ் நாயர், ஐம்பது முகங்கள் குழுவினருடன் இளமைப் பருவக் கதைகளிலிருந்து துவங்கி தனது மற்ற வாழ்க்கைக் கதைகளையும் பகிர்ந்து கொண்டார்.

ஒரு கடின உழைப்பாளியான தந்தையையும், அடக்கமான இல்லத்தரசியான தாயாரையும், இரண்டு மூத்த உடன்பிரப்புகளையும் கொண்ட ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தார் அவர். அவர் தன்னை புத்தகங்களைப் படிக்க மற்றும் பியானொவை வாசி்க்க விரும்பிய ஒரு அமைதியான சிறு பெண் என வர்ணிக்கிறார். அவர் அவருடைய அண்டைவீட்டாரையும், பணிப்பெணையும் தன்னை சுற்றி இருந்தவர்களையும் ரசித்ததாக் கூறினார். போருக்கு முன் இருந்த அமைதியான நாட்களை ஆசையுடன் நினைவு கூர்கிறார் அவர்.

img1

“அமைதியான, சந்தோஷமான வாழ்க்கை. மீ சியாம் - இரண்டே காசு."

இரண்டாம் உலகப் போர் வட்டார நாடுகளுக்குப் பரவிய போது சிங்கப்பூரில் நிலவிய அமைதி அச்சுறுத்தலுக்கு உள்ளானது. ஜப்பானியர்கள் சிங்கப்பூரைப் படையெடுக்கப் போவதாக அச்சுறுத்திய போது விமானத்தாக்குதல்கள் பயப்படும் அளவிற்கு பொதுவான நிகழ்வாக மாறின எனத் திருமதி நாயர் கூறுகிறார்.

நிவவறையில் ஒளிந்து கொள்வதற்காக குண்டுதாக்குதலின் அபாய ஒலி ஒலித்தத் தருணங்களைத் தவிர்த்து இளம் திருமதி நாயரின் வாழ்க்கை சந்தோஷமானதாகவே அமைந்தது. நிலவறையில் ஒளிந்துகொள்ளுதல் சற்று குதூகலத்தை ஊட்டியது ஏனெனில் அவர்கள் சிறிதளவு உணவை எடுத்துக்கொண்டு எங்கே இன்பச்சுற்றுலா மேற்கொள்வர் எனக் கூறினார் திருமதி நாயர். அபாய ஒலி நின்றவுடன் திருமதி நாயர் அங்கும் இங்கும் கவலையின்றிச் சுற்றித்திறிவார்.

துரதிர்ஷ்டமான அந்நாளில் அபாய ஒலி மீண்டும் ஒலித்தது. இத்தடவையோ வழக்கமாக நடந்தது போல் நடக்கவில்லை. அபாய ஒலியின் பின் தொடர்ந்த நிகழ்வுகள் திருமதி நாயரின் வாழ்க்கையையே மாற்றி அமைத்தன.

img1

“பூகம்பமே வீட்டின் தொட்டதை உலுக்கியது போல் காட்சி அளித்தது."

போர் துவங்கிய போது திருமது நாயரின் குடும்பத்தினர் இந்தியாவிலிருத்த தங்களுடைய தாய்நாடான கேரலாவிற்குத் திரும்பினர். அவர் அடுத்த பத்து வருடங்களை, சிங்கப்பூருக்குத் திரும்பும் முன் திருவனந்தபுரத்தில் படித்தும் வேலை செய்தும் கழிக்க இருந்தார்.

வளரும் பருவத்தில் திருமது நாயரின் உலகம் புத்தகங்களையும், கான்வெனட் நண்பர்களையும்,குடும்பத்தையும் சுற்றியே சுழன்றது. னினும், ஏழை மக்களின் தவிப்புகள் அவரது வாழ்க்கையில் அன்றாடக் காட்சியாக அமைந்தன. போருக்கு முன் சிஙகப்பூரில் அவரது சுற்று வட்டாரத்தில் அவர் அனுபவித்த வசதிகளை அனுபவிக்க இயலாத மக்களை அவர் கண்டார். இதை அவர் 1942-லிருந்து 1952 வரை இந்தியாவில் அடைக்கலம் புகுந்த போது அதிகமாகக் கண்டார். இந்தியா ஏற்கனவே போரின் விளைவுகளினால் தவி்த்துகொண்டிருந்தது மக்களும் ஏழ்மையின் பிடியில் சிக்கி வாடினர். அவர்களின் அவல நிலை திருமதி நாயரை பெரிதும் பாதித்தது. பெரும்பாலான மக்களை விட அதிர்ஷ்டசாலியாக இருந்த அவர் நன்றியுடன் இருந்த போதிலும் மற்றவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற அவசியத்தை அறிந்திருந்தார்.

அவரது சகோதரர் அவர் விரும்பியதைச் செய்ய வாய்ப்பளித்போது, அதை அவர் மேற்கொள்ள முடிவெடுத்தார். அது அவரது வாழ்க்கையை பல வழிகளில் மாற்றியது. அவர புது நண்பர்களையும சந்தித்தார். அவர்களுள் ஒருவர் முன்னால் அதிபரான திரு எஸ் ஆர் நாதன். சிங்கப்பூரின் முதல் மருத்துவச் சேவக ஊழியர்களும் அவரும் சேர்ந்து ஒரு உள்ளடக்கியச் சமூதாயத்தை உருவாக்க முற்பட்டனர்.

“திரு எஸ் ஆர் நாதன் என் வகுப்பு நண்பர்."

மருத்துவமனைகளில் ஐயமிடுபவர் ஒரு மருத்துவச் சமூகத் தொழிலாளிக்குச் சமம். மருந்துகளால் குணப்படுத்த இயலாத வசதியற்றவர்களிம் காணப்படும் மன-உடல் பிரச்சனைகளின் மூலக் காரணத்தை கண்டுபிடுத்து அதற்கு தீர்வு காண உதவி செய்து ஐயமிடுகின்றனர் மருத்துவச் சமூக ஊழியர்கள்.

போருக்குப் பிந்தைய காலகட்டத்தில், அதிகமாகப் படித்திருந்த போதிலும், திருமதி நாயர் மற்ற வேலைகளைப் போல சமூகச் சேவை அதிகமான ஊதியத்தை அளிக்காது என்று தெரிந்திருந்தும் ஐயமிடுபவராக முடிவெடுத்தார். திருமதி நாயர் தன்னுள் இருந்த சமூகப் பணி செய்யும் இயல்பைக் கண்டறிந்தார். போரின் விளைவுகளிலிருந்து மீள்ந்தெழ அயராது பாடுபடும் நாட்டிலுள்ள ஓரங்கட்டப்பட்ட சமூதாயத்தினருக்கு பணிபுரிவதை அவருடைய கடமையாக எண்ணினார். அவரது வேலை ஆரோக்கிய மற்றும் சமூக பிரச்சினைகளை முழுமையாகச் சமாளிக்க உதவியது.

அவருடைய வேலையிலிருந்த நம்பிக்கையும் ஏழை மக்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்க வேண்டுமென்ற அவரது ஆர்வமுமே யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சமூகத்தை முன்னேற்ற உதவியது. புத்தகங்கள் அவருக்கு கற்றுகொடுக்காத மதிப்புமி்க்கப் பாடங்களை சமூகச் சேவையி்ல் அவரது பயணம் கற்றுக்கொடுத்தது கடவுளின் ஆசியாகவே கருதுகிறார் திருமதி நாயர்.

img1

“கண்களைத் திறந்த சமூகப் பணி."

திருமதி நாயர் அனைத்து மூத்த குடிமக்களும் தங்கள் வயதான காலத்தில் ஓய்வு பெற வேண்டு்ம் என ஆசைப்பட்டாலும், அவர் நாட்டின் மீது வைத்துள்ள ஆழமான அன்பு இன்றும் தொடர்கிறது. அவர் சிங்கப்பூரராக இருப்பதில் பெரும் பெருமை கொள்வதுடன் நம் அனைவருக்கும் முக்கியச் செய்தி ஒன்றை வைத்துள்ளார்.

ஒரு மருத்துவ சமூகத் தொழிலாளியாக திருமதி நாயரின் பங்களிப்புகள் நம் நாட்டைக் கட்டியமைக்கும் முக்கிய காலக்கட்டத்தில் உதவி புரிந்துள்ளன. அவரது சேவைகளும், அவர் சொன்ன வார்த்தைகளும் மற்றும் அவரது கருனை உள்ளமும் வரலாற்றில் மறக்கக்கூடாதப் பாடங்கள். நம் நவீன சமூதாயத்தி்ல் ஓரங்கட்டப்பட்வர்களையும், பின் தங்கியவர்களையும் நாம் எப்பொழுதும் கவனித்துக்கொள்ளவேண்டும் என்று நமக்கு நினைவூட்டிய திருமதி நாயரிம் நாங்கள் நன்றி கூறி கொள்கின்றோம்.

இந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.

50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.