சந்திரன் பொன்னுசாமி

சிரமத்துக்குரிய காலம் நீண்ட நாள் நீடிக்காது, ஆனால், பிடிவாதமுள்ளவர்கள் நீடிப்பர். திரு. பொன்னுசாமி சந்திரன் சிரமத்துக்குரிய காலத்தின் போது, தனது குழந்தைப் பருவத்தை வாழ்ந்து தம் சொந்த விதியை வெறும் முயற்சியால் மாற்றியவராவார்.

ஆரம்ப காலத்தில், அவரது அன்றாட மற்றும் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. நீண்ட தூரம் நடந்து வாளியில் தண்ணீர் பிடித்து அதனைப் பெரிய பாத்திரத்திற்கு மாற்றுவார். சீக்கிரமே எழுந்து தனது வீட்டு வேலைகள் அனைத்தையும் சுயமாகச் செய்தார். தனது சகோதரி கொடுக்கும் ஐந்து காசைக்கொண்டு அவர் விரும்பிய உணவை வாங்க இயலாது. திரு. சந்திரன் ஒழுங்காகப் பள்ளிச் சீருடையை அணியா விட்டால், வகுப்பின் வெளியே நிற்கும் தண்டனையையும் பெற்றார்.

ஆரம்ப காலத்தில், அவரது அன்றாட மற்றும் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. நீண்ட தூரம் நடந்து வாளியில் தண்ணீர் பிடித்து அதனைப் பெரிய பாத்திரத்திற்கு மாற்றுவார். சீக்கிரமே எழுந்து தனது வீட்டு வேலைகள் அனைத்தையும் சுயமாகச் செய்தார். தனது சகோதரி கொடுக்கும் ஐந்து காசைக்கொண்டு அவர் விரும்பிய உணவை வாங்க இயலாது. திரு. சந்திரன் ஒழுங்காகப் பள்ளிச் சீருடையை அணியா விட்டால், வகுப்பின் வெளியே நிற்கும் தண்டனையையும் பெற்றார்.

img1

"தோல்வி எனக்கு ஒரு திருப்புமுனையானது, அதுவே வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது."

திரு. சந்திரன் அந்தஸ்தில் உயர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதற்குத் தன்னைத் தானே மேம்படுத்திக் கொள்வதுதான் வழி என்றுணர்ந்தார். தனது அன்றாட மற்றும் நீட்டிப்பு வேலை நேரத்தையும் முடித்த பிறகு, குளித்துவிட்டு, சிங்கப்பூர்த் தொழிற்கல்வி நிலையத்தில் இரவு நேர வகுப்புகளுக்குச் செல்வார். தொழிற்சங்கவாதி மற்றும் முன்னாள் அதிபருமான தேவன் நாயரால் தொடங்கப்பட்ட இரவு நேர வகுப்பு (அன்று ‘லெம்பாகா’ என்று பிரபலமாக அழைக்கப்பட்டது), திரு சந்திரன் போன்ற உற்சாகமுள்ளவர்களுக்கு ஒரு வரனாக அமைந்தது.

இவரது அன்றாடப் பயணத்திற்கு உண்மையாக உழைத்தது இவரது மிதிவண்டியாகும். அதுவே அவரைத் தாம்சன் சாலையிலிருக்கும் வேலை இடம் மற்றும் பலேஸ்டியர் சாலையில் அமைந்திருக்கும் தொழிற்கல்வி நிலையத்திற்கும் கொண்டு சென்றது. திரு. சந்திரன் தமது மூத்த அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களிடமிருந்து முழு ஆதரவைப் பெறவில்லை என்றாலும் அவற்றைச் சமாளிக்க வேண்டியிருந்தது. 1970களில் இருந்த நிர்வாகமும் அரசாங்கமும் கல்வியைத் தொடரும் ஊழியர்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை.

அவரது ஆரம்ப நாட்சம்பளமான $4.45சைச் சேமித்து வைத்துப் படித்தார். மெதுவாகப் பணியில் உயர்ந்தார். தன்னை மேம்படுத்திக் கொள்ளும் அவரது பெருமுயற்சி மற்றும் திறன்கள் அவருக்குப் படிப்படியான பதவி உயர்வை அளித்தன. அவர் முதன்மை தொழில்நுட்ப அதிகாரியாகப் பதவி ஓய்வுப் பெற்றார்.

img1

"PUB சரித்திரத்தில் முதன்முறையாக நாட்சம்பள ஊழியர் வேலையில் சேர்ந்து நான்கே மாததில் பதவி உயர்வு பெற்றார்."

திரு. சந்திரன் எவ்வாறு ஒரு சாதாரன உறுப்பினராக இருந்து படிப்படியாக முன்னேறி PUB ஊழியர் சங்கத்தின் தலைவரானார் என்பதை அறியும்போது பிரமிக்கச் செய்கிறது.

சங்கம் பகுதி நேரமாக இருப்பினும், தினசரி பணிக்குப் பிறகு செய்யப்பட்டது. அன்றைய காலக்கட்டத்தில் மூத்த அதிகாரிகளுக்குத் தான் பதவி உயர்வு என்றிருந்தது. ஆனால், திரு. சந்திரன் சங்கத்திற்குத் தனது முழு உழைப்பையும் கொடுத்ததால், அது அடையாளங் காணப்பட்டு அவருக்குப் பதவி உயர்வை அளித்தது. சங்கம் அளித்த பல்வேறு பயிற்சிகளுக்குச் சென்றதால், சமரசப் பேசுக்கானத் திறன்களை வளர்த்துக் கொள்வது துக்கத்தைக் கையாளுவது ஊழியர் பிரச்சனைகள் போன்றவற்றைக் கையாளுவதற்கான திறன்களைக் கற்றார்.

அவரது மிகப் பெரிய சாதனை, டிப்பிலோ பெற்றிராத தொழிநுட்ப அதிகாரிகளின் வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்கு இருந்த தடங்கல்களை அகற்றினார். திரு. சந்திரன் டிப்பிலோமாவுக்கு அதிக தரம் இருப்பினும், வேலை அனுபவம் தான் வேலையிடத்தில் மிக அரிது மற்றும் வேலையிலிருந்து கிடைக்கும் பயிற்சி வழி நன்மை புறக்கணிக்கப்படக் கூடாது என்ற எண்ணத்தை வலியுறுத்தினார்.

திரு. சந்திரன் பிரிட்டீஷாரால் நடைமுறையில் இருந்த ஊழியர் சங்கத்தின் நாட்சம்பள ஒழுங்கமைப்பு முறைகளை மாற்றினார். அந்தப் பழைய முறையில், அந்தந்த நாளுக்குத் தேவைப்பட்ட ஊழியர்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டது. வேலைக்கு அழைக்கப்படாதவர்கள் சம்பளம் பெறவில்லை. திரு. சந்திரன் இதனை மாற்ற முற்பட்டார். அனைவரும் மாதச் சம்பளம் பெறும் ஒரு புதிய முறையை நிறைவேற்றினார்.

அவர் புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம், தங்களது பணியின் பால் கட்டுப்படுத்தப்பட்ட அதிகாரிகள் தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டு பதவி உயர்வையும் பெறலாம். இதனால், அதிகக் கல்வி பெற்றிராதவர்கள் மீண்டும் கல்வி பயிலவும் பதவி உயர்வுப் பெறவும் வாய்ப்பு அளித்தது. திரு. சந்திரன் $1500 சம்பளம் பெற்ற ஒருவர் சான்றிதழ் பெற்றப் பிறகு $5000 சம்பளத்தைப் பெறலாம் என்றதை ஓர் உதாரணமாகக் கூறினார்.

மேலும், சமரசப் பேச்சின் வழி வெப்பம் மற்றும் இரைச்சல் ஆகிய பிரச்சனைகளை எதிர்நோக்கும் மின் நிலைய ஊழியர்களுக்குப் பண உதவி கிடைக்கச் செய்தார். மூன்று நேர வேலையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் தினசரி வாழ்க்கை முறையில் அவர்கள் எதிர்கொள்ளும் மாற்றம், தடங்கல் மற்றும் பிரச்சனைகள் ஆகியவற்றைச் சரியான முறையில் ஈடுகட்டப்பட்டன என்பதை உறுதி செய்தார்.

"அனைவரும் இறச்சி உண்ணும்போது நீ மட்டும் எலும்பு உண்ணுகிறாயா?"

தொழிற் சங்கத்தில் அவரது வேலை அயராமல் தொடர்ந்தது. திரு. சந்திரன் இந்திய சமூகத்தினருக்கு வேறு வழியில் அதிகமாகச் செய்ய நினைத்தார். இந்திய சிறார்கள் பள்ளியில் குறிப்பாக ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் பின்தங்குவதைக் கண்டார். உடனே தன்னைப்போல் சிந்திக்கும் இந்தியர்களை இணையம் வழி தொடர்புக்கொண்டு இச்சூழ்நிலைக்குத் தீர்வுக் கண்டார்.

தொழிற் சங்கவாதி கந்தசாமி இவரைப் போன்றே எண்ணம் கொண்டதனால், திரு. சந்திரனுடன் இணைந்து இந்தியப் பேரவைச் சங்கத்துடன் பணியாற்றினார். சமூகத்தின் தீரமிக்கவர்களான கோபால்(வீடமைப்பு வளர்ச்சிக் கழகம்), இளங்கோவன் (PUB), பாலசுப்பிரமணியம் (சிங்கப்பூர் அஞ்சலகச் சேவை), டாக்டர் வீரமணி (கல்விக் கழகம்) போன்றோர் இணைந்து தீவிர ஆலோசனைக்குப் பிறகு, இளையர்களுக்குப் பொருத்தமுள்ள துணைப்பாட வகுப்புகளைத் தொடக்கினர். ஆனால், வெறும் துணைப்பாட வகுப்புகளைத் தொடக்குவதோடு அல்லாமல் அதன் வெற்றியையும் உறுதி செய்ய வேண்டியதாயிற்று.

திரு. சந்திரனின் பிள்ளைகளும் சனிக்கிழமைகளில் இந்தத் துணைப்பாட வகுப்புகளில் பயின்றனர். அவர்களும் அவ்வகுப்புகள் நன்மையளிக்கின்றன என்று கூறினர். அவரது மகன் மிகச் சிறப்பான முறையில் தேர்ச்சிப் பெற்றதால் வெகுமதி பெற்றார். அவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் 4A பெற்று பிரதமரின் புத்தகப் பரிசினை டாக்டர் டோனி டானிடமிருந்து பெற்றார்.

"பள்ளிக்கூடங்களில் தமிழ் வகுப்புகள் குறைக்கப் பட்டது வருத்தத்தை அளித்தது."

அவர் தனக்காக மட்டும் உழைக்கவில்லை, தனது பிள்ளைகளுக்காகவும் உழைத்தார். இது அவர் சொன்ன சொற்களின் சான்றாகும். அதன்வழி அவர்கள் நல்லதோர் வாழ்க்கையை வாழ்ந்திடுவர். தம் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கைப் பற்றியும் மற்றும் அவர்கள் துன்பப்படக் கூடாது என்ற அவரது தொடர் சிந்தனையும் தான் அவரைக் கடினமாக உழைக்க வைத்ததாம்.

திரு. சந்திரன், அடக்கமுள்ள தொடக்கத்தைக் கொண்டபோதிலும் எல்லோரையும் சமமாக நடத்துவதுடன் யாரையும் தாழ்வாகப் பார்க்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தினார். “நன்கொடை வழங்குவது நம் வீட்டிலிருந்து தொடங்குகிறது,” என்பதை மிகவும் வலியுறுத்துகிறார். சமூக காரியங்களில் ஈடுபட்டு மற்றவர்களுக்கு உதவுவது முக்கியம் என்றாலும் ஒருவர் தம் குடும்பத்திற்கு முதலில் உதவ வேண்டும். இந்தக் குறிக்கோளின் படி வாழ்ந்து தற்போது தனது பணியிலிருந்து ஓய்வு பெற்று, மற்றவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.

அவர் நமக்கு வழங்கும் முடிவுரைக் கருத்து, நாம் அனைவரும் அர்த்தமுள்ள வாழ்க்கையை நம் இறுதி மூச்சுள்ளவரை வாழ வேண்டும் என்பதாகும். இதுவே வாழ்க்கைக்கு அழகு சேர்க்கிறது.

img1

இந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.

50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.