அன்புடைய ஒருவர் மறைந்ததாக கற்பனை செய்வோம். அடையும் துக்கம் ஒருபுறமிருக்க, அந்த அன்பானவர் அமைதி உறைவிடத்துக்கு செல்லும் இறுதி ஊர்வலத்துக்காக பல சடங்குகளையும் சம்பிரதாயங்களையும், ஓர் இந்து, முறையாய் செய்ய வேண்டியுள்ளது. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அன்புடனும், கண்ணியத்துடனும் மரியாதையுடனும் செய்யவேண்டும். அந்த சடங்குகள் நம் பலருக்கு தெளிவாக தெரியாது. துக்கம் கண்ட குடும்பங்களுக்கு இந்தச் சடங்குகளை, திருமதி வாசுகி செய்கிறார்-- ஒரு பிரபலமற்ற தொழில் என்றாலும், தேவையான ஒன்று. இறந்தோரை குளிப்பாட்டுவதும், அவர்களுக்கு புதிய ஆடை அணிகலன்களை அணிவிப்பதுமென தொழிலாய், எழுபது வயது திருமதி வாசுகி கடந்த 20 ஆண்டுகளாக செய்துவருகிறார். செய்யப்படும் சடங்குமுறைகளைக் கூறி, அந்த வேதனைதரும் நேரத்தில், துக்கம் அனுசரிக்கும் குடும்பங்களுக்கு, வழியும் காட்டுகிறார். திருமதி வாசுகி, அவரின் வழக்கத்திற்கு மாறாக புது விசயங்களைச் செய்ய முயன்றுள்ளார். அவரின் முதல் தொழிலும் கூட ஒரு சவாலாக இருந்தது. அதை எதிர்கொண்டு மீண்டிருக்கிறார். |
|
“நீங்க எந்த வேலை கொடுத்தாலும் செய்வேண்.” |
இந்து ஈமச்சடங்களில் ஆர்வங்கொண்டு, திருமதி வாசுகி தம் உறவினர் இறக்கும் காலக்கட்டங்களில் உதவுவார். இந்த தனித்தன்மையான துறையில், அவருக்குள்ள அனுபவறிவுபற்றிய பேச்சு, மளமளவென சமூகத்தில் பரவியது. மக்கள் அவரின் சேவையை நாட தொடங்கினர். அடுத்த 5 ஆண்டுகளுக்கு, சுறுசுறுப்பாய் விருப்பமுடன் சேவையாற்றினார். பல குடும்பங்களுக்கு வாழ்கையின் கடினமான நிலையைக் கடக்க உதவினார். இவற்றையல்லாம் தண்ணலமின்றி செய்தார். நாளுக்கு நாள் அவரின் சேவைகளின் தேவை அதிகரித்தது. நீண்டநேரம் நின்றுகொண்டும், எதிர்பாராத நேரங்களிலும், நடுஇரவிலும்கூட பணிகளைச் செய்யவேண்டும். குடும்பம் அவரின் உடல்நலம் கண்டு கவலைகொண்டது. ஆனாலும் சேவையின் வேண்டுகோள்களை ஏற்றுச்செய்வதை நிறுத்த, திருமதி வாசுகியால் முடியவில்லை. |
|
“என்ன பெரிய வேலை - பிணம் குலிப்பாட்ற வேலைத்தானே!” |
திருமதி வாசுகியின் தொழிலைபற்றி மக்கள் அறிந்ததும், அடிக்கடி அவரிடம் கேட்கப்படும் கேள்வி, "பிணம் சம்பந்தமாய் ஈடுபடுவதால் பயப்படுவதில்லையா?" ஆனால் அதைபற்றி அவர் பொருட்படுத்திக்கொள்வதில்லை. (இறந்தவர்) குடும்பத்தினர் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதுடன், மற்றவரின் துக்கப்பாதிப்புக்கு ஆளாகமல், சடங்குகளை முறையாய் செய்வார் திருமதி வாசுகி, . மேலும், அவர் பேய்களையும், ஆவிகளையும் நம்பாதவர். தேவையற்ற ஆன்மாக்களிடமிருந்து தாம் விலகியிருக்க, வீடு திரும்பியதும் தான் குளித்துவிடுவதும், சிவபெருமானுக்கு பூசிப்பதும் என, ஒவ்வொரு முறையும் வழக்கப்படுத்திக் கொண்டார். ஆனால், தற்கொலை செய்துகொண்ட ஓர் இளம்பெண் இறப்பைச் சந்தித்தப் பிறகு, இதுவும் முடியாமல் போனது. |
|
“அன்றுதான் ஆவியுடன் பெசமுடியும் என்று அறிந்தேன்.” |
இறப்பு மட்டுமல்ல, மற்ற இந்து சடங்குகளான பிறப்பு சம்பந்தப்பட்ட சம்பிரதாயங்களுக்கும் ஆலோசனையும் உதவியும் திருமதி வாசுகி வழங்குகிறார். திருமதி வாசுகி 70 வயதிலும் ஆற்றல் நிறைந்தவராய், மகிழ்ச்சி நிறைந்தவராய், நல்லெண்ணம் பரப்பும் ஒரு சுவாரசியமானவராய் திகழ்கிறார். தனியாய் இருந்து எந்த உதவியும் இல்லாது, சுயமாய் வீட்டை பார்த்துகொள்கிறார். தன்னையும் பார்த்துகொள்கிறார். திருமதி வாசுகி வெறுமனெ இருந்து ஓய்வெடுப்பவர் இல்லை. அவர் செய்யவிருக்கும் 'அண்டா' பட்டியலின்படி உடற்பயிற்சியோடு தொடங்குவார். உடற்பயிற்சி செய்து, உடல்நலம் பேண அருகில் இருக்கும் சமூக நிலையத்தில் சேர்ந்திருக்கிறார். சிறுவயதிலிருந்தே ஆங்கிலமொழி கற்கவேண்டும் என்ற எண்ணத்தினல், அந்த ஆசையைப் பூர்த்தியாக்கும் விதமாக ஆங்கில வகுப்புகளுக்கும் பதிந்திருக்கிறார். இது வரை, TV8 நாடகங்களில் நடித்த அனுபவம் வைத்திருக்கும் அவர், பட்டியலின்படி நடித்தல் வேண்டும். எதிர்காலத்தில் நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் வருமென எதிர்பார்க்கிறார். இறப்பும் துக்கமும் என தினந்தோறும் எதிர்கொண்டாலும், அவர் செய்யும் எல்லாவற்றிலும் மேல்நோக்கானதாக ஒன்றை வைத்துவிட்டு, செயல்புரிகிறார். |
|
“துக்கதிலும் சிரிக்க்னும் துனிவுடனே நடக்க்ணும்!” |
சிங்கப்பூரராக இருப்பதில் எவ்வளவு பெருமிதம் கொண்டிருக்கிறார் என்பதைப் பகிர்ந்துகொண்டு, தம் நோர்காணலை முடித்தார். முன்னாள் பிரதமர் திரு லீ குவான் யூ அவர்களின் ஈடுபாடு பற்றியும் , அவரின் பங்களிப்பு பற்றியும் புகழ்கிறார்.சிங்கப்பூர் போல உலகில் வேறிடம் இல்லை என திடமாக நம்புகிறார். அடுத்த ஆண்டின் 50ஆவது தேசியதின கொண்டாட்டத்திற்காக ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கிறார். |