கோபால் விவேகாம்பால்

கவலை இல்லாமல் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக களிக்க வேண்டிய பருவம் இளமை காலம். ஆனால் 16 வயதிலேயே திருமதி கோபால் விவேகாம்பாலின் உலகம் தலைகீழாக திரும்பியது. 1963யில் தனது தந்தை இறந்ததும், 10 சகோதரர்களில் மூத்தவரான விவேகாம்பால் படிப்பை நிறுத்தி விட்டு குடும்ப பொறுப்பை ஏற்கும் நிர்பந்தம் ஏற்பட்டது.

விவேகாம்பால் அதி காலை முதல் இரவு 10 மணி வரை 2 வேலைகள் செய்வதுடன் வீட்டை கவனித்துக்கொள்ளும் தன் தாயார் மற்றும் தன் சகோதரர்களின் தேவைகளை கவனித்துக் கொண்டார். வெகு விரைவாக வளர்ந்த அவரை, அவர் சகோதரர்களை மருத்துவ சிகிழ்ச்சைக்கு அழைத்து சென்ற போது அவர் தான் அவர்களின் தாயார் என தவறாக எண்ணினர்.

சிறு வயதிலேயே அவர் அனுபவித்த கடும் வாழ்க்கை முறை அவரிடம் சீரிய கட்டுப்பாட்டையும் பொறுப்புணர்ச்சியையும் வளர்த்தது. திருமணத்திற்கு பிறகும் தனது கணவரின் ஆதரவுடனும் புரிந்துணர்வுடனும் தனது பிள்ளைகளுடன் தன் சகோதரர்களையும் தாயாரையும் தொடர்ந்து பராமரித்து வந்தார்.

தன் சகோதரர்களுக்கு திருமணம் செய்து தன் கடமைகளை நிறைவு செய்த பின் சமுதாயத்திற்கு தன் பங்கினை செய்ய முடிவெடுத்து பல தொண்டூழியங்களிலும் சமூக சேவைகளிலும் ஈடுப்பட்டார்.

img1

“பதின்ம வயதை நான் அனுபவிக்கவில்லை. மற்றவர்கள் அழகிய ஆடை உடுத்தி சந்தோஷமாகச் செல்வதை பார்த்துள்ளேன். நான் அவற்றை பெறவில்லை.”

திருமதி கோபால் சரியான நேரத்தில் தன் பக்கத்து வீட்டுக்காரருக்கு உதவி செய்து அவரின் உயிரை காப்பாற்றியது தான் அவரின் முதல் அனுபவம். அதை தொடர்ந்து பல வழிகளில் சமூக சேவைகள் செய்ய தொடங்கினார்.

நேரத்தை நிறுவகிப்பதில் அவருக்கு இருந்த நம்பிக்கை, தொடர்ந்து கற்று தன்னை மேம்படித்திக்கோள்ளும் முயற்சி, மலாய். ஹொக்கியன், மண்டரின் மொழிகளில் பேசும் ஆற்றல் ஆகியவை அவர் சமூக சேவை பணிகளை சிறப்பாக செய்ய துணைபுரிந்தன.

திருமதி கோபால் வெளிநாடுகளிலும் சமூக சேவை செய்துள்ளார். பல நாடுகளுக்கு உடைகள் அனுப்பியுள்ளார். இந்திய கிராமங்களில் ஏழைகளுக்கு உதவுகிறார். ஏழை பிள்ளைகளுக்கு கல்வி உதவி செய்வதுடன், பள்ளி சீருடை, காலணிகளை பராமரித்து அனுப்பி வைக்கிறார். எழை கிராமவாசிகளின் அடிப்படை தேவைகளுக்கு உதவி வருகிறார்.

அருகில் இருந்த கோவிலில் தொடங்கிய அவரின் சமூக சேவை, சமூக மன்றங்களுக்கு பரவி பெருமளவில் பலனளித்தது.

img3

“சமூக மன்றம் சம்மந்தமான காரியங்களில் நான் பெரும் பொருப்பெடுத்துக்கோள்வேன்.”

img2

முதியோர்களின் தேவைகளையும், கவலைகளையும் புரிந்து கொண்டிருப்பதால், தற்சமயம் திருமதி கோபாலின் சமூக சேவைகள் பெரும்பாலும் அவர்களை குறித்தே இருக்கிறது. தனது சொல் வன்மையினாலும், சன்மானங்களும் பரிசுகளும் தந்தும் அவர்களை தான் ஏற்பாடு செய்யும் நிகழ்வுகளில் பங்கெடுக்க தூண்டுகிறார்.

உடற்பயிற்சிகளும் உடல் உரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளையும் திருமதி கோபால் முதியவர்களுக்கு அதிகமாக ஏற்பாடு செய்கிறார். சமூக மன்ற தலைவராக இருக்கும் அவரின் கணவர், தங்கள் வீடமைப்பு வட்டாரத்தில் முதியவர்கள் எளிதில் எட்டும் படியாக பல உடற்பயிற்சி நிலையங்களை கட்ட தூண்டுவதின் மூலம் திருமதி கோபாலுக்கு உதவுகிறார்.

“தொடர் நாடகம் பார்ப்பதால் சிலர் அவர்களை பிற்பகல் 3 மணிக்கு மேல் அழைக்க வேண்டாம் என்பார்கள்.”

அவருக்கு மிகுந்த திருப்தி அளிப்பது ஒரு அசாதாரணமான சேவை - வறியவர்கள் உறவினர்களின் இறுதி காரியங்களில் உதவுவது. தன் தந்தையின் மறணத்தால் அனுபவித்த மனக்கஷ்டங்கள் திருமதி கோபால் இந்த அசாதாரணமான சேவையை மேற்கொள்ள காரணம்.

பிணவறையில் இருந்து உடலை பெற தேவையான பத்திர வேலைகளை செய்வது முதல் இறுதி காரியங்களை செய்யும் நிறுவனங்களை நியமிப்பது வரை செய்வதுடன், இறந்தவர் பெண்ணாக இருந்தால் திருமதி கோபால் தானே முன்னின்று உடலை குளுப்பட்டுவதற்க்கும் உதவி செய்வார். இவாறு இறந்த பெண்ணை குளுப்பட்டுவதற்க்கும் முதலில் உதவிசெய்த போது அவருக்கு 18 வயது. அதன் பின் பல முறை இந்த சேவையை மேற்கொண்டதால் காலப்போக்கில் தனது பயத்தையும் தயக்கத்தையும் வென்றார். இப்போது சிங்கப்பூர் இந்து சபை வழங்கும் செவையில் ஒரு பகுதியாக இதை செய்கிறார்.

இறந்தவர்கள் தக்க மரியாதைக்கு உரியவர்கள் என்றும், அவர்களின் இறுதி சடங்குகள் அவர்கள் முறைப்படி செய்யப்பட வேண்டும் என்றும் திருமதி கோபால் எண்ணுகிறார். இவர் தயக்கம் இன்றி தானே முன்வந்து இந்த சேவைகளை செய்வதை பார்த்த மற்றவர்கள் இந்த சடங்குகளுக்கு உதவ அழைக்கும் போது முன்வருவதாக கூறுகிறார்.

img3

“என் தந்தை இறந்தபோது, நான் அநாதை போல் தனித்து நின்றேன். மற்றவர்களுக்கு இந்த நிலை ஏற்படக்கூடாது.”

திருமதி கோபால் தான் மட்டும் சமூக சேவையில் ஈடுபடாமல் தன் குடும்பத்தையும் ஈடுபடுத்தியுள்ளார். தன் கணவரும் மகனும் சமூக மன்றத்திலும் குடியிருப்பாளர் குழுவிலும் பதவி ஏற்றுள்ளனர். அவர் மகள் சமூக மன்றத்தில் துணைப்பாடம் கற்பிக்கிறார். அவர் குடும்பத்தினரும் வறியவர்கள் உறவினர்களின் இறுதி காரியங்களில் உதவுகிறார்கள்.

மலேசியாவில் பிறந்திருந்தாலும் சிங்கப்பூரையே தன் இல்லமாகவும் எல்லா இனத்தை சேர்ந்த அனைவரும் பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் சிங்கை50தை கொண்டாட வேன்டும் எனவும் கருதுகிறார். மற்றவர்களுக்கு உதவி செய்தும், இசை நடனம் போன்றவற்றில் இடுப்படுவதன் மூலம் தன் வாழ்வை வளப்படித்தியும் இளமையில் தான் இழந்த காலத்தை அவர் இப்போது மிகுந்த பரபரப்புடன் மீட்டு வருகிறார். 68 வயதிலும் சிங்கே (Chingay) விழா 2015தில் பங்கெடுக்கிறார்.

திருமதி கோபாலின் ஊக்கம் தரும் கதையை சித்தரிப்பதில் 50முகங்கள் பெருமை கொள்கிறது.

img3

 

இந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.

50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.