திரு நாகராஜன் தனது கொள்கையில்மிகுந்த ஈடுபாடு கொண்டவர். சிறு வயதில் கருணாநிதியின் (பின்னாளில் தமிழாக முதல்வரானவர்) மேடை பேச்சை கெட்டு, அவரின் எளிய தோற்றத்தை கண்டு கவரப்பட்டு தன் வாழ்க்கை பாதையை அமைத்து கொள்ள தூண்டப்பட்டார். தொடர்ந்து பல மடை பேச்சுக்களை கேட்க்க சென்றார். ஜாதி வித்தியாசமின்றி அனைவர்க்கும் சமுத்துவம் மிக்க சமுதாயத்தை உருவாக்கும் நோக்கம் கொண்ட சுய மரியாதை இயக்கத்திற்கு அறிமுகபடுத்தப்பட்டார், சமூக ஆர்வலர் ஈ வி ராமசாமி (பெரியார்) அவர்களால் தூண்டப்பட்ட இந்த இயக்கம், அனைவரும் தனது உண்மையான முன்னேற்றத்திரற்கு பொறுப்பேற்று கொள்ள சுய மரியாதையை வளர்த்து கொள்ள ஊக்குவித்தது. அன்றும் இன்றும் இந்தியாவில் மற்றுமின்றி சிங்கப்பூரிலும் இந்த இயக்கம் பிரபலமாக திகழ திரு நாகராஜன் பொன்ற தனிமனிதர்கள் முக்கிய பங்காற்றினர். சிங்கப்பூரிக்கு வந்து நாளடைவில் சிங்கப்பூர் திராவிடர் கழகத்தில் உறுப்பினராகி, மேலான்மை குழு வேலைகள் மூலமாகவும் பொது கூட்டங்களில் பேசியும் கழக நடவடிக்கைகளில் பங்காற்றினார். இந்தியாவில் திராவிடர் கழகத்தில் இருந்து திராவிடர் முனேற்ற கழகம் பிறிந்த பின் அதன் சிங்கப்பூர் கிளையின் நடவடிக்கைகளை ஏற்ப்பாடு செய்வதில் அதிக ஈடுபடு காட்டினார் திரு நாகராஜன். இந்த புது இயக்கம் சிங்கப்பூர் இளைஞர்கள் மத்தியில் மிக பிரபலமடைந்து பலரும் உறுப்பினர்களாக சேர்ந்தனர். சிங்கப்பூர் கிளை பெரும்பாலும் சமூக குழுவாக இருந்த போதும், தமிழ் நாட்டின் அரசியல் கட்சியின் பெயரை கொண்டதால் சட்ட பிரச்சனைகள் இருந்தன. இதனால் இயக்கம் சில பெயர் மாற்றங்களை கண்டது. திமுக எனும் புனை பெயரை தக்க வைத்துக் கொள்ள திராவிடர் முற்போக்கு கழகம் என்று ஆரம்பித்து இறுதியில் சி ந அண்ணாதுரை (அண்ணா) முன்மொழிந்த சிங்கப்பூர் தமிழர் கழகம் என்ற பெயரில் நிலைத்தது. |
|
“அந்த பேச்சு என்னை சுய மரியாதை மிக்க நபர் ஆக்கியது.” |
கழகத்தின் பெயர் மாறினாலும் சமுகத்திற்கு உதவ வேண்டும் என்ற நோக்கம் மாறவில்லை. கழகத்தின் மூலம் திரு நாகராஜனும் அவர் குழுவினரும் தொடர்ந்ந்து நிதி சேகரிப்பதுடன் இந்தியர்கள் சிங்கப்பூர் குடியுரிமை பெறவும் உதவினர். இதன் பொருட்டு கோ சாரங்கபாணி ஆற்றிய பங்கை சிறப்பு மேற்கோள் காட்டினார். அவருடன் பணியாற்றியதை பெரும் பாக்கியம்மாக கருதுகிறார் திரு நாகராஜன். சாரங்கபாணி குடும்பங்களை நேரில் சந்திந்த்து அவர்களின் சந்தேகங்களை தெளிவு செய்து, மனுக்களை பூர்த்தி செய்யவும் உதவி செய்வார். இந்த அனுபவம் திரு நாகராஜனுக்கு மிகுந்த திருப்தி அளித்தது. தன் சக குடியிருப்பாளர்களுக்கு உதவியதில் பெறு மழிச்சி அடைந்தார். தமிழ் சிங்கப்பூரின் நான்கு தேசிய மொழிகளில் ஒன்றாக அங்கிகரிக்க பட எடுக்க பட்ட முயற்ச்சிகள் இவர் மேற்கோள் காட்டிய மற்றொன்று. இந்த விஷயத்தில் அவருக்கு இருந்த ஈடுபாட்டை நினைவுகூர்ந்த அவர், இதில் சாரங்கபாணி பெரும் பங்காற்றியதாக கூறினார். சிங்கப்பூரில் ஜாதி வேற்றுமைகளை களையும் முயர்ச்சியிலும் சாரங்கபாணி பெரும் பங்காற்றியதாக கூறினார். திரு நாகராஜனுக்கு திருப்தி அளிக்கும் மற்றொரு விஷயம் சிங்கப்பூர் இந்திய குழுக்களிடையில் உள்ள ஒற்றுமை. ஆனால் அன்று வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் அதிகம் கலக்க மாட்டார்கள். இதை மனதில் கொண்டு, இன்றைய ஒற்றுமையை சாமானியமாக எடுத்து கோள்ள வேண்டாம் என்று சிங்கப்பூரர்களுக்கு திரு நாகராஜன் நினைவுபடுத்துகிறார். மேலும் எந்த பிளவுகளும் மீண்டும் ஏற்படாமல் இருக்க நமது கடந்த காலத்தை இளைஞர்களுக்கு ஞாபகம் படுத்துவது முக்கியம் என்கிறார். |
|
“தமிழர்கள் பலர் சிங்கப்பூரர்களாக இங்கு வாழ்வதற்கு இவர் முக்கிய காரணம்.” |
சுதந்திரத்தின் ஆரம்ப காலத்தில் சிங்கப்பூர் மின்சார வாரியத்தில் வேலை செய்த திரு நாகராஜன், நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று மின்சாரமும் நிலையான நீர் வசதியும் பல குடியிருப்பாளர்களுக்கும் கிடைக்க உதவினார். தன் வேலை காரணமாக நாட்டின் பல பகுதிகளையும் அவர் அறிந்திருந்தார். நம்மில் பலருக்கும் 50 ஆண்டுகளுக்கு முன் இதை நினைத்து கூட பார்க்கமுடியாது. மரின் பரெட் , வெஸ்ட் கோஸ்ட், ஜூரோங் போன்ற இடங்கள் சிங்கப்பூருடன் இணைக்க படாத தனி தீவுகளாக இருந்த போது இவ்விடங்களில் வேலை செய்தார். அதிக அலைகளுக்கிடையே படகில் இவ்விடங்களுக்கு செல்வார். இவ்விடங்கள் சிங்கபூருடன் லாவகமாக இணைக்கப்பட்டு ஒரே தீவாக விளங்க்குவதை பார்ப்பது திரு நாகராஜன் போன்ற முன்னோடிகளுக்கு ஒரு அற்புதமாகவே இருக்கும். பரபரப்பான வாழ்க்கைமுறையினால் ஒரு நாளுக்கு 4 மணி நேரம் பயணம் செய்ய வேண்டுமென்றாலும் திரு நாகராஜன் பாசிர் பஞ்சாங் சமூக மன்றத்தின் மூலம் சமூக பணியில் ஈடுபட்டார்; காற்பந்து போட்டிகள், இசை, நடன போட்டிகள், பொங்கல் கொண்டாட்டங்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்துள்ளார். அப்போது நிதி திரட்டவும், அனுமதி பாத்திரங்களோடு வீட்டுக்கு வீடு சென்று நன்கொடை திரட்டவும் உதவி செய்த அக்கால நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஒத்மான் வோக்-கிற்கு தன் மனமார்ந்த நன்றியை திரு நாகராஜன் தெரிவித்து கொள்கிறார். |
|
"47 ஆண்டுகளுக்கு முன் நமது நாடு வித்தியாசமாக இருந்தது. அதை பார்த்தாலோ கேட்டாலோ பலரும் அதிர்ச்சியடைவர்.” |
சுதந்திர தினமான ஆகஸ்ட் 9ஆம் தேதி அன்று திரு லீ குவான் யூ தனது உரையை நிகழ்த்தும் பொது மற்றவரைப் போல் தனக்கும் ஐய உணர்வு இருந்ததை திரு நாகராஜன் நினைவுகூர்ந்தார். குறைவான வளங்கள் இருப்பினும், அதை தனக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்டு சிங்கப்பூர் இன்று அடைந்துள்ள நிலை பெருமைக்குரியது. இந்த பெருமை யாதும், திரு லீ தலைமை தாங்கிய நம் முன்னோடி தலைமுறையினரையே சாரும். சிங்கப்பூரில் உயர் கல்வியை அறிமுகம் செய்வதோடு, அனைத்து வயதினருக்கும் கல்வி வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பதும், இன நல்லிணக்கத்தை இளமை பருவத்திலேயே கற்றுக்கொடுப்பதும் திரு லீயின் சாதனைகளுல் சில. அவர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் சிங்கப்பூரின் புகழை பரப்பி, நம் நாட்டிற்கு வியாபார வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்ததற்கு நாம் அனைவரும் நன்றி கூற வேண்டும். |
|
"பள்ளி பிள்ளைகள் இன வேற்றுமைகளை உணர்வதில்லை. ஒரே குடும்பத்தை சேர்த்தவர்கள் போல ஒருவரை ஒருவர் அனைத்துக் கொள்வர் விளையாடுவர்.” |
அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டும், நாம் அடைந்துள்ள வளர்ச்சியை எண்ணி பெருமிதப்பட்டும் சிங்கபூரர்கள் தங்கள் பிணைப்பை வளர்த்து கொள்வர் என்று திரு நாகராஜன் நம்பிக்கை கொள்கிறார். நமது இளைய தலைமுறையிடம் காணப்படும் இது தொடர்ந்து நமது பாரம்பரியமாகவே அடுத்த தலைமுறைகளிலும் நிலைக்க வேண்டும் என விரும்புகிறேன். எவ்வளவு வெற்றி அடைந்தாலும் சிங்கப்பூர் கர்வம் கொள்வதோ மெத்தனம் அடைவதோ இல்லை, மாறாக பிற நாடுகளுடன் தன் உறவை மேம்படுத்தவே சிங்கப்பூர் முயல்கின்றது என்றும் இதுவே நமது ஒளிமயமான எதிகாலத்தை உறுதி படுத்தும் என்றும் திரு நாகராஜன் சுட்டி காட்டினார். |
|
"நாம் பெற்ற தூற்றுதல்களை முன்னிட்டு நமது அரசாங்கமும் தலைவர்களும் முயற்ச்சியை கை விட்டுருந்தால் சிங்கப்பூரின் நிலையை நினைத்துப் பார்க்க இயலாது.” |