கமலா கிருஷ்ணன்

திருமதி கமலாவைப் பற்றி விவரிக்க வேண்டுமானால் கடமை தவறாதவர், உணர்ச்சிகரமானவர், தன்னலமற்றவர் என்று கூறலாம். ஆனால் உண்மையிலேயே அவர் அதற்கும் மேல் சிறந்த குணங்கள் படைத்தவர்.

30 வருடங்களாக வங்கியில் வேலை புரிந்து வந்த திருமதி கமலா தமது குடும்ப தொழிலில் சேர்ந்து உதவினார். ஆனால் அவர் நிதி திரட்டுவதில் தனது கவனத்தை செலுத்த விரும்பவில்லை. அவரால் இயன்றவரை சமூகத்திற்க்கு தனது பங்கையாற்ற விரும்பினார். அன்று முதல், திருமதி கமலா பற்பல குடும்பங்களுக்கும், இளம் பிள்ளைகளுக்கும் முன்னால் கைதிகளுக்கும் உதவியிருக்கிறார். தனது சொந்த குடும்பத்துடன் நெருக்கமான உறவை கொண்ட அதே சமயம் அவர் இவர்களுக்கு உதவி வந்தார்.

ஒவ்வொரு வாரம் சந்திக்கும் பாசமான கூடுமா சூழலில் வளர்ந்த திருமதி கமளவிற்கு நெருக்கமான குடும்பமும் வலுவான குடும்ப உறவுகளும் எவளவு முக்கியம் என்பது நன்றாகவே தெரியும். தனது பெற்றோர்களும் தனது பாட்டியும் குடும்பத்தின் மீது அதிக்க அக்கறை கொண்டவர்களாக இருந்தனர். அதுமட்டுமின்றி அவர்களை தாம் ஒரு முன் மாதிரியாக பார்த்தார் என்றும் திருமதி கமலா நினைவுகூறுகிறார். வேலை செய்யும் தாயாக இருந்தாலும், அவர் சோர்வை பொறுட்படுத்தாமல் தமது பிள்ளைகளுடன் அதிக்க நேரம் செலவிடுவார். கஷ்டமாக இருந்தாலும் அது தனது பிள்ளைகளின் நன்மைக்கே என்று நம்புகிறார் திருமதி கமலா.

இன்று, திருமதி கமலா பல்வேறு சமூக குழுக்களில் சுறுசுறுப்புடன் தமது பணியை ஆற்றி வருகிறார். தாம் தொண்டூழியம் புரிவதற்க்கு எந்தத் தனி காரணமும் இல்லை. ஆனால் எனக்கு மற்றவர்களுக்கு உதவி அளித்து மகிழ்விப்பதில் சந்தோஷம் என்கிறார் திருமதி கமலா.

"அன்பும் அரவணைப்பும் வேண்டும் என்று நினைப்பது மனித இயல்பாகும்."

மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற ஆசையும் தனது திறங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற ஆசையும் இருந்ததால் தான் திருமதி கமலா 58 வயதில்கூட ஆலோசனை வழங்கும் துறையில் தமது பட்டதைப் பெற்றார்.

தனது பட்டத்தை முடிப்பதற்க்கு முன்பே திருமதி கமலா சிறையில் இருக்கும் கைதிகளுக்கும் சிறையிலிருந்து விடுப்பட்ட கைதிகளுக்கும் உதவ ஆரம்பித்துவிட்டார். இந்து மையம் ஒன்றை சேர்ந்து அவர்கள் மூலமாக சிறைக்குச் சென்று கைதிகளுக்கு இந்து மதத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டார். திருமதி கமலா அவர்களுடன் ஆலோசகராக பழகவில்லை சக நண்பராக பழகினார். அவர்கள் சிறையிலிருந்து விடுப்ட்ட பின்பும் அவர்களுக்கு தொடர்ந்து அறிவுரை கூறி அவர்களுடன் செய்திகள் பகிர்ந்துக்கொள்வார்.

தாம் உதவி அளிக்கும் பெரும்பாலோருக்கு அடிக்கடி ஊக்கமும் ஆதரவும் தேவைப்பட்டது என்று திரு கமலா என்கிறார். பலரது பெற்றோர்களும் நண்பர்களும் அவர்களை விட்டு விலகினார், நம்பிக்கை இழந்தனர். ஆயினும் தங்களது வாழ்க்கைகளை மீண்டும் சரியான பாதையில் திசை திருப்ப திருமதி கமலாதான் ஆதரவு அளித்து வந்தார். அவர்கள் அனைவரும் வெவ்வேறு வகைகளில் அறிவாளிகள் என்றும் அவர்கள் தங்களது பிரச்சனைகளை எதிர்நோக்குவதற்குச் சிறிதளவு ஆதரவும் ஊக்கமும் தேவை என்றும் நம்புகிறார் திருமதி கமலா. முன்னால் கைதி ஒருவரை சிறையில் இருக்கும் கைதிகளிடம் பேச ஏற்பாடு செய்திருந்த ஒரு சம்பவத்தை நினைவு கூறுகிறார் அவர். தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துக்கொண்டு அவர்களுக்கு ஊக்கமளிக்க அது நல்ல ஒரு சந்தர்ப்பமாக இருந்தது. இதுப் போன்ற சம்பவங்கள் திருமதி கமலாவின் மனத்திலும் நினைவிலும் ஆழமான ஓர் இடத்தைப் பிடித்துள்ளது.

"நான் அவர்களுக்கு உதவியதைவிட அவர்கள் எனக்கு பெரும் உதவி அளித்தனர்."

சிலர் தொண்டூழியம் புரிபவர்கள் அதிகமாக உணர்ச்சி வசப்பட நேரிடும் என்ற தவறான எண்ணம் கொண்டிருக்கலாம். இவற்றைப் பொருட்படுத்தாமல் திருமதி கமலா உறுதியாகவும் ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட்டு தனது வேலையில் எதிர்நோக்கும் சவால்களை சமாளித்தார். எல்லோரும் ஏதாவது ஒரு சமயத்தில் பிரச்சினைகளை எதிர்நோக்குவார் என்று நன்கு அறிந்துக்கொண்டு அதை ஏற்றுக்கொண்டு முன்னோக்கி செல்லும் தன்மை படாததவர் திருமதி கமலா. அவரை ஆதரிக்கும் தனது குடும்பத்தை எண்ணி பெரும் மகிழ்ச்சி கொள்கிறார். அதனால் அவர் பிறருக்கு உதவும் அதே வேலையில் தமது அன்பான குடும்பத்தையும் கவானித்துக் கொள்கிறார்.

அன்பும் அக்கறையும் தேவைப்படும் அனைவருக்கும் திருமதி கமலா எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் முன்வந்து உதவுவார். அவர்கள் கைதிகளாக இருந்தாலும் சரி வித்தியாசமான வாழ்க்கையை வழிநடத்த விரும்பும் ஒருவராக இருந்தாலும் சரி நான் அவர்களுக்கு உதவி ஆதரவு அளிப்பேன் என்று உறுதியாக இருக்கிறார் திருமதி கமலா.

"அன்பிருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று நான் என்றைக்கும் நம்பிக்கை கொண்டிருப்பேன்."

திருமதி கமலவைப் பற்றிய சிறப்பு என்னவென்றால் அவர் தாம் வாழ்ந்த வாழ்க்கையையும் தாம் வாழ்கின்ற வாழ்க்கையயும் எண்ணி எப்பொழுதும் திருப்தி அதையும் ஒருவர். தனது வாழ்க்கையில் அவருக்கு கிடைத்த அனைத்தையும் எண்ணி சந்தோஷம் அடையும் ஒருவர். வாழ்க்கையில் எங்களுக்கு என்ன கிடைக்கிறதோ அதை குறைசொல்லாமல் ஏற்றுக்கொண்டு சந்தோஷப்பட வேண்டியது முக்கியம் என்று எடுத்துரைக்கிறார் திருமதி கமலா.

பெரிய அளவில் சமூகத்திற்கு உதவ வேண்டிய அவசியம் இல்லை, சிறு சிறு அளவிலும் கூட சமூகத்திற்கு நமது பங்கையாற்றி பிறரது வாழ்வை மேம்படுத்த முடியும் என்பதற்கு திருமதி கமலா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. நாம் முன் மாதிரியாக கொள்ளும் ஒரு முக்கிய நபர் திருமதி கமலா ஆவார். மிகவும் முக்கியமாக, திருமதி கமலா எந்த வயதிலும்கூட நாம் சமுதாயத்திற்கு நமது பங்கையாற்றி ஆதரவு அளிக்க முடியும் என நம்புகிறார். 50 முகங்கள் அவரது கடமை உணர்வையும் அவரது பரிவு நிறைந்த உள்ளதையும் கண்டு பெருமை கொள்கிறது. திருமதி கமலா நிச்சயம் அனைவருக்கும் சிறந்த ஒரு முன்மாதிரியாக திகழ்வார் என்று 50 முகங்கள் நம்புகிறது.

இந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.

50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.