இவர் சிங்கப்பூரர் அல்ல. இருப்பினும், திரு உத்தம் கிருபளானி நிச்சயமாகச் சிங்கப்பூருடன் நன்கு இணைந்துள்ளார். மேலும், ஒரு மதிப்புமிக்கப் பங்களிப்பாளராவார். 50முகங்கள் சமீபத்தில் அவரைச் சந்தித்து, அவரது வாழ்க்கை மற்றும் அவர் புரிந்துள்ள பற்பல சாதனைகள் பற்றியும் கண்டறிந்தது. பாசமிக்க திரு உத்தம், தமது பெற்றோரினால் வாழ்க்கையை விரைவாகவே தொடங்கிவிட்டார். இதற்குக் காரணம், அவரது பெற்றோர் சமூகச் சேவையில் அதிகம் ஈடுபட்டிருந்தனர். ஆகையால், இவரையும் அவர்களது பற்பல நடவடிக்கைகளுக்குக் குறிப்பாகச் சிறுவர்களைச் சார்ந்த சேவைகளுக்கு உடன் அழைத்துச் செல்வர். ஆரம்பக் காலம் முதலே, திரு உத்தம் சமூகச் சேவைக் குறித்த பாதையில் நீண்ட தூரம் பயணித்துள்ளார். அவற்றில் குறிப்பாக அவர் மனதில் நிற்பது, ரோட்டரி மன்ற ஏற்பாட்டில் சிங்கப்பூர் முழுவதும் உள்ள ஊனமுற்ற குழந்தைகளுக்கு விமானச் சேவையை ஏற்பாடு செய்ததாகும். இன்றைய விமானச் சேவையில் இத்துணிச்சல் மிக்க செயல் சாத்தியமாகாது. அன்றே இதைச் சாதிப்பது சுலபமற்றதாக இருந்தது. இருப்பினும் இச்செயலைச் சாதிக்கத் தேவையான இதர வேலைகளின் விரிவான விவரங்களையும் சேகரித்தார். குழந்தைகளிடத்தில் கொண்டு வரப்படும் இன்பமே அவரது மிகப் பெரிய சாதனையாகும். மேடுகள் இருப்பினும் பள்ளங்களே அதிகம். திரு உத்தம் மிகச் சோகம் நிறைந்த அனுபவத்தைப் பகிர்ந்தார். ‘அசிசி ஹோஸ்பிஸ்’ மருத்துவமனைக்குச் சென்றிருந்தபோது, ஒரு குழுந்தையோடு ஒரு வாரத்திற்கு விளையாடினார். மறுவாரமே அக்குழந்தை நோய்க்குப் பலியானாள். திரு உத்தம் தொடந்து புக்கிட் தீமா இயற்கை வளத்திற்கும் ஹௌ ஃபர் வில்லா மற்றும் ஆர்ச்சட் சாலையில் கிறிஸ்துமஸ் ஒளியூட்டு நிகழ்ச்சி போன்றவற்றைக் காணும் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்துவருகிறார். இக்குழந்தைகளுடன் நேரம் களிப்பதும் கலந்துரையாடுவதுமே முக்கிய விஷயமாகும். இது பல பள்ளிகளில் உள்ள கலந்துரையாடல் குழுக்களின் உருவாக்கமாக இருந்தது. இதனைக் குறித்து மூத்த ரோட்டரி உறுப்பினர்களால், அதாவது திரு உத்தம் போன்றவர்களால் சமூகச் சேவையின் இளைய ரோட்டரி மன்ற கிளையினருக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. |
|
“சமூகச் சேவை என்பது மனதிலிருந்து வருவதாகும், வற்புறுத்தலால் அல்ல.” |
மிகச் சிறந்த முன்னுதாரணமான திரு உத்தம், சமூகச் சேவை உணர்வையும் நினைப்பதை நடத்தி முடிக்கும் துணிவுமிக்க தீர்மானத்தையும் பெற்றுள்ளார். இந்தியாவில் தேசிய காப்புறுதி நிறுவனத்துடன் தொடங்கிய திரு உத்தம், சிங்கப்பூரில் வேலைகளை நிறுவ இங்கு அனுப்பப்பட்டார். அதனை வெற்றிகரமாக முடித்தபின், திரு உத்தம் தமது சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார், ‘தி கேலக்ஸி இன்சூரன்ஸ் கொன்சால்டன்ஸ்’ என்பதாகும். அடுத்த சில ஆண்டுகளுக்குச் சிரமம் ஏற்பட்டாலும், தாம் செய்வதைச் சரியாகச் செய்ய வேண்டும் என்பதில் உறுதியான நம்பிக்கைக் கொண்டிருந்தார். இவரது இந்நம்பிக்கை, வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் எட்டக்கூடியது. குறிப்பாக, ரோட்டரி மன்றத்தின் எல்லா கூட்டங்களுக்கும் இவரது நூறு விழுக்காடு வருகைப் பதிவே இவருக்குப் பெருமை சேர்க்கிறது. திரு உத்தம் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி பலருக்கும் பலவிதங்களில் உதவியுள்ளார். ‘குரோன்ஸ் அண்ட் கொலிஸ்டிக்ஸ் சொசாயட்டி’ நிறுவனத்தின் அடித்தள உறுப்பினர்களில் ஒருவரான திரு உத்தம், நோயாளிகளுக்கு உதவும் குழுவின் ஓர் அங்கமாவார். இக்குழு விந்தையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலன் மற்றும் பண ரீதியாகவும் உதவுகிறது. இதில் குறிப்பாக, ‘குரோன்’ நோயாளிகளுக்குத் தேவைப்படும் விலையுயர்ந்த ‘மோடியுலன்’ என்ற உணவுப் பத்தியத்தை இலவசமாகப் பெற ஆதரவு வழங்குவதாகும். மனநோய் செயற்குழுவின் துணைத் தலைவரான திரு உத்தம், இதையே ஒரு மேடையாகப் பயன்படுத்தி இத்திட்டத்தின் பின்னால் செயல்படுபவர்களோடு, மாற்றங்களை நிகழ்த்த ஊக்கமூட்டினார். மாற்றங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இவரது முயற்சிக்கு நன்றி. இவை, ஏற்கனவே நிலவும் நோய்களுக்குத் தேசிய சுகாதார காப்புறுதித் திட்டம், ‘மெடிஷீல் லைவ்’ ஆகியவை மாற்றம் செய்யப்பட்டு சேர்க்கப்படும். திரு உத்தம், தொண்டூழிய நலன் அமைப்புகளுக்குக் குறிப்பிட்ட மருத்துவமனை நிகழ்வை அமைத்துள்ளார். இதன்வழி காப்புறுதி திட்டம் எல்லாருக்கும் நியாயமானதாக அமைய வழிவகுத்தார். திரு உத்தம் சிங்கப்பூர் இந்திய கல்வி அமைப்புக்குக் கேலக்ஸி கல்வி அமைப்பின் நிதி திட்டத்தின் மூலம், தமது பங்கை ஆற்றுகிறார். மேலும், எல்லா நலன் விரும்பிகள் மற்றும் நண்பர்கள் ஆகியோரிடம் இந்நிறுவனத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் பூக்கள் மற்றும் பரிசுப் பொருள்களைத் தவிர்த்து நிதி உதவி வழங்குமாறு விண்ணப்பம் விடுத்துள்ளார். |
|
“எவ்வளவு அளிக்கிறாயோ, அவ்வளவும் சமூகச் சேவை வழி பெறுவாய்” |
அறநிறவனங்களோடு துடிப்புடன் செயல்படுவதோடு, திரு உத்தம் விளையாட்டு, கலாச்சாரம் மற்றும் இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வதோடு அவற்றில் பங்கேற்கவும் செய்கிறார். திரு உத்தம் லண்டனில் பகுதி நேர கல்வியோடு தமது தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை நாடிச் சென்றபோதும் கூட, இலக்கியத்திலும் செக்ஸ்பியர் இயக்கத்திலும் ஈடுபட நேரத்தை வகுத்தார். இதைத் திரு உத்தம் தமது வேலைப் பருவத்திலும் தொடர்ந்துள்ளார். இவர் இலக்கிய வகுப்புகளையும் நடன நிகழ்ச்சிகளையும் விழாக்களைச் சித்தரிக்கும் கண்காட்சிகளையும் சிக்லாப் சமூக மன்றத்தின் இந்திய நற்பணிச் செயற்குழுவின் ஏற்பாட்டில் பல இன வழிபாட்டுத் தளங்களுக்குப் பயணிப்பதையும் ஏற்பாடு செய்துள்ளார். இத்தனை நடவடிக்கைகளில் ஈடுபட இவர் எவ்வாறு தமது நேரத்தைச் சமாளிக்கிறார் என்று வினவப்பட்டது. அதற்குத் திரு உத்தம், நேர நிர்வாகமே காரணமாகும் என்றார். |
|
“அவர்கள் இங்கே குடியேற விரும்பினால், நம் நாட்டினரோடு கலந்திடுவது மிக முக்கியமாகும்.” |
சிங்கப்பூரின் ஐம்பதாம் ஆண்டுக் கொண்டாட்டங்களுக்குத் திரு உத்தம் தமது மனம் நிறைந்த வாழ்த்துகளைச் சிங்கப்பூரர்களுக்குத் தெரிவித்தார். ஆரம்பத்திலிருந்தே சிங்கப்பூரின் மறைந்துள்ள திறன், தாம் இந்நாட்டிலேயே தங்கிடும் முடிவை எடுக்க உதவியது. தொண்டூழியத்திற்கு நிறைய செய்யலாம், வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறு ஆர்வம் இருப்பதால், மாணவர்கள் துடிப்புடன் பல கலந்துரையாடல் மன்றங்களில் சேர்ந்திருப்பது ஊக்கமூட்டுகிறது என்றார். |
|
“எனது இந்திய நிறவனத்திடம், சிங்கப்பூரினுள் பிரவேசிக்கக் கூடாது என்று நினைக்க வேண்டாம்.” |