ஆ கண்ணன்

இவ்வேலையில் இருப்பதன் மூலம் உலகைப் பார்ப்பது உறுதி, அதோடு நணபர்கள் வட்டத்தைப் பெருக்கவும் இளமையாகத் தோன்றவும் உதவும் வேலையும் இது-ஆமாம் அனைவரும் பணிபுரிய விரும்பும் ஒரு கனவு வேலை இது. கண்ணன் தன் வாழ்நாள் முழுக்க இவ்வேலையில் பணிபுரிந்து வந்துள்ளார்.

ஆறுமுகம் கண்ணன் ஒரு தீவிர விளையாட்டு வீரர். தன் வாழ்நாள் முழுவதும் அவர் விளையாட்டுகளில் ஈடுபட்டு வந்துள்ளார். ஒரு விளையாட்டு வீரராக இருப்பதைத் தவிர்த்து, அவர் சிங்கப்பூர் விளையாட்டு சங்கத்திலும் கடந்த நாற்பது வருடங்களாகப் பணிபுரிந்து வருகிறார். முதலில் ஒரு உதவியாளராக இருந்து பின்னர் விளையாட்டு பொருள்களைப் பராமரிக்கும் ஒரு குழுவின் தலைவராகப் படிப்படியாக முன்னேறியவர் அவர். அறுபத்து ஐந்து வயதிலும் கட்டுகோப்பாக இருக்கும் இவர், கடந்த பத்து வருடங்களில் ஒரு நாள் கூட உடல் நலக்குறைவினால் விடுப்பு எடுத்ததில்லையாம்.

“முதல் பக்கத்தில் என் படம் வந்தது. இதையெல்லாம் மறக்கமுடியாது!”

அக்காலக்கட்டத்தை விளையாட்டுகளின் பொற்காலம் எனலாம், குறிப்பாக சிங்கப்பூரிலிருந்த இந்திய விளையாட்டாளர்களுக்கு. அறுபது, எழுபதுகளின் இறுதியில், உள்ளூர் விளையாட்டுத் துறையை இந்தியர்கள் நன்கு பிரதிநிதித்தனர். குமரவேல், சிவலிங்கம், செல்வராஜா, சந்திரசேகரன் மற்றும் பிரகாஷ் போன்ற அவர் காலத்து சக விளையாட்டாளர்களின் பெயர்களை வரிசையாகப் பட்டியலிட்டார்கண்ணன்.

சர்வதேச அளவி்ல் போட்டியிடச் சென்ற சி.குணாளன், பி.சி.சுப்பையா போன்றவர்களின் ரசிகர்களை எவராலும் மறக்க முடியாது. கண்ணன் 1969-ல் நடைப்பெற்ற தென்கிழக்கு ஆசிய தீபகற்ப விளையாட்டுகளில், ஐம்பது கிலோமீ்ட்டர் நடைப் போட்டியில் சாதனை புரிந்தவர். அச்சாதனையை இன்றுவரை எவரும் முறியடிக்கவில்லை. கண்ணனும் அவர் காலத்தைச் சேர்ந்த விளையாட்டாளர்களும் விளையாட்டுகளில் ஈடுபடுவதைப் பெருமையாகவும், கௌரவமாகவும் எண்ணியவர்கள். அதற்கும் மேலாக விளையாட்டுகளின் மீதிருந்தஅளவு கடந்த நேசத்தினால்அவர்கள் அவற்றில் ஈடுபட்டனர். ஆனால் இன்று விளையாட்டு துறையும், போட்டியிட வேண்டும் என்ற தன்முனைப்பின் அளவும் மாற்றங்களைக் கண்டுள்ளன.

"முன்பு விளையாட்டில் வருமானம் இல்லை ஆனால் சந்தோஷமாக அதில் ஈடுபட்டோம்."

கண்ணன் தனது வாழ்க்கையின் தற்போதைய விளையாட்டு கட்டத்தை எண்ணி மிகவும் உற்சாகம் அடைகிறார். தற்சமயம் அவர் முப்பத்து ஐந்து வயதிற்கும் மேற்பட்டவர்கள் போட்டியிடும் முதுநிலை போட்டியில் பங்குபெறுவதற்கான பயிற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். உண்மையாக சொல்லப்போனால் இப்போட்டியின் போது ஜப்பானில் நடைபெறவிருக்கும் முதுநிலை போட்டிக்காகத் தயார் செய்து கொண்டிருந்தார் அவர்.இது போன்ற போட்டிகளுக்குப் பயணம் செய்வது, போட்டியிடுவது, போன்ற கண்ணன் விரும்பி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்பளித்தாலும், முதுகலை போட்டிகள் அங்கிகரிக்கப்பட சில காலம் பிடித்ததுஎன்றே கூற வேண்டும்.

"விளையாட்டு என்னுடைய மூச்சு. இதனால் நிறைய வெளியூருக்குப் போயிருக்கேன். நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள்."

திருமணமாகி, இரண்டு மகன்களுக்கு தந்தையாக திகழும் கண்ணன், குடும்பத்தின் உறுதுணையால்தான் விளையாட்டு துறையில் இன்றுவரையிலும் நீடித்து வருவதாக கூறுகிறார். பல வாரயிறுதி நாட்கள் மட்டுமின்றி வெளிநாட்டுப் போட்டிகளின்போது மேலும் பல நாட்கள் குடும்பத்தைவிட்டு பிரிந்திருக்க நேரிடும். ஆனால், இந்த பயணங்களின்போது இவர் மனைவி இவருடன் பலமுறை துணையாகச் செல்வார். பாலாவின் நண்பர்களுடன் இவர் கொண்டுள்ள நட்பின் மூலம் பாலா போன்றோர் எப்படி தங்களது முழு மூச்சையும் ஆத்மாவையும் தங்களது விருப்பப்பட்ட துறையில் செலுத்தி சிங்கப்பூருக்கு பெருமையை சேர்க்கிறார்கள் என்பதை இவரால் புரிந்துக்கொள்ள முடிந்தது.

இந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.

50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.