ஆறுமுகம் விஜியரத்தினம்

"நாங்கள் எப்பொழுதும் வெற்றி அடைவதற்காகவே விளையாடுவோம். தோல்வி அடைய விரும்பமாட்டோம். ஆனால் தோற்கும்போதெல்லாம் எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி முன் செல்வோம்."

இதைப் மிகப் பெரிய விளையாட்டு சாதனைப் படைத்த டாக்டர் விஜியரத்தினம் பகிர்ந்துக்கொண்டார். இவர் உலகலாவிய போட்டிகளில் சிங்கப்பூரை நான்கு முறை பிரதிநிதித்த ஒரே சிங்கப்பூர் ஆவார். இவர் படைத்த இந்தச் சாதனை சிங்கப்பூர் சாதனைப் புத்தகங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது.

டாக்டர் விஜியரத்தினம் விளையாட்டுகளில் மட்டும் முதன்மை படைத்தவர் அல்ல. சிங்கப்பூரின் முதல் பொறியாளர், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் முதல் சார்பு அதிபர், இங்கிலாந்தின் கட்டமைப்புப் பொறியாளர்கள் நிறுவனத்தின் முதல் ஆசிய துணை தலைவர், முதல் சிங்கப்பூர் அரசாங்கத்தின் அறிஞர் என்ற பெருமைகளும் இவரை சேரும். இவர் படிப்போடு விளையாட்டுக்கும் சம முக்கியத்துவம் கொடுத்து முன்னேறலாம் என்று நிரூபித்துள்ளார்.

94 வயதாகிய டாக்டர் விஜி, தன்னால் முடிந்தவரை மிகுந்த சந்தோஷத்துடனும் பெருமையுடனும் நினைவுக்கூர்ந்து தனது கடந்த காலத்தைப் பற்றி கூறினார். இவர் படைத்தது பெரும் சாதனைகள். இருப்பினும், இவர் தனக்கு அளிக்கப்பட்ட சந்தர்ப்பங்களைத் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சிங்கபூருக்கு பெருமையை தேடி தந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

      

img1
                       img1

திரு விஜி தேசிய அளவில் காற்பந்து, ஹாக்கி, ரக்பி மற்றும் கிரிக்கெட் விளையாட்டுகளில் விளையாடினார். தனக்கு எந்த விளையாட்டு பிடிக்கும் என்று கேட்டப்போது அவரது உடனடியான பதில் காற்பந்து. காற்பந்து மட்டும் தான் இன்று வரை சிங்கபூரர்களிடையே அதிக்க நாட்டத்தைப் பிடித்துள்ளது.

தனது சிறிய வயதில், எங்கெல்லாம் விளையாடுவதற்கு இடம் இருக்கிறதோ அங்கெல்லாம் அவர் தனது நண்பர்களுடன் காற்பந்து விளையாடுவார். காற்பந்து விளையாடுவதற்கு ஒரு மலிவான விளையாட்டாக இருந்தது - ஒரு பந்தும் சில திறமையான விளையாடளர்களும் தான் தேவை. அது மட்டுமல்லாமல், அப்போது துணைப் பாட வகுப்புகள் இல்லை, பள்ளி முடிந்து விளையாடுவதற்கு நிறைய நேரம் இருந்தது. காற்பந்து போட்டிகளில் விளையாடும்போது, ரக்பி பயிற்சியாளர் அவரைத் தேர்தெடுத்து ரக்பியில் சேர்த்தார். KL தொழில்நுட்ப கல்லூரியில் படிக்கும்போது இவர் காற்பந்து விளையாடி பல போட்டிகளில் வெற்றி வாகை சூடினார். அங்கு அவர் கிரிக்கெட் விளையாட கற்றுக்கொண்டு சிங்கப்பூர் திரும்பிய பின்னரும் தொடர்ந்து விளையாடி வந்தார்.

வெளியூரில் படித்து 1955-ஆம் ஆண்டு சிங்கப்பூர் திரும்பியதும், தொடையில் தசை காயத்தினால் அவர் மீண்டும் ஹாக்கிக்குத் தனது கவனத்தைச் செலுத்தினார். அவர் செய்லோன் ஸ்போர்ட்ஸ் கிளப்பிற்கு விளையாடினார். ஒலிம்பிக் குழுவிற்கு அவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. விஜி மிக திறமையான போட்டியாளராக திகழ்ந்ததால் அவர் 1956-ஆம் ஆண்டு மெல்பர்ந் ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 35. இருப்பினும் அவர் தன்னை விட வயது குறைந்தவர்களைவிட சிறப்பாக விளையாடும் தகுதி பெற்றவர். மொத்தம் 28 கோல்‌கலில் விஜி 9 கோல்‌கலைப் புகுத்தினார்.

அவர் 1958-ஆம் ஆண்டு காற்பந்து, ரக்பி, கிரிக்கெட், ஹாக்கி ஆகிய எல்லா விளையாட்டுகளிலிருந்தும் ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்றபோதும் விளையாட்டுத் துறை அவரை மறக்கவில்லை. அவர் முதலாம் முன்னாள் தேசிய காற்பந்து வீரர்கள் சங்கத்தில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் தேசிய காற்பந்து வீரர்களுக்கு தொடர்ந்து விளையாடுவதற்கான வாய்ப்பை இந்தச் சங்கம் வழங்கி வந்தது. முன்னாள் மலேசிய மாட்டிரும் ஜர்மனி காற்பந்து வீரர்களுடனும் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.

இருந்தாலும், டாக்டர் விஜிக்கு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுத்ததைவிட பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. அது நிச்சயமாக அவருக்கு ஒரு தனி பெருமையை தேடி தந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

img1

"நாங்கள் தோற்க்க விரும்பியதில்லை. ஆனால் தோல்வி அடையும்போதுகூட அது நமக்கு ஒரு வித நம்பிக்கையை கொடுத்தது."

தாம் பொறியாளராகும் பாதையில் பல இன்னல்களை எதிர்நோக்கினாலும் டாக்டர் விஜி எளிதில் மனம் தளரவில்லை.

அவருக்கு ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தில் படிக்க இடம் கிடைத்திருந்தாலும், சேர வேண்டிய நேரத்தில் சேராத காரணத்தினால் அவர் விக்டோரீய பள்ளியில் படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 1940-ல் அவருக்கு KL தொழில்நுட்ப கல்லூரியில் பொறியியல் படிக்க அவருக்கு பொதுப்பணித் துறை (PWD) உதவிச்சம்பளம் அளித்தது. அப்போது சிங்கபூரில் பொறியியல் பள்ளி இல்லை. டிசம்பர் 1941-ல் ஜப்பானியர்கள் போர் விடுத்த போது பொதுப்பணித் துறையில் தம் பணியை ஆற்ற அவர் சிங்பூருக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் அவரால் ஜப்பானிய மொழி பேச முடியாததால் அவரைமீண்டும் மலேசியாவிற்கு அனுப்பினர். அவர் KL-க்கு திரும்பி 1944-ல் தனது படிப்பை முடித்து ஐம்பது மாணவர்களிடையே முதல் மாணவராக பட்டம் பெற்றார். ஆயினும் போர் முடிந்து பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் அவர்கள் போரின்போது பட்டம் பெற்றவர்களை அடையாளம் காண மறுத்துவிட்டது. அதனால் அவர் மறுபடியும் KL-க்கு சென்று பிரிட்டிஷ் படிப்பு ஒன்றை முடித்து சிங்கப்பூர் திரும்பினார். இருந்தாலும் கூட பிரிட்டிஷ்காரர்கள் அவரை அதிகாரத்துவ பொறியாளராக அடையாளம் காண மறுத்தனர். ஏனெனில் அந்த கால தேவைக்கேற்ப திரு.விஜி 1946-ல் லண்டன் தேர்வு ஒன்றை சொந்தமாக எழுதி 1948-ல் சிறப்பாக எழுதி முடித்தார். 1949-ல் பொதுப்பணித் துறை சிவில் பொறியியல் படிப்பதற்கு உதவிச்சம்பளம் ஒன்றை சிறப்பாக படிக்கும் இருவருக்கு வழங்கியது. அவர்களுள் ஒருவர் டாக்டர் விஜி. அவர் படிப்பிலும் விளையாட்டிலும், குறிப்பாக தேசிய கிரிக்கெட் விளையாத்தாளராக இருந்ததால் தான் அவரால் இந்த சிறந்த உதவிச்சம்பள விருதை பெற முடிந்தது. அதன் பின்னர் அவர் இங்கிலாந்துக்கு சென்று தனது மேற்படிப்பை தொடர்ந்தார்.

டாக்டர் விஜியரத்தினம் 1954-லிருந்து 1980-வரை சிங்கப்பூர் துறைமுக அதிகாரத்திலும் பொதுப்பணித் துறையிலும் பொறியாளராக தனது நீண்ட கால பணியை ஆற்றி வந்துள்ளார்.

img1

"அந்த காலத்தில் ஆசிய பொறியாளர்கள் இல்லாததால் நான் பொறியாளராக விரும்பினேன்."

வேலையாக இருந்தாலும் திரு.விஜி பற்பல பொது சேவைகளுக்கு தனது உதவியையும் பணியையும் ஆற்றி வந்தார்.

இந்து அரக்கட்டளை வாரியத்தில் உறுப்பினராக இருந்தபோது அவர் தனது பொறியியல் அனுபவத்தைக் கொண்டு சிவன் கோயிலை அர்ச்சர்டிலிருந்து கேலாங்கிற்க்கு மாற்றும் பணியில் அவரால் உதவ முடிந்தது. அக்கோவிலை கட்ட 4 வருடங்களானது. அந்த வேலைகளை நல்லபடியாக செய்து முடித்து பின்னர் அவர் ஓய்வு பெற்றார். தமிழ் முரசிலும் திரு.விஜி தலைவராக இருந்தார். அங்கு இருக்கும்போது அவர் பற்பல புதிய கருத்துக்களையும் மாற்றங்களையும் முன்வர வைத்து தமிழ் முரசு செய்திதாளின் வியாபாரத்தை 10-15% உயர்த்தினார்.

அவர் மதுபானம் உரிமம் ஆணையம், அறிவியல் சபை மற்றும் சிறுபான்மை உரிமைகள் சபை ஆகியவற்றில் உறுப்பினராக இருந்து வந்தார். பொறியாளர்கள் அமைப்பின் தலைவராகவும் டாக்டர் விஜி பொறுப்பேற்றார்.

டாக்டர் விஜி படைத்த சாதனைகள் அனைத்தையும் பற்றி எங்களால் விவரிக்க முடியாவிட்டாலும் அவரது கதை அனைவருக்கும் ஊக்கம் அளிக்கும் ஒன்றாக இருக்கும் என நம்புகிறோம்.

50 முகங்கள் டாக்டர் விஜியை சந்தித்து பேசியதில் பெருமை கொள்கிறது. நாங்கள் அவர் என்றும் நல்ல உடல் நலத்துடன் வாழ வாழ்த்துகிறோம்.

img1

இந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.

50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.